உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 22
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 22 · 22 / 47

இல்லை - பிறகு சாப்பிடுகிறேன் - நீ போ!

ஊஹூம் நீயும் வா!

(அழைத்துப் போகிறாள்.)

(தனக்குள்ளாக) கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பார்கள்... அரசனிடமிருந்து இவளைப் பிரித்தால் இவள் நம்மை விட்டுப் பிரிய மாட்டேன் - என்கிறாள்! வேடிக்கையான பெண்கள்!

(‘மணிமகுடம்’ ஏட்டைப் புரட்டிப் படிக்கிறான்)

(குருநாதர் மடாலயம் - அமைச்சர், குருநாதர், அரிஹர நாதர் மூவரும் இருக்கிறார்கள்)

(கையிலே மணிமகுடம் ஏட்டுடன்) இந்த நிலைமைகளை வளர விடக் கூடாது! யார் அந்தப் புதுமைப்பித்தன்? அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அரசன் கையெழுத்துப் போடாத செய்தி அவனுக்கு எப்படி தெரியும? அவசரமாகவும், அவசியமாகவும் கவனிக்க வேண்டும் அமைச்சரே! இல்லாவிட்டால், நாடெல்லாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!

அரிஹரநாதரே! பத்திராதிபர் - ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படிப் பதறலாமா? எத்தனையோ பொய்களை திரிக்கவும், உண்மைகளை மறைக்கவும் கற்றிருக்கிற நீர் இதற்குப் பயப்படலாமா?

அமைச்சரே! நான் சொல்லுகிறேன், உமது விசேஷ அதிகாரத்தை உபயோகித்து உடனே கொடிக்கால் நகரை காலி செய்ய வேண்டும்! கோயில் எழுப்பும் தீர்மானமும் அமுலுக்கு வரவேண்டும்.

சரியான யோசனைதான்! தீர்மானம் செயலுக்கு வராவிட்டால் ‘மணிமகுடம்’ பத்திரிகைச் செய்தியை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள். இப்போதே உத்தரவிடுகிறேன். கொடிக்கால் நகரம் காலி செய்யப்பட வேண்டும் - கோயிலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறவேண்டும்.

சபாஷ்! சபாஷ்! மக்கள் தொண்டன் முன் பக்கத்திற்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது.

(கொடிக்கால் நகரம் ஏழைகளின் குடிசைகளிலே அரசாங்க வீரர்கள் நுழைந்து கொடுமை புரிகிறார்கள். வீடுகளின் கூரைகள் பிரிக்கப்படுகின்றன. சுவர்கள் இடிக்கப்படுகின்றன. குழந்தை குட்டிகளோடு நடுத் தெருவிலே நிற்கிறார்கள் கொடிக்கால் நகரத்து மக்கள்.)

(தள்ளாடியபடி) இது என்னப்பா அக்கிரமம். முன் எச்சரிக்கை கூட செய்யாமல், இப்படி குழந்தை குட்டிகளோடு எங்களை நடுத்தெருவிலே விடுறீங்களே, இது கடவுளுக்கே அடுக்குமா?

கடவுளுக்கு அடுக்கு மாளிகை கட்டத்தான், உங்களையெல்லாம் ஓடச் சொல்லுகிறோம். ஏ, கிழவா! எதிர்த்துப் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா?

இதைவிட இன்னும் என்ன நடக்க வேண்டும்? அடப் பாவிகளே! நாங்க எங்க போய் சந்தியிலே நிற்போம்!

சீ, கிழட்டு நாயே! தள்ளிப் போ - வேலை நேரத்திலே குறுக்கே நின்று கொண்டு! போடா! போ..!

(ஒரு வாலிபன், அவன் மனைவி, குழந்தை மூவரும் ஒரு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். குழந்தையின் பொம்மையை ஒரு வீரன் தூக்கி எறிகிறான், மற்ற சாமான்களோடு.)

அப்பா- அய்யோ என் பொம்மை!

(என்று அழுகிறது.)

சீ - குடும்பமே நாசமாகுது... உனக்கு பொம்மை வந்ததா பொம்மை...!

(என்று அடிக்கிறான்; குழந்தை அழுகிறது. இன்னொரு வீட்டுக்காரனை அடித்தபடி இழுத்து வருகிறார்கள். அவன் மனைவி பின்னால் அழுது கொண்டே வருகிறாள்.)

அய்யா - அவரை விட்டு விடுங்கய்யா - உங்க உத்திரவுப்படி நாங்க இடத்தை காலி செய்து விடுகிறோம்.

சீ பேசிக் கொண்டே உயிரை வாங்காதே - இந்த தடியன் எங்களை எதிர்த்துப் பேசுகிறான்... அவ்வளவு திமிரா இவனுக்கு...?

(அடிக்கிறார்கள். அவன் உடம்பெல்லாம் ரத்தம் வழிகிறது.)

ஏனப்பா அடிக்கிறீர்கள்? எங்கள் பிழைப்பிலே மண்ணைப் போட்டு, இருக்கவும் இடமில்லாமல் வயிற்றிலே அடித்து விட்டீர்களே, இன்னுமா அடிக்க வேண்டும்! அய்யோ அம்மா!

(சவுக்கடிகள் விழுகின்றன. அவன் துவளுகிறான். அப்போது அல்லி - பொன்னழகன் தலைமையில் மக்கள் மன்றத் தொண்டர்கள் ஓடி வருகிறார்கள்)

நிறுத்துங்கள்! (அந்த மனிதனுக்கு நேராக நின்று சவுக்கைப் பிடித்துக் கொண்டு) எதிர்க்கத் தெரியாத ஏழையின் மீது வெறியாட்டம் நடத்தும் கோழைகளே! - நிறுத்துங்கள்... ஏன் அடிக்கிறீர்கள் அவரை?

நீ யார் காரணம் கேட்க? மணிமகுடபுரியின் ஆட்சி பீடம் கட்டளையிட்டிருக்கிறது!

முடியாது - மூர்க்கனே! ஆயிரம் குடிசைகளுக்குத் தீயிட்டு விட்டு ஆலயம் அமைக்கும் அதிமேதாவிகளின் படைத்தலைவனே! இருதயத்தை எடுத்தெறிந்து விட்ட உன் போன்றவர்களுக்குத்தான் மணிமகுடபுரி ராணுவத்திலே உயர்ந்த வேலையா? நீங்கள் என்ன மனிதர்கள்தானா; இயந்திரங்களா? ஏழைகளின் குடிசைகளைத்தான் காலி செய்ய வேண்டுமென்று உத்திரவே தவிர, அவர்களின் எலும்பு உடல்களையும் காலி செய்து, அந்த எலும்புக் கூடுகளுள்ளே ஆண்டவனுக்கு பூஜை விளக்கு ஏற்றி வைக்க வேண்டுமென்று, கூறியது யார்?

யார் கூறியது?

குருநாதர் உத்திரவு! அமைச்சர் அங்கீகாரம்! அரசனின் கையொப்பம்! எங்கள் சவுக்கு நுனிகளுக்கு சரியான வேட்டை!

வேட்டையாடுவீர்கள், வீரர்களே, வேட்டையாடுவீர்கள் மக்கள், மாக்களாய் உள்ளவரையில்! கோழையின் கண்களில் அனலுக்குப் பதில் புனல் கிளம்பும் வரையில்! வேட்டையாடப்படும் மனித சமுதாயத்தின் இரும்புக் கை உங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உயரும் வரையில்! வேட்டையாடுவீர்கள்! நடமாடும் கோயில்களை அழித்து விட்டு, குருநாதனுக்காக ஒரு கோயில் கட்டும் குருடர்களே! குறைமதி கொண்ட வீணர்களே! நாட்டையான வழியின்றி, மக்களை வேட்டையாடிய நாசகாரர்கள் எல்லாம், சரித்திரப் பள்ளத்தாக்குகளிலே, கள்ளிக்காடுகளாய், முளைத்துப் போய் கிடக்கிறார்கள் என்பதை நெஞ்சிலே நிறுத்துங்கள்!

என்ன? ஆண்மை கொண்ட வீரர்களின் அணிவகுப்புக்கு எதிரே; ஒரு அற்பப் பெண்ணுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம்?