உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 6 · 6 / 61

வெட்கப்பட்டாதேயம்மா! யாருமில்லை இளவரசர் சுகதேவ் இவர்தான்.

(தலை குனிந்தபடி) வணக்கம்.

கைகள் குவிவதும், விரிவதும் கமல மலர் போல் காட்சியளிக்கிறது! திருசங்கு நீ சொன்னது உண்மை தான்!

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் முத்தாயிக்கு முகம் மாறுகிறது. கோபத்தால் சிவப்படைகிறது.

பாவம்; வெட்கத்தால் கன்னங்கள் சிவந்து விட்டன.

முத்தாயி எதுவும் பேசாமல் அடுக்களைக்குள் போய்விடுகிறாள். சுகதேவ், திருசங்குவைப் பரிதாபமாகப் பார்க்கிறான்.

பார்த்த உடனேயே இப்படிப் பரிகாசம் செய்யலாமா தம்பி நீங்கள்!

என்ன சொன்னேன்—என்ன சொன்னேன் எனக்குத் தெரியாமலே ஏதாவது சொல்லி விட்டேனா?... திருசங்கு! நான் உன்னை ஒன்று கேட்கிறேன் மறுக்க மாட்டாயே!

நீங்கள் பாளையக்காரர் பலதேவரின் மகன், இளவரசர். நான் கேவலம் உங்கள் வேலைக்காரன். கேட்காமலே எடுத்துப் போகும் உரிமையிருக்கிறது உங்களுக்கு!

ஆகா! கண்கள் சுழலுகின்றன. காது கேட்க மறுக்கிறது, நா அசைய மாட்டேன் என்கிறது, இருதயம் ஓடவில்லை!

தம்பி!

காதலென்னும் கள் மொந்தையில் ஒரு ஈ போல விழுந்து விட்டேன்.

திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் காரியம் கைகூடிவிட்டதென களிப்படைகிறான்.

தம்பி! இன்று போய் நாளை வாருங்கள்! காரியம் வெற்றி!

வராமலிருப்பேனா? திருசங்கு வீடு ஒரு தாமரைத் தடாகம்! அங்கு பறந்து வரும் வண்டு இந்த சுகதேவ்!... போய் வருகிறேன் திருசங்கு!

சரி தம்பி!

சுகதேவ் போய்விடுகிறான். திருசங்குவிற்கு முத்தாயியின் மீது ஆத்திரம் தாங்கவில்லை. இளவரசன் சுகதேவை அவள் அவமதித்து விட்டதாகவே கருதுகிறான். ஆகவே சீற்றமுடன்...

முத்தாயி! வா இங்கே!

என்னப்பா! போய்விட்டாரா அந்த மனிதர்?

மனிதரா?

மன்னிக்கவும். தவறிச் சொல்லிவிட்டேன்.

இளவரசர் வீட்டுக்கு வந்திருக்கிறார், இப்படித்தான் அவமானப்படுத்துவதா?

வேங்கை நாட்டு சிற்றரசன்—பாவம், இந்தப் பாளையக்காரர் குடும்பத்துக்கு இந்தப் பட்டப் பெயரையாவது மிச்சம் வைத்திருக்கிறானே. படைகளிழந்தார்—பாராளும் உரிமை இழந்தார். ஆனால் பாளையக்காரர் குடும்பத்தினர் பாளையோடு பழகும் பண்பையும் இழந்தனர் என்பது இப்போது தான் தெரியும். மோசமான வாலிபன்!