உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 8 · 8 / 61

முத்தன் போய் விடுகிறான்.

அத்தை எனக்குக் கோபம் வரும்.

பூங்காவனம்! நீ ஏன் அந்த முத்தனுக்குப் பரிந்து இவ்வளவு பேசுகிறாய்?

அண்ணா! உங்க மகன் முதலில் பொம்மைக் குதிரையில் ஏறிப் பழகப் படுத்திக் கொண்டு பிறகு குடைராட்டினக் குதிரையிலேறி சவாரி பண்ணிவிட்டு, அதன் பிறகு உண்மைக் குதிரையில் ஏறச்சொல்லுங்க.

சரிங்க! நீங்க முதலில் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மாளிகையை விட்டுப் போங்க.

ஏ சுகதேவ்! போதும்.

மன்னித்து விட்டப்பா! உன் கூட பேசி எனக்கே தப்பு.

அத்தை! நீ பேசாவிட்டால் எனக்கென்ன நஷ்டம்! பெண்ணை பெற்று வைத்திருக்கிறாய்... உனக்குத்தான் கல்யாணமே...

சுகதேவ்! சும்மா போகமாட்டாய்!...

போகிறேன்—போகிறேன்!

பூங்காவனம் சோகம் ததும்பும் முகத்துடனே அந்த இடத்தைவிட்டு வேகமாகப் போய்விடுகிறாள்.

★

★

அரண்மனையின் முன்புறம் பல்லக்கு வடிவமுள்ள, குதிரை பூட்டிய ஆடம்பரமான வண்டி ஒன்று வந்து நிற்கிறது. அந்த வண்டிக்கு பாதுகாவலாக முன்புறத்திலும் பின்புறத்திலும் முறையே இரண்டு முரட்டு வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து கையினிலே வாள் தாங்கிய வண்ணம் வந்துகொண்டிருக்கிறார்கள். வண்டியிலிருந்து ஒரு கொழுப்பான மனிதன் இறங்குகிறான். அவனது மார்பில் வெள்ளியாலான வேங்கைச் சின்னம் பதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு ஆடைக்கும்—அந்த வெள்ளிப் பதக்கத்திற்கும், இரண்டு இரண்டு உயர்ந்த அந்த சரீரத்திற்கும், யானை போல் அசையும் அந்த நடைக்கும் ஏதோ ஒரு மதிப்பு இருக்கத்தான் வேண்டும்.

ஆம், அவன்தான் வேங்கை நகர சிற்றரசனின் தளபதி வெற்றிவேலன். வெற்றிவேலன் இறங்கியதுதான் தாமதம் பாண்டு வாத்தியங்கள் முழங்கின. கையினிலே மாலைகள் ஏந்திய நடன மாதர்கள் எதிர் கொண்டழைக்க ஓடி வந்தனர் அபிநயத்தின் மூலம்! பாளையக்காரரும், சுகதேவும் பணிவுடன் திலகமிட்டு வணங்கியவண்ணம் எதிர்நின்றனர். வெற்றிவேலன் அவர்களுடன் அரண்மனைக்குள் பிரவேசித்தான். அலங்காரங்கள் நிறைந்த ஒரு கூடத்திலே தகுதியான ஆசனத்திலே வெற்றிவேலன் உட்காரச் செய்துவிட்டு தானும் அருகிலே பணிவுடன் அமர்ந்தார் பலதேவர்.

என்ன பலதேவரே! நலந்தானே யாவரும்!

நலந்தான்! மன்னர் நலமெல்லாம் எப்படியோ!

நலமே! ஓலை அனுப்பியது கிடைத்ததல்லவா?

கிடைத்தது! ஆனால் அதைக்கண்டு ஆச்சரிய மடைந்தேன்,

ஏன்?

ஆயிரக் கணக்கிலே படை வீரர்கள் இருக்கும் போது—வீர தளபதி வெற்றிவேலர்—நீங்கள் இருக்கும்போது—வேங்கை நகரத்து சிற்றரசர் யாருக்காக பயந்துகொண்டு படையை இன்னும் பெருக்குகிறார்?

படையைப் பெருக்குவது பலத்திற்காக அல்ல! பாதுகாப்புக்காக! பலதேவரே! நூறே நூறு பேர் வீரர்கள் தானும்... உமது தங்கையைத் தோற்கடித்து இந்தப் பழுதூரை கைப்பற்றியவர்கள்!

அதைத்தான் சொல்கிறேன் நானும். வேங்கை நகரத்து வீரர்கள் தொகையிலே அதிகம் தேவை யில்லை... தோல்வி காணத் துரார்கள் அவர்கள்!—

என்ன இருந்தாலும் அரசர் விரும்புகிறார்—படையைப் பெருக்க வேண்டுமென்று! சிறுத்தையூரன் வேங்கை நகரின்மீது எப்போது பாயலாம் எங்குக் காரணம் கிடைக்கும்; களம் அமைக்க—என்று எதிர்பார்த்துக் கிடக்கிறான். அதனால் தான் படை பெருக்கும் முயற்சியில் சிறிதும் தடை கூடாது என நம் மன்னர் உத்திரவிட்டுள்ளார்!