இரத்தக் கண்ணீர்
காட்சி 10 · 10 / 61
வீணையும் நாதமும்!
விழியும் ஒளியும்!
வீரனும் வாளும்!
என்ற வார்த்தைகள் தன் பவள இதழ்களால் பொழிந்தவாறு—முத்தாயி, முத்தனின் மடியிலே படுத்திருக்கிறாள்.
அடக்கிவிட்டாய் நீ! ஆனால் என் நம்பிக்கை நாசமாகி விடுமென்று பயப்படுகிறேன்.
ஏன்?
நீயாவது அரண்மனைக் காவலாளியின் மகன்! நானோ தாயை இழந்தவன்—தந்தை யாரெனத் தெரியாதவன்—உற்றார் உறவினர் இல்லாதவன்—தனி மனிதன்.
நட்சத்திரங்கள் கூட்டமாய்த்தானிருக்கின்றன. நிலவு தனியாகத்தானிருக்கிறது. ஆனால் அல்லிமலர் எதிர்பார்ப்பது நிலவைத் தானே!
என் அல்லி! அரண்மனை குதிரை தேய்ப்பவன் நான்! அங்கே என்னை ஒரு நாயைப்போல் நடத்துகிறார்கள்.
அப்படிச் சொல்லாதீர்கள். அங்கே நாய்க்குக்கூட பட்டுமெத்தை—பாதாம்பருப்பு—பாதுகாப்புப் பணியாட்கள்—எல்லாவசதியும் உண்டு!
பொறுமையெல்லாம் குதிரைக் கொட்டடியிலே இடக்கும் என்னை—உன் அப்பா தினந்தோறும் பார்க்கிறார்—அவரா எனக்கு உன்னை அளிப்பார்! கனவு! கனவு!
கனவையும் பலிக்கவைக்கிறேன். கண்ணையா! கவலையை விடுங்கள்! எங்கே—என்னைப் பாருங்கள்! பார்க்கமாட்டீர்களா! என் முகம் உங்கள் கவலையைத் தீர்க்கும் மருந்தாக இல்லையா?
முத்தன்—முத்தாயியை அன்புவழிய நோக்குகிறான். அவளும் முத்தமிடுவதற்காக உதடுகளைக் குவிக்கிறாள். அதற்குள் முத்தாயி எழுந்து விடுகிறாள்.
உஸ்! பறக்காதீர்கள்!
வசந்தத்தின் ஸ்பரிசத்திலே வானம்பாடி பறக்காமலிருக்குமா?
பறப்பதற்கு—ஒரு இறக்கை போதாது!
அதற்குத்தான் உன்னையும் அழைக்கிறேன்.
முத்தன் அவளைத் தழுவிட முயலுகிறான். முத்தாயி விடுபட்டு அதை விட்டு ஓடுகிறாள். அவள் ஓடுகிறாள். அவன் துரத்துகிறான். இந்தக் காட்சியை சோலைப்பக்கமாக பேசிக்கொண்டு வந்த சுகதேவும், திருசங்கும் பார்த்துவிடுகிறார்கள்.
சரிதான்! சரிதான்! மாலை கண்ணோரம்—சோலையின் ஓரம்!
திருசங்குவிற்கு என்னசெய்வதென்று புரியவில்லை. மகளுக்கேற்ற மணமகனைப் பிடித்து தயார் செய்து கொண்டிருக்கும்போது இப்படியொரு மாடுபெரும் இடிவிழுந்து விட்டதே என யோசிக்கிறான். ஆளும் சாமாளித்துக் கொள்கிறான்.
இளவரசே! நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். என் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறான்—இந்தப் பயல் ஏ! அறிவுகெட்ட பயலே! என்ன காரியமடா செய்தாய். இந்நேரம் நாங்கள் வரவில்லையென்றால் என் குடும்பத்து மானத்தையே கெடுத்திருப்பாயே. என்னடா குட்டிச்சுவர் மாதிரி நிற்கிறாய்! பெண் என்றால் என்ன நினைத்தாய்! சின்னஞ்சிறிய பெண் வெளியே வந்தால் இப்படியா நடந்துகொள்வது நாயே! உன் கண்ணைக் குத்திப் பெயர்க்கிறேன் பார்!
[தடுக்கிட்டு] அப்பா!
நீ பயப்படாதேயம்மா! அவன் என்ன பொன்றும் செய்துவிட மாட்டான். சும்மா—பெண்களை மிரட்டுகிற சோம்பேறிப் பயல்!
