உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 18
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 18 · 18 / 47

வா...! எல்லாம் புதிதாகவே சொல்லுகிறேன்.

(இழுக்கிறான்)

எங்கே?

அதோ அந்த மேடைக்கு... இங்கு யாராவது வருவார்கள்...

அய்யோ, கலாராணி தேடுவாளே..

தேடட்டுமே! நாமென்ன தேவலோகத்திற்கா போகிறோம். தேவலோகத்தைத்தான் இங்கு வரவழைக்கப் போகிறோம்.. வா..வா!

(இருவரும் போய்விடவே - சிறிது நேரத்திற்கெல்லாம் கலாராணி அங்கு வந்து!)

“வஞ்சி! வஞ்சி” (என்று கூப்பிடுகிறாள்)

(வஞ்சியைக் காணவில்லை. மீண்டும் ‘வஞ்சி’ என்று உரக்கக் கூப்பிடுகிறாள். அப்போது, இரண்டு மூன்று கரிய உருவங்கள், அவள் மீது பாய்ந்து - அவள் முகத்திலே மயக்க மருந்தைக் காட்டி அவளைத் தூக்கிக் கொண்டு போய் விடுகின்றன. அவள் கொண்டு செல்லப்படுவதை அங்கு வரும் வஞ்சி, பார்த்து விடுகிறாள். அலறுகிறாள் வஞ்சி)

(“கலா! கலா!” என்று கத்துகிறாள். பலனில்லை. கலாராணி, வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு விடுகிறாள்)

(அரசன் மாளிகை - அரசன், அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறான், சிரித்தபடியே! உலகப்பன் ஓடிவந்து)

அரசே!

என்ன, முடிந்ததா? எங்கே கலாராணி?

வெற்றிகரமாக முடித்து விட்டேன்... அவளை மெதுவாக மயக்கி...

அடே! மயக்க மருந்தை அவளுக்குக் கொடுத்து விட்டாயா (கோபமாக)

இல்லை அரசே! அது வேறு, மயக்க மருந்து! (இளித்தபடி) உம் அவளைத் தந்திரமாக நான் அழைத்துக் கொண்டு போய் விடவே, நமது ஆட்கள் கலாராணிக்கு மயக்க மருந்து காட்டி, கலாராணியை பளிங்கு மண்டபத்தில் சேர்த்து விட்டார்கள்.. கலாராணிக்கு இன்னும் பிரக்ஞை வரவில்லை!

சரி, புறப்படு!.. உலகப்பா! உடைகளை மாற்றிக் கொள். நானும் இதோ வந்து விடுகிறேன்...

(என்று கூறிவிட்டு, அரசன் உள்ளே செல்லுகிறான். உலகப்பன், மெய்க்காப்பாளனாக உடைகளைக் கழற்றி விட்டு, வேறு உடைகளைப் போட்டுக் கொண்டு கருப்பு ரோஜாவாக மாறி நிற்கிறான். உள்ளே சென்ற அரசன், வெளியே வருகிறான், புதுமைப்பித்தனாக!)

உலகப்பா...

அரசே!

இப்போது என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?

எனக்கென்ன தெரியும்? நீங்கள் செய்வது எல்லாமே புதுமையாகத்தானே இருக்கிறது?

அதனால்தான் புதுமைப்பித்தன் என்று பெயர் வைத்துக் கொண்டேன்.

அதோட விட்டீங்களா? (தன்னைக் காட்டி இந்த உலகத்தையுமல்லவா கருப்பு ரோஜாவாக மாற்றி விட்டீர்கள்.)

(சிரித்தபடி) கருப்பு ரோஜா! வா..வா!.. நேரமாகிறது. கலாராணி மயக்கம் தெளிவதற்குள், காரியம் நடக்க வேண்டும்.

(இருவரும் ஒளிந்து ஒளிந்து வெளியேறுகிறார்கள்.)

(மக்கள் மன்றம் - விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கவிஞர் எழுதிய மக்கள் விடுதலைப் பாட்டு ஒன்றை அல்லி பாடிக்கொண்டிருக்கிறாள், கவிஞர் அந்தப் பாடலை ரசிக்கிறார்)

புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம் ‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையை தவிர்ப்போம் உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ‘ஒரு பொருள் தனி’ என்னும் மனிதரைச் சிரிப்போம் இயற்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்” (புதிய) - பாரதிதாசன்

(பாட்டு முடிந்ததும்)

அல்லி! என்னதான் கருத்துக்களை அள்ளிக் கொட்டி கவிதை எழுதினாலும்; அது உணர்ச்சி வயப்பட்டவர்கள் வாயிலாக வெளிக் கிளம்பும்போது தான் எழுச்சி விருந்தாக, ஏழையர் நலிவு போக்கும் மருந்தாக பயன்பட முடிகிறது!

(அப்போது மன்றத்தின் கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது)

யார் பொன்னழகனாயிருக்கும்...