இரத்தக் கண்ணீர்
காட்சி 9 · 9 / 61
என்னால் இயன்றது செய்யக் காத்துக் கிடக்கிறேன்.
இந்த வட்டாரத்தில் ஒரு நூறு பேராவது படையில் சேர்ந்திடச் செய்ய வேண்டும்.
முயற்சிக்கிறேன்.
ஆளுங் கட்டாயமாக யாரையும் சேர்க்க வேண்டாமென காவலன் கட்டளை!
ஆமாம்—அப்படிச் சேர்ப்பது படையா காது! நமக்கு நாமே கட்டிக்கொள்ளும் பாடையாவது விடும்.
உண்மை! உண்மை! உமது ஊர் மக்களுக்கு வேங்கை புரத்துப் படையில் சேர்வது என்றால் வெறுப்பாயிருக்கும்—ஏனெனில் அவர்கள் அடிமையாக்கி வைத்திருக்கும் அரசனன்று எம்மவர்!
அதெல்லாம் ஒன்றுமில்லை. முதல் அடிமையாகிய நானே—முழந்தாளிட்டு அவரை வணங்கினேன். முழு மனதோடு அவர் வாழ—ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். தாங்கள் எதிர்பார்ப்பதுபோல படையில் பலர் சேர்வர்! சந்தேகமேயில்லை.
சரி, நான்; என் தங்குமிடத்திற்குச் செல்லவேண்டும்.
தங்களுக்காக தெற்கு ராஜ வீதியிலுள்ள தென்றல் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!.
சந்தோஷம்!...
★
ஆற்றங்கரையை யடுத்துள்ள சோலைப்புறமாக சுகதேவனும்—திருசங்கும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.
தம்பி-நீங்கள் வந்ததும் போதும்; அப்பப்பா! அதிலேயிருந்து முத்தாயிக்கு உங்கள் பேச்சேதான்!
அப்படியா? என்ன சொல்லுது! என்ன சொல்லுது!.
உங்கள் நடையிலே ஒரு வீரமிருக்கிறதாம். கண் பார்வையிலே ஒரு கம்பீரம் இருக்கிறதாம். பேச்சிலே இனிமை இருக்கிறதாம். கையிலே........ என்னமோ இருக்கிறதுன்னு—சொல்லிச்சே........
விரல்! விரல்!
இல்ல தம்பி, விரல்ல......
நகம்! நகம்!!
அது இல்ல தம்பி - போங்க நீங்க! எனக்கென்ன இந்த எழவு காதல் வார்த்தையெல்லாமா தெரிகிறது!
அப்படியானால் முத்தாயிக்கு என் மேல் காதல்!
கண்டதும் காதலென்று கதைகளில் படித்திருக்கிறேன். அதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.
ஆகா! உன்னைப்போல ஒரு அப்பனும் அந்த அப்பனுக்கு முத்தாயிபோல ஒருமகளும் இருந்தால்!... உலகம் வெகு விரைவில் காதல் சோலையாக மாறிவிடும்—முத்தாயி! நீயும், நானும்...
சுகதேவ் மெய்மறந்து நின்று விடுகிறான். அதேசோலையில் வேறுபுறத்தில்,
