உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 17
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 17 · 17 / 47

சரிதான்... காக்கை, கருங்குயிலைப் பழித்த கதைத்தான் இது!... மழை காலத்து மேகம் மாதிரி இருந்து கொண்டு, நையாண்டி செய்ய வந்து விட்டார் என்னை!.... நீலமேக சாமளவண்ணரே!

ஆகா! என் நெருப்பில் குளித்த நீலோத்பல மலரே!

நிறுத்தும் நான் யார் தெரியுமா?

பேயுமல்ல - பிசாசுமல்ல - ஊமையுமல்ல - செவிடுமல்ல- உல்லாசி! ஊர்வசி!

மரியாதை வேண்டும். பேச்சில் - நான் மந்திரி குமாரியின் தோழி! நீர் மெய்க்காப்பாளன்!

மெய்க்காப்பாளன் என்றால் உனக்கு அர்த்தம் தெரியுமா? உண்மையைக் காப்பாற்றுகிறவன் - அதாவது அரசிடம் உண்மையோடு பழகுகிறவன் - அந்தரங்க செயலாளன் - ரகசிய ஊழியன்.

அவ்வளவுதானா?

இன்னும் இருக்கிறது.. மெய் என்றால் உடல் என்றும் கூறுவார்கள்! உன்னைப் போன்ற அழகியின் உடலை பத்திரமாகக் காக்கக் கூடியவன்.

மெய்க்காப்பாளர் - நான் சொல்லட்டுமா புதுப் பொருள்?

சொல்லு!

ஆபத்து வரும் போது மெய்யைத் தான் காப்பாற்றிக் கொள்ள தெரியுமே, தவிர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவர், சரிதானா?

நீயும் ஒரு புலவிதான் போலும்!

அப்படியானால் நீர் புலவரோ?

ஆமாம், மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை எழுதுவேன்!

எங்கே இப்போது எழுதும், மூச்சு விடுவதற்குள், முன்னூறு கவிதை...

அடடா... இது புரியவில்லையா? மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை

ஆகா.. நல்ல கருத்து...குப்பை மேட்டிலே குண்டுமணிபோல! யாரும் இதுவரை சொன்னதேயில்லை.

இதுபோல இன்னும் பல குண்டுமணிகளை நீ பொறுக்க வேண்டுமானால்...

என்ன செய்ய வேண்டும்?

ஒரு தாலி செய்ய வேண்டும்.

என்னா, தாலியா?

ஏன், இதுகூட வேண்டாமா? சரி...

ஓகோ! சரிதான்! அய்யா மெய்க்காப்பாளரே! இரவு நேரத்தில், ஒரு நந்தவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறையா?”

பிறகென்ன? பகல் நேரத்தில் ஒரு பாலைவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறை என்கிறாயா நீ?

உமது உள்ளம்; கண்ணாடி போல எனக்குத் தெரிகிறது...

(நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு) இந்தக் கண்ணாடியிலே உன் முகத்தைப் பார்த்துக் கொள் சீக்கிரம் சிங்காரித்துக்கொள் - கண்ணுக்கு மை எழுதிக் கொள்! பொட்டு வை! பொலிவு பெறும்!

(வஞ்சி அவன் நெஞ்சுக்கு நேரே முகத்தை நீட்டி, கண்ணாடியில் பார்ப்பது போல நடித்துவிட்டு)

அடடே! இது ரசமில்லாத கண்ணாடி!

நீதானே காதல் ரசம் பூச வேண்டும்...

(வஞ்சி, வெட்கப்பட்டு சிரிக்கிறாள்)

ஆகா! இவைகள் என்ன முத்துப் பற்களா... முல்லைச் சரமா? (அவளைத் தொடுகிறான்)

இதோ பாருங்கள்... இது மாதிரி பழைய வர்ணனைகள் எனக்குப் பிடிக்காது...