உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 13 · 13 / 61

தம்பி, சுகதேவ்! குதிரையை அடித்தாய். அது உன்னைக் கீழே தள்ளியது. முத்தனை அடித்தாய்—அவன் சும்மாயிருக்கிறான். சும்மா இருக்கிறவனை வேலையை விட்டு விரட்டவேண்டும்—குதிரைக்குக் கொள் வைக்கவேண்டும். நல்ல நியாயமப்பா இது.

அத்தை! நீ பொன்றும் பேசவேண்டாம். நடந்த விஷயம் தெரியமுடியாது.

ஆமாம். சுகதேவ் சொல்வது சரிதான். முத்தன் நம்பக்கூடாது. பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறவன் மிகவும் கெட்டவன்.

சரி, சுகதேவ், உன் இஷ்டப்படியே முத்தன் அரண்மனையை விட்டு விரட்டிவிடு!...

பாவமண்ணு! தாய்தந்தை யில்லாத அனாதை. நம்மை விட்டால் எங்கே போவான்.

பூங்காவனம்—நீ சொல்வது சரிதான். அவன் தாயார் காவேரியம்மை நமது அரண்மனை வேலைக்காரி யாயிற்றே—அவள் சாகும்போது மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செத்தாளே என்பதற்காகத்தான் அந்த முத்தனை இத்தனை நாள் பொறுத்தேன். அவன் நமது மடத்து சாமியாரைப் பற்றியும்—மற்றும் தெய்வீக விஷயங்கள் பற்றியும் தாறுமாறாகப் பேசிவருகிறான் என்று பல நாட்களாகக் கேள்விப்படுகிறேன். பூங்காவனம்! உனக்கும் சொல்கிறேன்.

நீ அவனிடத்தில் இப்படி அடிக்கடி அக்கரை காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை....

அப்படிச் சொல்லுங்கள்!.... அத்தை உனக்குத் தான் உலகமே பிடிக்காது. கல்யாணமே வேண்டா மென்று கன்னிகையாயிருக்கிற நீ கடவுளை நினைத்துக் கொண்டு—ஐப மாலையை உருட்டுவாயா—இந்த வம்புக்கெல்லாம் ஏன் வருகிறாய்?

பார்த்தீர்களா அண்ணா உங்கள் மகன் பேசுவதை!

சுகதேவ்! சும்மாயிரு!

நாம் இங்கு நிற்பதே தப்பு.

கண்களில் கலக்கம் மறைய பூங்காவனம் அதைவிட்டுப் போய்விடுகிறாள்.

★

குதிரைக் கொட்டடி

முத்தன் குதிரைகளை ஒழுங்காக கட்டி தீனி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்தக் காட்சியை இரண்டு கண்கள் கனிவோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன. வேலையிலேப்பட்டிருந்த முத்தன் இடமொரு திரும்பவே அந்தக் கண்கள் சந்தித்துவிடுகின்றன. ஆம்—பூங்காவனம் தான் நின்றுகொண்டிருக்கிறாள்—முத்தனைப் பார்த்த படி.

இளைய ராணி! என்னவேண்டும் தங்களுக்கு!

எதுவுமில்லை முத்தா! ... உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

முத்தன் திகைத்து நின்றுவிடுகிறான். அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக திருசங்கு வந்து கொண்டிருப்பதை பூங்காவனம் கவனித்து விடுகிறாள். உடனே முத்தனிடம்,

முத்தா! வேலை முடிந்ததும் என் மாளிகைக்கு வந்து விட்டுப் போ! மறந்துவிடாதே! அவசியம் வரவேண்டும்.

என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். முத்தனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உலகமே சுற்றுவது போல் தெரிகிறது. வேலையிலேயே மனம் செல்லவில்லை. அப்படியே நின்ற இடத்திலேயே முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறான்.

“எதுவுமில்லை முத்தா! உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்”

இந்த வார்த்தைகள் அவன் கண்களை மூட வைத்துவிடுகின்றன. சிந்தனை சுழல்கிறது.

“என் மாளிகைக்கு வந்துவிட்டுப் போ! மறந்துவிடாதே—அவசியம் வரவேண்டும்”.

அவனோ, நினைவையே இழக்கச் செய்து விட்டன இந்த வார்த்தைகள். எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது. கடைசியாக குதிரையின் பின் கால்கள் தந்த ஒரு உதைக்குப் பிறகே அவன் சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றான்.