உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 5 · 5 / 61

இல்லை தம்பி இல்லை! கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்.

அதற்கென்ன?

மரம் பழுத்தால் வெளவால்களே வா என்று அழைக்கும்!

அதுபோல?

என் மகள் பருவமடைந்து விட்டாள். பயல்கள் வலை வீசுகிறார்கள். அதற்குத்தான் ஓலை எழுதி இருக்கிறான் இந்த உதவாக்கரை. என் மகளின் அழகென்ன—குணமென்ன. அத்தான் முறைக்காக மட்டும் அந்தப் பயல் உரிமை கொண்டாடி விட முடியுமா தம்பி!

ஓகோ! அவ்வளவு அழகா உன் மகள்?

நீங்கள் பார்த்ததே இல்லையா?

இல்லையே... உன் மகளின் பெயர் என்ன?

முத்தாயி! முத்தாயி என்றால் முத்தாயிதான்!

உம்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

இல்லை தம்பி, இது காக்கை அடைகாத்த குயிலின் குஞ்சு!

சரிதான்! கறுப்பு நிறமாக்கும்.

நான் குறைச் சொல்லுகிறேன் தம்பி, முத்தாயி ஒரு எலுமிச்சம்பழம்.

புளிக்காதே!

என்ன தம்பி நீங்க—வயசானவனிடம் இண்டல் பண்ணி உயிரை வாங்குறீங்க!

திருசங்கு! வாயேன் உன் வீட்டுக்குப் போகலாம்!

வினாபாடாதீங்க! அரண்மனைக் காவல் காரன் வீட்டுக்கு இளவரசர் வருவதாவது வேடிக்கை! வேடிக்கை!

என்னிடத்திலே அந்த உயர்வு தாழ்வு இல்லை என்பது உனக்குத் தெரியாதாக்கும்! நீ என் தந்தைக்குத் தான் வேலைக்காரன், எனக்கு ஒரு வயதான தோழன்! சரிதானா?...

நான் பாக்கியசாலி!

வா போவோம்.

★

[திருசங்குவின் வீடு.

அரண்மனை வேலைக்காரனுக்குரிய அந்தஸ்துடன் காணப்படுகிறது. வீட்டுக்குள்ளிருந்து இனிமையான கீதம் தென்றலுடன் கலந்து வருகிறது. அந்த கீதத்தில் பொழிந்து கிடக்கும் பொருள் தான் எவ்வளவு சுவையானது. அந்த இன்ப மழையைப் பொழிந்திடும் குரல் நிச்சயமாக ஆண் குரலாயிருக்க முடியாது. குளிர்ச்சி கொட்டும் பெண்ணின் குரல் தான். ஆம், முத்தாயி தரும் இசையின்பந்தான் அது. வீணை அதிர்வது போலும், குழல் ஒலிப்பது போலும் எழும்புகின்ற அமுதத்தொனி இளங்காற்றிலே அலைபெயருப்பி பரிபூரணமான அமைதி நிறை குடிசையை உருவாக்கிய வண்ணமிருக்கிறது.

பாடிக் கொண்டிருந்த முத்தாயி திடீரென பாட்டை நிறுத்துகிறாள். “அப்பா!” என அழைத்தபடி கதவண்டை ஓடுகிறாள். அதற்குள் முகம் நாணித் திரும்பி விடுகிறாள்.