இரத்தக் கண்ணீர்
காட்சி 53 · 53 / 61
எங்கும் ஒளியவில்லை...அவருக்கு உடல் நலம் பெறட்டும்—பிறகு கேளேன் என் பேச்சுக்களை! முத்தாயி—என் பேச்சை நீ, ‘குறும்பு’ என்கிறாய். அவர் என்ன தெரியுமா சொல்கிறார்; ‘கரும்பு’ என்கிறார்.
சரி! உன்னுடையவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதே—கொஞ்சம் என்னுடையவரையும் கவனி.
இதோ—இப்போதே அந்த வணிகர் வீட்டுக்குப் போகிறேன்.
அங்கே அவருக்குப் பெயர்—பொன்னன்!—அதை மறந்துவிடாதே!—
சரி—உன் கணவரையும் அழைத்துக்கொண்டு, அப்படியே மருத்துவ மனைக்கும் போய்விட்டு வந்து விடுகிறேன். நீ சற்று தூங்கு! மிகவும் களைத்துப் போயிருக்கிறாய்.
சுமதி போய்விடுகிறாள். முத்தாயி தூங்க ஆரம்பிக்கிறாள்.
★
[வேதாளத்தின் இருப்பிடம்
சுகதேவ் எங்கேயோ போய்விட்டு வந்து கதவைத் தட்டுகிறான். உள்ளே வேதாளம், தாடி ஒட்டிக் கொண்டிருக்கிறான், அருகே வெற்றிவேலனும் அமர்ந்திருக்கிறான்.
சாமி! சாமி!!
பொறு! இன்னும் நிஷ்டை முடியவில்லை.
கதவைத் திறவுங்கள் சாமி!
முட்டாள்தா இரு! கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்! முத்தாயி விஷயம் பற்றி!—
(தனக்குள்) ஆகா—கடவுளோடு பேசுகிறாரா?—நாம்தான் பகவானைப் பார்க்க முடியாது; பாப ஆத்மா! சாமியார் பேசும்போதாவது ரகசியமாகப் பகவானைப் பார்த்து விடுவோமே!—
என்று சொல்லிக் கொண்டே கதவின் ஓட்டை வழியாக உள்ளே பார்க்கிறான். அவ்வளவுதான் அவனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.
ஐயய்யோ தவசி! வேதாளம், மறுபடியும் முருக்கமரம் ஏறுகிறது—நல்ல வேளை—நான் பிழைத்தேன்—பிழைத்தேன்.
என்று அலறியபடி அதை விட்டு ஓடுகிறான்.
★
[தனவணிகர் வீடு
தனவணிகர் வீட்டுவாயிலில் உட்கார்ந்திருக்கிறார். சுமதி வருகிறாள்.
யாரம்மா நீ?
இங்கு பொன்னன் என்று ஒருவர் வேலை செய்கிறார் அல்லவா?—
ஆமாம்—அவன் வெளியே போயிருக்கிறான்.
