உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 24
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 24 · 24 / 47

இந்த முடிவுக்குக் காரணம்?

அந்த ‘மணிமகுடம்’ பத்திரிகைதான்.

அய்யோ சீமான்கள் சபையிலும் நமக்கு எதிர்ப்பு ஏற்பட்டால் பிறகு சமாளிக்கவே முடியாதே!

கொடிக்கால் நகரத்திலே பொன்னழகன், அல்லி நடத்திய மறியலும், அங்கே அரசாங்கம் பெரிய அட்டூழியம் புரிந்ததாக, ‘மணிமகுடம்’ பத்திரிகையிலே வந்துள்ள செய்தியும் ஜனங்களிடம் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. இந்த சமயம் அரசனும் சீமான்கள் சபையும் நம் பக்கம் இல்லாவிட்டால் நமது பதவிகளுக்கு ஆபத்துதான்!

ஆமாம். சீமான்கள் சபைக்கு அரசன் எப்படியும் வந்தாக வேண்டும். தேவாலயத் தீர்மானத்தில் கையெழுத்திட்டாக வேண்டும் - அதற்கு அமைச்சர்தான் பொறுப்பாளி!

(அந்த சமயத்தில் பைத்தியக்காரன் போன்ற ஒரு மனிதனை இரண்டு காவலர்கள் உள்ளே இழுத்து வருகிறார்கள். அடித்தபடியே! அந்த மனிதனின் கையில் நூற்றுக்கணக்கான ‘மணிமகுடம்’ பத்திரிகைகள் இருக்கின்றன. இழுத்து வரப்படும் அவனை, அமைச்சர், குரு, அரிஹர நாதர் மூவரும் ஆச்சரியமுடன் பார்த்து)

யார் இவன்?

பிரபு! ‘மணிமகுடம்’ விற்றுக் கொண்டு போனான். தங்கள் உத்தரவுப்படி இவனைப் பிடித்து வந்தோம்.

சபாஷ்!.. குருநாதரே! ‘மணிமகுடம்’ எங்கெங்கே யார் யார் விற்கிறார்களோ, அவர்களையெல்லாம் கைது செய்ய ரகசிய உத்தரவு போட்டிருக்கிறேன். அப்படிக் கிடைத்தவர்களில் இவன் பத்தாவது ஆள்!

ஆளைப் பாருங்கள் - பைத்தியக்காரனைப் போல இருக்கிறான் (அவனிடம் வந்து) ஏய்.. இந்தப் பத்திரிகைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

துட்டு கிடைக்கும் விற்றால்! அவ்வளவுதான் சம்பந்தம்!

இதன் ஆசிரியர் புதுமைப்பித்தன் எங்கேயிருக்கிறான்.

தெரியாதுங்க. தெருவிலே படுத்திருந்தேன். திடீர்னு ஒருஆள் வந்தார் - இந்தப் பத்திரிகைகளை விற்று துட்டுகளை நீயே எடுத்துக்க - என்றார். விற்க வந்தேன் - வந்த சமயத்தில் இவர்கள் பிடித்துக் கொண்டார்கள் சாமி! என்னை விட்டுவிடுங்கள்! பிரபு! நான் போகட்டுமா?

சீ! எங்கேடா போகிறாய்? (கன்னத்தில் அறைகிறார். காவலனிடம்) ஏய் இவனைக் கைது செய்து பூட்டி வையுங்கள். இந்தப் பத்திரிகைகளுக்கு தீ வைக்கச் செய்யுங்கள்!

ஆமாம் - கண்ணுளிரப் பார்ப்போம்; இங்கேயே நடக்கட்டும்!

(காவலர் அவனிடமிருந்த பத்திரிகைகளை வாங்கி, கீழே போட்டு அவன் கையாலே தீ வைக்கச் சொல்லி, வற்புறுத்துகிறார்கள். அவன் தயங்கவே, காவலர்கள் அடிக்கிறார்கள். பிறகு, சிறு தீப்பந்தத்தால் அந்த ஏடுகளுக்கு அவனே தீயிடுகிறான். தீயிடும்போது - அவன் ‘யானுமிட்ட தீ மூள்கவே மூள்கவே!’

என்று கத்துகிறான். குருநாதர் வெறிச் சிரிப்புடன் பத்திரிகைகள் எரியும் காட்சியைப் பார்க்கிறார்... அப்போது அரண்மனை மெய்க்காப்பாளன் உலகப்பன் அங்கு வருகிறான். அவன் உடம்பெல்லாம் நடுங்குவது போல் தெரிகிறது. அவன் பரபரப்பைக் கண்டதும்)

உலகப்பா - என்ன நடந்தது?

ஆபத்து பிரபு! ஆபத்து! அரசர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார்! அரச பதவியைத் துறந்து விட்டார்!

என்ன?

இதோ அவர் கொடுத்து விட்டுப்போன கடிதம்!

(குணசீலர் கடிதம் படித்தல்)

அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு,

நாட்டிலே ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் என்னைப் பயமுறுத்துகின்றன. எந்த நேரத்திலும் புரட்சிக்காரர்கள் கையில் இந்த நாடு சிக்கி விடலாம். அந்த சமயம் அவர்களால் கைது செய்யப்பட்டு, அவமானப்படுவதை விட இப்போதே ஓடி விடலாம் என்று தீர்மானித்து அதன்படி வெளியேறி விட்டேன். அரச பதவியை மட்டுமல்ல; இந்த உலகத்தையே துறந்து நிம்மதியாக மேல் உலகு செல்ல முடிவு கட்டி விட்டேன். என் ஆத்மா சாந்தி அடைவதற்கான சடங்குகள் எல்லாம், குரு நாதரைக் கொண்டு நடத்தி வையுங்கள்!

எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி அதுதான்! வருகிறேன்.

மணிமாறன் மணிமகுடத்தின் மாஜி மன்னன்

நம்முடைய திட்டங்கள் எல்லாம் கவிழ்ந்தன - இந்தச் செய்தி வெளியே தெரிந்தால் போதும் - அடுத்த வினாடியே நமது ஆட்சி ஒழிந்து விடும் - நாமெல்லாம் சிறைக் கோட்டங்களைத் தான் அலங்கரிக்க வேண்டும்.

அதற்கும் சிறையிலே இடமில்லை - ஆயிரம் பேரை அடைக்க வேண்டிய சிறையில் நாலாயிரம் பேரை அடைத்திருக்கிறோம், ஆடு மாடுகளைப் போல!

(குறுக்கிட்டு) இவங்க எல்லாம் உள்ளே போனா, அவுங்க எல்லாம் வெளியே வந்து விடுவாங்களே!

(காவலன், ஆத்திரத்தோடு அவனை அறைந்து ‘பேசாதே’ என்று எச்சரிக்கிறான்)

தெருவிலே போவோரும் வருவோரும், ஏழையும், மேழையும், இதுபோன்ற பத்திரிகை விற்கும் அனாதைகளும், கூலி கூட்டங்களும், அரசாங்கத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் அது பெரிய ஆபத்து அமைச்சரே! நான் வெளியிலே சொல்வதில்லையே தவிர, எனக்கு நன்றாய்த் தெரியும். ஒரு தேசத்திலே இதுபோன்ற தேய்ந்து போனதுகள் (பத்திரிகை விற்பவனைக் காட்டி) கொஞ்சம் தெளிவு பெற்றாலே, பிறகு ஏற்ப்பட்ட இரும்பு ஏகாதிபத்தியங்களும் தூள் தூளாகி விடும்!...

இந்த நேரத்திலேதான், அமைச்சரே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

குருநாதரே! மேலும் மேலும் பயமுறுத்தாதீர்கள். அரசன் இல்லை என்ற செய்தி, தீ போல பரவுவதற்கு முன் ஒரு திட்டம் தீட்டுங்கள்!

திட்டம் - நான் தீட்ட வேண்டும்,