இரத்தக் கண்ணீர்
காட்சி 57 · 57 / 61
வெளியிலே ஓடும் வேதாளச் சாமியாரை—வீரர்களை அழைத்துக் கொண்டுவரும் சுகதேவன் பார்க்கிறான். உடனே வீரர்களிடம் “இவன் விடாதீர்கள்” என்று கத்துகிறான். ஒரு வீரனின் ஈட்டி பாய்கிறது. அதை முதுகில் ஏந்திக் கொண்டே வேதாளம் ஓடிப்போய்—ஒரு மலைச் சரிவில் விழுந்து கண்ணை மூடுகிறான். அவனது மேலங்கி தாறுமாறாகக் கிழிந்து கிடக்கிறது. அந்தக் கிழிசலின் இடையே பூணூல் மின்னுகிறது.
* * *
சுகதேவும் வீரர்களும்-ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைந்து விடுகிறார்கள். முத்தன் - முத்தாயி திகைக்கிறார்கள். வீரர்கள், முத்தனை வளைத்துக் கொள்கிறார்கள். வீர திலவன், வெற்றிவேலன் நிலைமையைப் பார்த்து. “ஆ! நமது தளபதி” என்று கூவிய வண்ணம் அவனிடம் ஓடுகிறான்.
வெற்றிவேலன் கண்கள் மெதுவாகத் திறக்கின்றன. உதடு அசைகிறது. அந்த அசைவு கூட நல்ல அசைவாக இருக்கக் கூடாதா!
“முத்தன் படையிலிருந்து ஓடிப் போய்விட்டான் இவன் எதிரிநாட்டு ஒற்றன். அவனைப் பிடிக்க வந்த இடத்தில்... இப்படி யாகிவிட்டது ......முத்த......”
வெற்றிவேலனின் இமைந்து கொண்டிருந்த கடைசி மூச்சும் நின்று விட்டது.
யார் இந்த முத்தன்? இவன்தானே - இவனைக் கொண்டு செல்லுவோம் உடனே வேங்கை புரத்திற்கு! - உம் - இழுத்து வாருங்கள்.
முத்தனை வீரர்கள் விலங்கிட்டு இழுத்துச் செல்லுகிறார்கள். முத்தாயி ‘அத்தான்’ என ஒருமுறை கதறுகிறாள். மயக்கமுற்றுக் கீழே விழுகிறாள்.
அவளது மயக்கத்தைத் தீர்க்க சுகதேவன், முயற்சி எடுத்துக்கொள்கிறான். கண் விழிக்கும் முத்தாயி பைத்தியக்காரிபோல் உளறுகிறாள்.
நீங்கள் கொலைக் குற்றவாளியா? குற்றவாளியா?......
பயப்படாதே! நான் ஒன்றும் குற்றவாளி யல்ல......அந்த முத்தன் தான் குற்றவாளி.
ஐயோ...என் காதல் தெய்வமே! உங்கள் கைகளிலே......
ஒன்றுமில்லை ... தண்ணீர்க் குவளை தான்...... பயப்படாதே கண்ணே! எழுந்திரு!
முத்தாயி கண்ணை அகல விழித்துப் பார்க்கிறாள். அவளுக்கு நிதானம் வருகிறது. சுகதேவனைக் காணுகிறாள்.
பாவி—நீ பொருத்தன் வந்துவிட்டாயா?
என் முத்தாயி கோபித்துக்கொள்கிறாய்—எதாவது ஊடலா?
இப்போது நீ என்ன சொல்லுகிறாய்?
என்ன சொல்லுவேன்—நமது திருமணத்தைப் பற்றி.....
அட அநியாயக்காரா! வேதனையின் விளிம்பிலே நிற்கும் என்னிடம் வீரத்தாபம் பேச வந்து விட்டாயே நீ ஒருவன் - இதுதானா உன் மாளிகையில் கற்றுக்கொடுத்த பாடம்? போ வெளியே! உம் போகிறாயா இல்லையா?
அதெல்லாம் யாரும் போகமுடியாது. முத்தாயி—வீணே வீணையாடாதே! வா விவாகத்தை இப்போதே முடித்துக்கொள்வோம்.
உனக்குக் கண்ணில்லை...? மனித உணர்ச்சி யில்லை...? பெண் பழி பொல்லாது என்பார்களே; அதை நீ படித்ததில்லை?
எதுவும் என் காதில் விழாது! இப்போது நீ என்னை திருமணம் செய்துகொண்டுதான் தீர வேண்டும்—கண்ணே முத்தாயி!
முத்தாயி ஆக்ரோஷமாக எழுந்து நிற்கிறாள். அவளுடைய சோர்வு, பலஹீனமெல்லாம் எங்கேயோ ஓடிவிட்டது. பேச ஆரம்பிக்கிறாள்.
உம் — நான் தயாராயிருக்கிறேன். இந்த சரீரம் தானே உமக்கு வேண்டும்...என் மேனியின் மெருகிலேதானே நீ மயங்கிவிட்டாய். உம்—அடிமையாக்கிக்கொள் என்னை! யாரோ சொன்னுளாமே; உடல்தான் அழுக்குப்பட்டது. உள்ளம் அழுக்குப் படவில்லை என்று! அப்படியல்ல நான் சொல்லுது. என் கற்பை உன் காலடியில் வைக்கத் தயாராகி விட்டேன். காமவெறியில் பாய்ந்துவரும் கழுதே! உன் கொடிய நகங்களால் என் இருதயத்தைப் பிராண்டிவிடு! காமபோதையில் கருத்திழந்த காண்டாமிருகமே!
என்னை விழுங்கு! பஞ்சணைப் பசியால் கொஞ்சிவரும் மலைப்பாம்பே! வாடிய என் உடல் உன் வயிற்றுக்குள் போட்டுக்கொள்! உம்—தாமதிக்காதே! சூறையாடு என் கற்பை! சுக்கு நாறுக்கிவிடு என் வைராக்கியத்தை! பெண்கள் விபசாரப் பதுமைகளாக நின்றுவிட்ட பெயர்களின் பிரதிநிதியே! ஏன் நிற்கிறாய்? ஏன் தயக்கம்? இதோ நான் தயார்! என் பிணம் பேசுகிறது உன் வேடு! என் சவம் அழைக்கிறது உன்னை சல்லாபத்திற்கு! வா வா வஞ்சகனே! வா! இதோ நான்! முத்தாயி!
முத்தனின் காதலி! உனக்கு வெள்ளாட்டி!
