இரத்தக் கண்ணீர்
காட்சி 11 · 11 / 61
இல்லையப்பா!
எனக்குத்தான் எல்லாம் புரிகிறதே—நீ ஏன் இங்கெல்லாம் தனியாக வருகிறாய்? கடவுளே! என் பெண் மானத்தைக் காப்பாற்றினாய்! உனக்கு கோடி நமஸ்காரம்.
சொல்வதைக் கேளுங்க......
ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ போ வீட்டுக்கு... இந்தப் பாவிக்கு நேராக நிற்காதே! போம்மா! போகிறாயா இல்லையா? உம்! போ! போ!
முத்தாயி எதுவும் சொல்லமுடியாமல் போய் விடுகிறாள். தன் தகப்பன்—இளவரசன் சுகதேவனுக்கு நேராக தன்னை ஒரு கொய்யாக்கனி என்று நிரூபிக்க மிகவும் அக்கரை எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணி மனதுக்குள் சிரித்தவாறு அவள் போய்விடுகிறாள்.
இளவரசே! பார்த்தீர்களா? இவன் அக்கிரமத்தை.
(முத்தனிடம் பாய்ந்து அவன் முதுகில் தட்டியபடி) ஏ, முத்தா? முணுமுணுக்கிறதா முதுகு? அரைப்பட்டினி! ஆண்டிப்பயலே! அருமைக் கழுதை!
தீர்ந்ததா அகராதி?
பேசாதே பேடி நாயே!
இனிமேல் பேசுவதற்கு உத்தேசமில்லை.
என்னடா நிமிர்ந்து நிற்கிறாய்! நெஞ்சு எலும்பை உடைத்து விடுவேன்.
உடைத்துப்பார்! அப்போதாவது எனக்கும் இருதயம் இருப்பது உனக்குத் தெரியும்.
ஏ...மரியாதையாகப் பேசு.
மரியாதை—மண்ணுங்கட்டியெல்லாம் மழைக்குப் பயப்படவேண்டும்.
சரிதாண்டா! அதிகப்பிரசங்கித்தனத்திலே அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது!
எப்படி முடியும். அதற்குப் பாளையக்காரர் மகனைப் பிறக்கவேண்டுமே!
ஓ! தகப்பன் பெயர் தெரியாத தருதலை!
உனக்குத் தெரியுமா தகப்பன் பெயர்...
ஆத்திரமடைந்த சுகதேவ், முத்தனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான். அவ்வளவுதான்—முத்தனின் கரங்கள் சுகதேவின் உடம்பில் விளையாட ஆரம்பிக்கின்றன. வேகமாக விழுந்த ஒரு அடியில் சுகதேவின் தலைப்பாகை பறந்துபோய் ஒரு கிளையில் தொத்திக்கொள்கிறது. அடிபொறுக்காத சுகதேவ், திருசங்குவின் கையிலுள்ள பெரிய வேல்கம்பை வாங்குகிறான். “சரி முத்தன் தீர்ந்தான்” என்று திருசங்கு முடிவு கட்டுகிறான்.
வேல்கம்பை வாங்கிய சுகதேவ், மரக்கிளையிலே தொத்திக் கொண்டிருந்த தன் தலைப்பாகையை அந்தக் கம்பின் உதவியால் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு வேகமாக அதை விட்டுப் போய்விடுகிறான்.
★
[தென்றல் மாளிகை
தளபதி வெற்றிவேலன் அனாயாசமாக சாய்ந்திருக்கிறான், ஒரு பீடத்திலே, எதிரே வேதாளம் உட்கார்ந்திருக்கிறான் மிகவும் மரியாதையுடன்.
உம்மைப் பற்றி நான் நிரம்ப கேள்விப்பட்டேன். பலதேவரும் சொன்னார்; மிகவும் திறமைசாலி என்று! நான் வந்திருக்கிற காரியம் உமக்குத் தெரியும். அதற்கு உம்மால் உதவி செய்ய முடியுமா?
