உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 12
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 12 · 12 / 47

சோதனையில் வெற்றி பெற்று விரைவில் திரும்புங்கள்.

என் வெற்றியை நீ ஏன் விரும்புகிறாய்?

மக்கள் மன்றம் ஒரு நல்ல மேதையை இழந்து விடக் கூடாது என்பதுதான்.

மேதையா, நான்?

மேதை மட்டும் அல்ல - அறிஞர் - கவிஞர் - நாவலர் - சொல்லின் செல்வர் - சிந்தனைச் சிற்பி - எல்லாமே நீங்கள்தான்!

சந்தேகத்துக்குரிய சதிகாரன் - நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவன்.

அப்படித்தான், இங்கே கருதுகிறார்கள், ஆனால் நான்...

நீ கருதவில்லையா அல்லி?

இல்லை, உங்கள் முகத்திலே மோசத்தின் சாயல் சிறிதுமில்லை.

அல்லி.. உன் வார்த்தைகள் போதும் எனக்கு. நீ உண்மையை உணர்ந்தால் போதும்... நான் சதிகாரனல்லவே, சொல் அல்லி! சொல்! உன் வாயால் இன்னொரு முறை சொல்!

இல்லை! நீங்கள் சதிகாரர் இல்லை! உத்தம உண்மையின் உருவம்! (விம்முகிறாள்)

ஆகா... அல்லி! மணிமகுடபுரியே விடுதலை பெற்று போன்ற மகிழ்ச்சி அடைகிறேன் - விடை கொடு, வருகிறேன்!

திரும்பி வருவதாக வாக்களித்தால் விடை கொடுப்பேன்.

(வியப்புடன்) உன்னுடைய பேச்சில்...

என்ன கற்பனை செய்கிறீர்கள்?

ஒன்றுமில்லை..

சொல்லுங்கள்!

நெஞ்சு நடுக்கம் எடுக்கிறது.. வேண்டாம்...

என்னுடைய நெஞ்சும் நடுங்குகிறது.

என்னுடைய உடம்பே நடுங்குகிறது. யாராவது வந்து விடப் போகிறார்கள் என்று! நான் போய் வெளியே காவல் இருக்கிறேன். (போகிறான்)

அல்லி, நான் வருகிறேன்!

மந்திரி மகளைக் கொண்டு வரும் முயற்சியில்...

நீயும் அப்படித்தான் கட்டளையிடுகிறாயா?

கட்டளை அல்ல; உங்களைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் பிறக்கும் அன்புக் கோரிக்கை.

அன்புக் கோரிக்கை... (இன்பமாக அந்த சொல்லை உச்சரித்தபடி) அல்லி!

(என்று அவளிடம் அவன் திரும்பி நெருங்குகிறான். அவள் முகத்தை மூடிக் கொண்டு சோகமயமாக வேறுபக்கம் போய்விடுகிறாள். புதுமைப்பித்தன் அதைவிட்டு வாட்டமுடன் நகருகிறான்)

(அமைச்சர் வீடு - கலாராணியின் அறை - கலாராணி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். இனிமையாகப் பாடிக் கொண்டு! அப்போது அங்கே வஞ்சி வருகிறாள்)

சபாஷ்.. சபாஷ்...

எப்படி நடனம்?

கலாராணியின் உடல் நெளிவது போல் கருநாகமும் நெளியாது.

போதுமடி, கவிதா சிரோண்மணி! உன் உதாரணங்களை மூட்டை கட்டிக் கொள்.. ஏறாதே!

பிறகென்ன கலா! புதிய உதாரணமாக என்ன சொல்வது? எல்லாம் சொல்லிச் சொல்லி புளித்துப் போய்விட்டது.