உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 26
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 26 · 26 / 47

ஓ! இரண்டு நடிப்பா? சரி - நாடகமே உலகம்!

(என்று உலகப்பனைப் பார்க்கிறான்.)

உலகப்பா - அழைத்துப் போ!

வாங்க, ராஜாதி ராஜரே வாங்க!

ஆகா - என் கருப்பு ரோஜாதி ரோஜரே போங்க.

(போகும்போது அவன், உலகப்பனைப் பார்த்து கண் சிமிட்ட இருவரும் ஒருவருக்கொருவர் புன்னகை புரிந்தபடி போகிறார்கள். மணிமாறனேதான், ‘மணிமகுட’ வியாபாரியாகவும், புதுமைப்பித்தனாகவும், இப்போது போலி அரசனாகவும் இருக்கிறான் என்பது உலகப்பனுக்குத் தெரியாதா என்ன?)

(வீதி ‘மணிமகுடம்’ ஏட்டை ஒருவன் கூவியபடி விற்கிறான். பலரும் வாங்குகிறார்கள், படிக்கிறார்கள், சூழ்ந்து நின்று!)

‘மணிமகுடம்’ ஆசிரியர் புதுமைப்பித்தன் - கொடிக்கால் நகரில் பொன்னழகன் அல்லி அறப்போராட்டம் - பொன்னழகனைக் கொல்ல முயற்சி - கொடிக்கால் நகரில் அரண்மனைக் குதிரைப் படைகள் நடத்திய கொடுமைகளைக் கேட்டு, அரசர் மணிமாறனே மனம் நொந்து போயிருக்கிறாராம் - குருநாதர் மந்திரி அரசர் மூவரிடையே கலகம் நடந்து கொண்டிருப்பதாக செய்தி உலவுகிறது. இன்னும் பல உண்மைகள் விரைவில் வெடிக்க இருக்கின்றன.

தலைநகரத்திலே மாபெரும் பொதுக்கூட்டம் - புதுமைப்பித்தன் நீண்ட சொற்பொழிவு - குருநாதருக்கும், ‘மக்கள் தொண்டன்’ பத்திரிகைக்கும் எதிராக லட்சோப லட்சம் மக்கள் எழுப்பிய முழக்கம், வானை எட்டியது! “மக்களாட்சி தேவை” என்று கடல் அலைபோல் ஒலி எழுப்பினர் - கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏமாற்றி வாழும் எத்தர்களுக்கு இனி வாழ்வில்லை!

வளமில்லை! நாட்டில் வேலையுமில்லை! எழுச்சியுற்ற மனிதன்தான் - இனி ஏறுநடை சிங்கந்தான் - கொழுத்து விட்ட உமிகள்தான் இனிக் குள்ளநரிக் கூட்டத்தார் - பழித்து விட்டான் பகுத்தறிவால்.

இனி, பக்தி - மதம் - கடவுள் எல்லாம் பாழ்! பாழ்! பாழ்!

(அப்போது அரசாங்க வீரர்கள் படிப்பவர்களை மிரட்டி அவர்களிடமுள்ள ஏடுகளைப் பிடுங்கி எறிதல் - ‘மணிமகுடம்’ விற்கும் மனிதனையும் கைது செய்கிறார்கள்.)

(அதே வீதியில் ‘மக்கள் தொண்டன்’ ஏடு விற்பவன் கூவுகிறான். அதை யாரும் வாங்கவில்லை - கடைசியாக, வியாபாரியே ஒரு பத்திரிகையை எடுத்து உரக்கப் படிக்கிறான்.)

“மக்கள் தொண்டன் ஆசிரியர் அரிஹரநாதர் - நாளைய தினம் சீமான்கள் சபை கூடுகிறது. கோயில் கட்டுவது பற்றி நேரிலேயே தனது சம்மதத்தைத் தெரிவிக்க, மணிமகுட மன்னர் மணிமாற மகாராஜா சீமான் சபைக்கு விஜயம் செய்யப் போகிறார். மன்னருக்கு உடல் நலமில்லாமல் இருந்தாலுங் கூட, நாளைய தினம் சபைக்கு வந்த பிறகு மகாராஜா நீண்ட நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு உடல் நிலையை சரி செய்து கொள்வார்!”

(செய்தி கேட்டவர்கள் வியப்படைதல்)

ஏய் ராஜாவே வர்றாரு; சபைக்கு நாளைக்குப் போகலாண்டா!

(சீமான்கள் சபை - பத்து சீமான்களும் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களும் தனியிடத்தில் கூடியிருக்கிறார்கள். குரு நாதர், அரிஹரநாதர், அமைச்சர் ஆகியோர் இருக்கிறார்கள்)

(எழுந்து) பெருமைக்குரிய, மணிமகுடத்தின் பிரதிநிதிகளே! பொதுமக்களே! இன்றைய தினம் அரசர் பெருமான் மணிமாற ராஜன் அவர்கள், நமதுசபைக்கு விஜயம் செய்கிறார் - சீமான்கள் சபைக்கும் அரசருக்கும் கோயில் கட்டுதல் சம்பந்தமாக ஏதோ மனவருத்தமிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்காகவே உடல்நிலை சரியில்லாமலிருந்துங் கூட அரசர் அவர்கள் சபைக்கு வர இசைந்துள்ளார்கள். ஆண்டவன் ஆணையாக, இந்த சீமான்கள் சபையிலே பிளவு ஏதுமில்லை.

அரசருக்கும், அதிகார பீடத்திற்கும் எந்தவிதமான அபிப்பிராய பேதமுமில்லை. ஒரே ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் நமது மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு சிறிது மூளைக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்திக்கு ஏற்பட்டுள்ள அந்த மூளை நோயையும், நமது சனாதன சக்கரவர்த்தி குருநாதர் அவர்கள் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். விரைவில் குணமாகிவிடும், குணமாக வேண்டும் என்று நாமெல்லாம், ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக!

இப்போது அரசர் வரும் நேரமாகி விட்டது. நான் இத்துடன் என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

(அரசனும் உலகப்பனும் வருகிறார்கள்)

மணி மகுடபதி - மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் - மணிமாற ராஜன் - வருகை! வருகை!

(அரசன் அங்கு வந்ததும், அனைவரும் எழுந்து வணங்குகிறார்கள். அரசன் கம்பீரத்தோடு அனைவரையும் பார்க்கிறான். அரச பீடத்தில் போய் அமருகிறான். சபையில் நிசப்தம் நிலவுகிறது. அரசன் எழுகிறான். சபையைப் பார்த்து பல் இளிக்கிறான். ‘அமைச்சரே’ என்று அழைக்கிறான்.)

அரசே! கொடிக்கால் நகரைப் பற்றிய தீர்மானம்...

கொடிக்கால்! கொடிக்கால்! கொடிக்கு கால் ஏதய்யா? கொடிக்காலாம் கொடிக்கால்! ஓ...! கொடிக்குக் கால் உண்டு! உண்டு! பெண்களைப் பூங்கொடி என்கிறார்கள். பெண்களுக்குக் கால் இருக்கிறது. ஆகையினாலே கொடிக்குக் கால் உண்டு. உம் சரி - அமைச்சரே! என்ன சொன்னீர்? கொடிக்காலை... என்ன செய்ய வேண்டும்?

காலி செய்ய வேண்டுமென்று...

அய்யோ! காலை காலி செய்து விட்டால், எப்படி நடப்பது? முடியாது முடியாது - நடக்க முடியாது... இப்படித்தான் நடக்க வேண்டும்.

(என்று நொண்டியைப் போல நடக்கிறான். அதைக் கண்டு சீமான்களும், மக்களும் பரிதாபப்படுகிறார்கள்.)

அமைச்சர் அவர்களே! அரசர் உடல்நல மில்லாமலிருப்பதால் அவரை அரண்மனைக்கு அழைத்துப்போவது நல்லது!

அரண்மனை! அரண் என்றால் கோட்டை - மனை என்றால் வீடு - கோட்டை வீடு! கோட்டை விடு! கோட்டை விடு!! எதைக் கோட்டை விடுவது?

அரசே! அரண்மனைக்குச் செல்லலாம்.

முடியாது - நான் ஆரண்யத்துக்குத்தான் செல்வேன் - நான் திரும்பி வர பதினாலு வருஷங்கள் பிடிக்கும் - அதுவரையில் இந்த நாட்டை என் கிரீடம் ஆளட்டும் - இந்தாரும் அமைச்சரே! இந்த கிரீடத்தின் மீது சிம்மாசனத்தை தூக்கி வைத்து, எனக்குப் பதிலாக நீர் ஆளும்; இல்லாவிட்டால் நெருப்பு ஆளட்டும்.

(என்று கிரீடத்தை அமைச்சர் கையில் கொடுக்கிறான் - பிறகு வெளியே போவது போல நடக்கிறான், பின் திரும்பி வந்து)

அடடே! அமைச்சரே! கிரீடத்தையா கொடுத்து விட்டேன்? இதை சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதே... பாபமாயிற்றே... சிம்மாசனம் அழுக்காகிவிடும்.. இதோ இதை சிம்மாசனத்தில் வையும்...

(என்று கிரீடத்தை வாங்கிக் கொண்டு தன் பாதரக்ஷைகளைக் கழற்றி, அமைச்சர் கையிலே கொடுக்கிறான். அவரும் அவைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்.)