இரத்தக் கண்ணீர்
காட்சி 58 · 58 / 61
இந்தக் கனல் கிளப்பும் ஓலத்தைக்கேட்ட சுகதேவன் பிரக்ஞையிழக்கிறான்.
முத்தாயி! என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு!
முத்தாயி ஸ்தம்பித்து நிற்கிறாள். அவளுக்கு எதிரே ஒரு துரும்புபோல் துடிக்கிறான் சுகதேவன்.
அன்புள்ள சகோதரி! இப்போதே முயற்சி எடுக்கிறேன். உன் காதலன் முத்தன் குற்றவாளி யல்ல - எதிரி நாட்டு உளவாளியல்ல - என்பதை நிரூபிக்கிறேன்.
இதைச் சொல்லிவிட்டு, சுகதேவன் அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடுகிறான்.
★
[பாளையக்காரர் அரண்மனை
கூடத்திலே, பலதேவர், அவர் மனைவி, மாய்கைநாத சாமியார் ஆகியோர் வருத்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை மாளிகையின் மேலேயுள்ள கூடத்துப் பலகணி வழியாக கவனித்துக் கொண்டிருக்கிறாள், பூங்காவனம்.
எனக்கென்னவோ - சுகதேவ் திரும்பிவருவது சந்தேகமாகி விட்டது.
அய்யோ - என் மகன் வரமாட்டானா? நான் என்ன செய்வேன்........
விதி - நம் விழிகளையும் மூடிவிடும். சுகதேவ், எதிரே நின்றுகூட நம் பார்வைக்குத் திரைபோட்டு விடும் பயங்கர சக்தி வாய்ந்தது அந்த விதி.
மேலே பலகணியிலிருந்தபடியே,
உம், ஆரம்பமாகி விட்டது, விதிக்கு விளக்கம், அண்ணா - நீங்கள் சாமியாரை நம்புகிறீர்கள். சாமியார் பாவம் விதியை நம்புகிறார்... விதி, சாமியாரை நம்பி வாழ்கிறது - இப்படிச் சக்கரம்போல விதி, சுற்றிக்கொண்டே இருந்தால், சுகதேவும் எங்கேயாவது சுற்றிக்கொண்டே தானிருப்பான்.
அவசரக்காரப் பெண்கள்...
ஆமாம் சாமியாரே அது முழுக்க முழுக்க உண்மை! - நான் அவசரக்காரிதான்! - அவசரக்காரியேதான்!
(மேலே பார்த்து) பூங்காவனம் - போதும் நிறுத்து!
அப்போது சுகதேவன் அங்கு ஓடிவருகிறான். “அப்பா! அப்பா!” என்று கூவியபடி! அவனைக் கண்ட ராணி, ஓடிப்போய் “வந்துவிட்டாயா என் செல்வமே!” என்று கட்டிக் கொள்கிறாள்.
என்னைக் கொஞ்சுவதற்கு நேரமில்லை—அப்பா! காரியம் மிஞ்சி விட்டது!
என்ன சுகதேவ்?
நீங்கள் வந்தால் தான் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்!
என்ன சொல்லுகிறாய்?
தூக்குமேடைக்குப் போய்க் கொண்டிருக்கிறான் ஒரு ஏழை - அவனைக் காப்பாற்றுங்கள்! அவன் எதிரி நாட்டு உளவாளி என்று சொல்லி, கொலைக்குற்றம் சுமத்தி தண்டித்து விட்டார்கள். உடனே புறப்படுங்கள் அப்பா - வேங்கை புரத்து அரசனிடம்!
விஷயத்தை விபரமாகச் சொல்!
