மணிமகுடம்
காட்சி 11 · 11 / 47
சீ.. முட்டாளே! வழி சொல்ல வந்துவிட்டான், வடிகட்டிய முட்டாள்!
(போகிறார் வேகமாக)
(மணிமகுடபுரி வீதிகளில் ‘மக்கள் தொண்டன்’ ஏடு விற்பனையாகிறது)
சீமான் சபை தீர்மானத்தில் அரசர் கையெழுத்துப் போட்டு விட்டார். தேவாலயம் கட்ட தீவிர ஏற்பாடுகள் - அமைச்சர் அறிக்கை! தேவாலய வரி விதிக்கப்படும்! - குருநாதர் எழுதியிருக்கும் தெய்வீகக் கட்டுரையுடன், மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்! மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்!
(என்று கூவி விற்கிறான்) அப்போது அங்கு வந்த அல்லி, அந்த ஏட்டை வாங்கிப் படிக்கிறாள்; திடுக்கிடுகிறாள், வேகமாகத் திரும்புகிறாள்)
(பத்திரிகைச் செய்தி நாடெங்கும் பரவுகிறது)
(மக்கள் மன்றம் - பொன்னழகன், கவிஞர், அல்லி, முதலியோர்)
அமைச்சன் தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொள்கிறான். தீர்மானத்திலே அரசன் கையெழுத்து போட்டு விட்டான் - நாளை, அமைச்சன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் - என்ற செய்தியும் வரப் போகிறது! அமைச்சனுக்கும் அரசனுக்கும் சம்மந்தி உறவும் ஏற்பட்டு விட்டால், பிறகு அமைச்சன் வைத்ததுதான் சட்டம்! மணிமகுடபுரி குணசீலனின் ஏகபோக சொத்தாகி விடும்!.... தேவாலயத் தீர்மானத்தை விட்டது போலில்லாமல், அந்தத் திருமணத்தையாவது உடனே தடுத்தாக வேண்டும்!
திருமணத்தைத் தடுக்க இரண்டு வழிதான் உண்டு! ஒன்று - அரசனை அபகரிக்க வேண்டும் - அல்லது அமைச்சன் மகள் கலாராணியை அபகரிக்க வேண்டும்.
அரசனை மறைப்பதை விட, கலாராணியை மறைப்பது சுலபம்! - ஆம்! அதைத்தான் செய்ய வேண்டும். தோழர்களே! கலாராணியைத் தூக்கிவர யார் முன் வருகிறீர்கள்? நீங்களே சொல்லுகிறீர்களா - அல்லது வழக்கம் போல் சீட்டு குலுக்கிப் போடலாமா?
அதுவே நல்ல முறை! சீட்டே போடலாம் - சீட்டு எழுதுங்கள்!
(அப்போது புதுமைப் பித்தன் வருகிறான். மன்றத்தில் ஒரே அமைதி நிலவுகிறது - யாரும் அவனை வரவேற்கவில்லை. புதுமைப்பித்தனுடன் கருப்பு ரோஜாவும் வருகிறான். இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு விழித்து, கடைசியாக)
என்ன, ஒரே அமைதி நிலவுகிறது? அரசன் கையெழுத்துப் போட்டு விட்டான், என்ற செய்தியை பார்த்து விட்டீர்களாக்கும்! எனக்கென்னவோ அந்த செய்தியில் நம்பிக்கையில்லை - செய்தியைப் படித்தீர்களா? இதோ - (பத்திரிகையைப் புரட்டி), “சீமான்கள் சபைத் தீர்மானத்தில் அரசர் கையெழுத்துப் போட்டு விட்டார்”, என்று இருக்கிறதே தவிர கோயில் கட்டும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டாரா, இல்லையா என்று தெரியவில்லை - அமைச்சரும் குருநாதரும், ஆசிரியர் அரிஹரநாதரும் செய்த மோசடிதான் இது!
இதை நம்ப வேண்டாம் - நம்மிடமும் இந்நேரம் ஒரு பத்திரிகை இருந்தால், இப்போதே மறுப்பு எழுதி உண்மையை நிலை நாட்டியிருக்கலாம் - என்ன அல்லி! மக்கள் மன்றத்தின் சார்பாக, ‘மணிமகுடம்’ என்று ஒரு தினசரி இதழ் துவங்கலாமா?
ஏடு துவங்குவது பிறகு இருக்கட்டும் நண்பரே! நீர் முதலில் மக்கள் மன்றத்தின் அங்கத்தினர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலைமை வந்திருக்கிறது; இப்போது!
என்ன?
உம் மீது, மன்ற உறுப்பினர்களுக்கு சந்தேகம் பிறந்திருக்கிறது!
சந்தேகமா? அய்யோ அது நமது சங்கத்தை பிளவுபடுத்திவிடுமே!
சந்தேகத்தை விட சதிக் குணம் பயங்கரமானது! அது சங்கத்தின் பலத்தையே சல்லடைக் கண்களாகத் துளைத்துவிடும்!
தவறான எண்ணம் - தகாது நண்பரே தகாது! நான் சந்தேகத்திற்குரியவனே அல்ல! சதிகாரனல்ல! மணிமகுடபுரி மக்களின் மேன்மைக்காக, என் உயிர் துறவும் தயாராயிருக்கிறேன், தாயின் மேல் ஆணை! தந்தை மேலாணை! தூய என் மொழியின் மீது ஆணை! - என்னை நம்புங்கள் - நான் குற்றமற்றவன்! கொள்கையிலே பற்றுக் கொண்டவன்! அதற்காக எதையும் தியாகம் செய்யக் கூடிய நெஞ்சு பெற்றவன்!
மன்றத்தின் ரகசியக் கூட்டத்திலே தீர்மானமாகி விட்டது - நீர் சந்தேகத்திற்குரியர் என்று! ஆனால் ஒன்று - என் தனிப்பட்ட நிபந்தனையாக இருக்கட்டும். ஒரு கடுமையான பரீட்சை வைக்கிறேன் உமக்கு, அதில் நீர் தேறினால், சந்தேகத்திலிருந்து விடுபடலாம்.
கடுமையான பரீட்சை!
ஆம்... உமது நேர்மையை நிலைநாட்டிக் கொள்ள தேவைப்படுகிற பரீட்சை! மந்திரி குணசீலரின் மகள் கலாராணியை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இங்கு கொண்டு வரவேண்டும்.
கலாராணியையா? ஏன்?
நீர் அரசாங்க ஒற்றன் அல்ல என்பதை நிரூபித்துக் கொள்வதற்கும், அதேசமயம் கலாராணிக்கும் அரசனுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைத் தடுப்பதற்கும் மக்கள் மன்றத்தின் சார்பில் உமக்கு இந்த கட்டளை தரப்படுகிறது. அதுவும் எனக்கு உம்மீது உள்ள அன்பு இன்னும் அடியோடு குறையவில்லை என்பதின் அடையாளமாக!
சபாஷ்! சந்தேகமும் நிவர்த்தியாகும்! திருமணமும் தடைப்படும்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
இல்லை கவிஞரே! ஒரு இருதயத்தில் இரண்டு வேல்கள்! சந்தேகம், சோதனை! இரண்டையும் தாங்க வேண்டும் நான் - முடியாத காரியம்!
கட்டளையை நிறைவேற்றினால், மக்கள் மன்றத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும் - இல்லாவிட்டால்...
மூடப்படும் - என் ஆசைகளும் முடங்கி விடும்!
நான் என்ன செய்ய? மன்றத்தின் ஆணைக்கு நானும் கட்டுப்பட்டதானே வேண்டும் தோழரே! வெற்றியோடு திரும்புங்கள்! வருகிறேன்!
(பொன்னழகன் போக, மற்றவர்களும், அவன் பின்னே போகிறார்கள். புதுமைப்பித்தன், அல்லி, கருப்பு ரோஜா மூவரும் தனியே இருக்கிறார்கள்)
அல்லி.. வருகிறேன்!
(அல்லி கலக்கத்தோடு நிற்கிறாள்)
