இரத்தக் கண்ணீர்
காட்சி 4 · 4 / 61
இதற்குள்—பலதேவரும் ஊர் மக்களும், பலதேவரின் மகன் சுகதேவும், அரண்மனைக் காவலன் திருசங்கும் மடாலயத்தை விட்டுப் புறப்படுகிறார்கள். வேதாளம், நூறு பொன் நாணயங்களையும், சாமியார் காட்டிய உண்டியிலே போடுகிறான். அதை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவக் கிழவனார் பூபதி—ஏளனமான சிரிப்புடன்
ஸ்வாமிகள் பொன்னைத் தொடுவது கிடையாதோ!
விஷம்!
அந்த விஷத்திலே வளாவதுதானே இந்த விருக்ஷம்!
என்று சிரித்தபடி சாமியார் பக்கம் சுட்டு விரல் நீட்டுகிறார். வேதாளம் வெளியேறிவிடுகிறான்.
பூபதி! உயிரை வாங்காதீர்... போய்வாரும்.
சாமியாரே! ஹி ஹி ஹி! ஊர் மக்களிடம் சொன்னீரே—மகான்களின் சக்தியைப் பற்றி! அது மட்டும் உண்மையாயிருந்தால் என்னை சாகவே செய்துவிடுவீர்—இல்லையா?
இருபது வருடமாய்த் தொலைந்திருந்தீரே, இப்போது என்னய்யா வந்தீர்?
ஏன் வந்தேனா? சொல்லுகிறேன். ஹி ஹி ஹி!... சாமியாரே! நீரும் இருபது வருஷமாகத்தானே அந்த ரகசியத்தை என்னிடம் மறைக்கிறீர். இரும்! இரும்! கண்டுபிடிக்காமலா போகப் போகிறேன். ஹி ஹி ஹி!
வயதான கிழவனுக் குறித்தான சோர்வுச் சிரிப்புடன் பூபதி அவைவிட்டு அகலுகிறார்.
[தனக்குள்] திருச்சிற்றம்பலம்—தெய்வமே துணை!
★
[பழுதூரின் தெரு
அரண்மனைக் காவலன் திருசங்கு, இளவரசன் சுகதேவும் போய்க் கொண்டிருக்கிறார்கள். வேதாளம் எதிரே வருகிறான்.
நமஸ்காரம் சுகதேவ!
உம், என்ன வேதாளம் சுகந்தானே!... ஏதாவது ஓலையுண்டா?...
உங்களுக்கொன்றுமில்லை. உம்—திருசங்கு! உனக்கு ஒரு ஓலையிருக்கிறது; இந்தா பெற்றுக்கொள். நான் வருகிறேன்.
திருசங்குவிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு வேதாளம் போய்விடுகிறான். திருசங்கு ஓலையை படித்து முடித்து சொக்காயின் பையில் திணித்துக்கொண்டு சுகதேவுடன் நடக்கிறான்.
என்ன திருசங்கு! யாரிடமிருந்து ஓலை?
ஆங்! அவன் ஒரு வேலையற்றவன் பொழுது விடிந்தால் என் உயிரை வாங்குவதே அவனுக்கு வேலை.
ஆகா! எவ்வளவு புரியும்படி சொல்லி விட்டாய், புலவர்களைப்போல!
என்ன தம்பி சொல்வது! எனக்கு ஒரு மருமகப் பயல் இருக்கிறான். அவனுக்கு பெண் வேண்டுமாம்.
ஏன், பிறப்பதெல்லாம் ஆணாகப் பிறக்கிறதோ மருமகன் என்றால் உமது மகளின் கணவன் தானே!
