மணிமகுடம்
காட்சி 15 · 15 / 47
கேள்!
தாங்கள் என்னை விரும்புகிறீர்களா?
விரும்புகிறேன்.
(திகைப்புடன்) உண்மையாகவா?
ஏன் சந்தேகம்?
நீங்கள் என்னை விரும்புகிறீர்களா?
ஆம்
(துடிப்புடன்) என்னை நேசிக்கிறீர்களா?
ஆமாம்.
நான் உங்களை விரும்பவில்லை.
கவலையில்லை! நான் விரும்புகிறேன், நேசிக்கிறேன்.
நான் மறுத்த பிறகுமா?
ஆமாம்.
நான் வேறு ஆடவரை நேசிக்கிறேன்.
என்னைப் போல் அவன் உன்னை நேசிக்க மாட்டான் - விரும்ப மாட்டான்.
நீங்கள் என்னை விரும்பவும் கூடாது - நேசிக்கவும் கூடாது!
பொங்கி வரும் வெள்ளமல்ல எண்ணம்; அணைபோட்டுத் தடுக்க! ஒரு அமைச்சரின் மகளை அரசன் ஏன் விரும்பக் கூடாது!
ஆ!.. (திகைப்பு)
ஒரு தங்கையை ஒரு அண்ணன், ஏன் சகோதர பாசத்தோடு நேசிக்கக் கூடாது!
(வியப்புடன்) அரசே!
கலாராணி, மணிமகுடபுரி மன்னவனின் தங்கைகளில் ஒருத்தி!
அரசே! என்னை மன்னித்து விடுங்கள்!
(காலில் விழுகிறாள்)
எழுந்திரு! அமைச்சர்தான் அவசரக்காரர் என்றால், அவர் மகள் நீயும் அப்படியே இருக்கிறாய்!
தாங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அப்பாதான் என்னிடம் சொன்னார்.
எனக்கு ஏன் இப்போது திருமணம்? அதுவும் அமைச்சர் மகளை திருமணம் செய்து கொண்டால், வெறும் வாயை மெல்லும் புரட்சிக்காரர்களுக்கு கொஞ்சம் அவலும் அள்ளிப் போட்ட மாதிரிதான்!
நான் விடைபெற்றுக் கொள்கிறேன், மன்னவா!
நில் கலாராணி! வேறொருவனை விரும்புவதாகச் சொன்னாயே; யார் அவர்?
(கலாராணி தலை குனிந்து நிற்கிறாள்)
வெட்கம் தேவையில்லை. உன் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்க ரீதியாகவும் அக்கரை காட்டப்படும்! அமைச்சர் புதல்வியல்லவா நீ! அவன் யார்?
அவர் பெயரைச் சொல்லவே பெரிய குற்றம்.
