உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 25
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 25 · 25 / 47

(என்று கூறியபடி, மணிமகுடப் பத்திரிகை வியாபாரியிடம் முன்னோக்கி நடக்கிறார்; அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறார்; அவன் மிரளுகிற அளவுக்கு, அங்குள்ளோர் அனைவரும் (வியப்படைகிற அளவுக்கு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அங்கு மாட்டப்பட்டுள்ள அரசனுடைய படத்தையும் பார்க்கிறார். படத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கிறார், திடீரென்று கூச்சலிடுகிறார்!)

அரசன் கிடைத்து விட்டான், அமைச்சரே - அரசன் கிடைத்து விட்டான்!

என்ன?

எங்கே? எங்கே? எங்க ராஜா எங்கே?

அமைச்சரே? அரசன், மேல் உலகம் செல்லப் போவதாக ஓலையில் எழுதியிருக்கிறான் அல்லவா? சபாஷ்! சபாஷ்! அப்படியானால் இதோ அரசன் கிடைத்து விட்டான்.. நம் மனம் போல் ஆட்டி வைக்க ஒரு மன்னன் கிடைத்து விட்டான்! (அவனைப் பார்த்து) ஏ! நாடோடிப் பயலே! நீ நாடாளுகிறாயா?

அப்படின்னா என்னங்க?

நாடு! நாடு - தேசத்தின் ராஜாவாக ஆகிறாயா என்றார்.

ராஜாவா? ஐயையோ! வேண்டாங்க.. ராஜாவாக இருந்தா ஆபத்துங்க...

என்னடா ஆபத்து! குணசீலரே!... நமது அரசனைப் போலவே இருக்கிறான் ஏறத்தாழ! ராஜ உடைகளைப் போட்டால், அரசனாகவே தோற்றமளிப்பான்! இதுமாதிரி ஒரு பொம்மை, மணிமகுடத்தின் கொலுவை அலங்கரிக்கட்டுமே! அரசன் வெளியேறினான் என்ற செய்தியையே மூடி விடலாம் அல்லவா!

ஆமாம் - சரியான யோசனை!

யாருக்கும் தோன்ற முடியாத யோசனை... இவனே தான் இனி ராஜா...

ஆகா! சுக்ரதிசை தான் - ஆளு பெரிய அதிர்ஷ்டசாலி!

நான் ராஜாவாக இருக்க மாட்டேங்க - என்னை விட்டுடுங்க... ராஜான்னா சண்டைக்கு போகணும் - ஜனங்களிட்ட கெட்ட பேரு வாங்கணும் - எந்நேரமும் வாளும் கையுமா நிக்கணும் - யாரு படையெடுப்பானோ, எவன் கோட்டையை வளைப்பானோ, அப்படின்னு பயந்து சாகணும்! வேண்டாங்க, அந்த உயிர் கொடுக்கிற வேலை! வேணும்னா நான் குருநாதரா இருக்கிறேன்.

குருநாதராகவா?

ஆமாங்க.. அதாங்க கஷ்டப்படாம புகழ் வாங்குகிற வேலை! கத்தி கபடா தூக்காம வாழலாம். யார் ஆண்டா என்ன; யார் செத்தானென்ன? நம்ப வாழ்க்கை சுகமாயிருக்கும்! அந்த வேலையே கொடுங்க!

டே முட்டாள்!.. சொல்வதைக் கேள்! நீ ராஜாவாகவே இரு!... ஒரு ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இதை மறுத்தாயானால் மரண தண்டனை கிடைக்கும் உனக்கு! இப்போது சொல்; நீ மறுத்து மரண தண்டனை அனுபவிக்கிறாயா? அல்லது, ஒப்புக் கொண்டு பலருக்கு மரண தண்டனை கொடுக்கிறாயா?

ஒப்புக் கொள்கிறேன் - ஆனால் நான் எல்லாருக்கும் மரண தண்டனை தர மாட்டேன். இந்த நாட்டிலே மூணே பேருக்குத் தான் மரண தண்டனை கொடுப்பேன்.

யாரப்பா அது?

அவங்க செத்துப் போய்ட்டாங்க! சொன்னா உங்களுக்குத் தெரியாது.

செத்துப் போனவுங்களுக்கு மரண தண்டனையா? சரிதான் - சரிதான்!

உஸ்! வீரன் ஒரு தடவைதான் சாவான் - கோழை பலமுறை சாவான்னு - இந்த ‘மணிமகுடம்’ பத்திரிகையிலே தான் நான் ஒரு தரம் படிச்சேன்!

(சொல்லிக் கொண்டே பல் இளிக்கிறான்.)

ஏய் இனிமேல் ‘மணிமகுடம்’ பத்திரிகையைப் பற்றி பேசக் கூடாது.

மணிமகுடம் நாட்டைப் பத்தியே பேசணும்! சரிங்க! ஆமாம் ஒண்ணு கேக்க மறந்துட்டேன் - நாடகம் எப்போது நடத்தப் போறீங்க.

நாடகமா?

நான் ராஜா வேஷம் போடணுமில்லே அது நாடகமில்லையா?

சரிதான் கொஞ்சம் பைத்தியங்கூட நமக்குச் சரியான ஆள்தான் ஏய்! நீ இங்கே நிரந்தர ராஜாவாக இருக்கணும் - எங்களைப் போல!

அப்படிங்களா? சரிசரி! இப்ப நிரந்தரமா மந்திரி வேஷம் போட்டிருக்கிறது யாரு? குருநாதரு வேஷம் போட்டிருக்கிறது யாரு?.. இவர் என்னா வேஷம்?

(அரிஹரநாதரைக் காட்டி.)

உலகப்பா! அவனைப் பேசவிடாதே! அவனை அரசனாக்க வேண்டியது உன் பொறுப்பு! பழையபடி நீயே! மெய்க்காப்பாளனாக இருக்க வேண்டும். இந்தப் புதிய அரசனுக்கு! பழைய அரசன் எப்படியெப்படி நடப்பானோ! எப்படி உட்காருவானோ, அப்படியெல்லாம் பழக்க வேண்டும். சீக்கிரம் - நாளைக்கே இவன் சீமான்கள் சபைக்கு வருவது போலத் தயார் பண்ணு!

ஆமாம் - சபையில் கையெழுத்துப் போட வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

ஆமாம் - என்ன செய்வது? (யோசித்து) சரி - அரசனுக்கு மூளைக் கோளாறாக இருக்கிறது - சபையோர் விருப்பத்தை முன்னிட்டு உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் அழைத்து வந்தோம். என்று கூறிவிடுவது! எப்படியோ; தற்காலிகமாகத் தப்பி விடலாமல்லவா? (அவனைப் பார்த்து) ஏ, நாடோடி! நீ நாளைக்கு சீமான் சபையில் மூளைக் கோளாறுள்ள அரசனைப் போலவே நடிக்க வேண்டும்.