உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 12 · 12 / 61

நானா? சரிதான்! வாளைத் தூக்கக்கூட எனக்கு சக்தியில்லை...

நீர் படையில் சேர வேண்டாமய்யா கொஞ்சம் ஆட்கள் பிடித்துக் கொடும். முயற்சி பண்ண வேண்டும். வேலையில்லாதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.

படையில் சேருவதென்றால் பயப்படுவார்களே!

பலி பீடத்துக்கு வருவதற்கு ஆட்கூடத் தான் பயப்படும். அதற்காகத்தான் மஞ்சள் நீர் தெளித்து—மலர் தூவி—ஆகாரத்தையும் எதிரே நீட்டி ஆசை காட்டுவது!

சரியான பேச்சு! தங்கள் உத்திரவுப்படியே வேலையை ஆரம்பிக்கிறேன். இன்னொரு விண்ணப்பம். இந்த ஊரில் ஒரு பெரிய சாமியார் இருக்கிறார், அவர் பேச்சை தெய்வப் பேச்சாக எல்லோரும் எண்ணுவார்கள். அவரிடம் சொல்லி படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரம் செய்யச் சொன்னால் நமது வேலை சுலபமாக முடியும்.

பொருள் எதுவும் தரவேண்டுமோ—அவர் அருள் பெற?

தரவேண்டியதில்லை, ஏனெனில் அவர் கையால் தொட்டு பொருளே வாங்கிடமாட்டார். மடாலயத்தில் ஒரு உண்டியல் இருக்கிறது. அதில் போட்டு விடவேண்டும்.

சபாஷ்! அப்படியே செய்து விடுவோம். வேதாளம் உனக்கும் சொல்கிறேன் படைக்கு நீ ஒரு ஆள் சேர்த்துக் கொடுத்தால் உனக்கு ஐந்து பொன் ஊதியமாகத் தரப்படும்! மொத்தமாக அல்ல! ஒரு ஆளுக்கு ஐந்து பொன்!

தங்கள் சித்தம் அதற்கென்ன இப்போது நான் அச்சாரமா கேட்கப் போகிறேன்.

என் வாங்கிக் கொள்வேன். இப்போது பத்து பொன் தருகிறேன்.

எ—யாரங்கே? பேழையைத் திறந்து பத்து பொன் எடுத்துவா!

வேதாளத்துக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.

★

அரண்மனையில்—பாளையக்காரர் மாளிகை. நாய்க்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி பலதேவர் உட்கார்ந்திருக்கிறார். அவரது மனைவியும், பூங்காவனமும் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை பலதேவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சுகதேவன் வேகமாக நுழைகிறான்.

அப்பா! உடனே நீங்கள் ஒரு உத்திரவு போடவேண்டும்.

உத்திரவா?... என்ன சுகதேவா?

குதிரை தேய்க்கும் முத்தன் உடனே வேலையைவிட்டு நீக்கவேண்டும்.

காரணம்?...... அவன் சாதுவான கழுதை யாயிற்றே!

நமது திருசங்கு இருக்கிறானே—அரண்மனைக் காவலன், அவன் மகன் கையைப்பிடித்து இழுத்தான். நான் அதைக் கண்டித்தேன்.

சரி... உம்?...

கன்னத்திலே......

ஆ... என்ன...

[சமாளித்து] நான் இரண்டு கொடுத்தேன். சரியான அடி!