உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 52 · 52 / 61

வண்டி போகிறது. இருவரும் மறைந்து மறைந்து பின்தொடருகிறார்கள். வண்டி கடைசியாக ஒரு சிறிய வீட்டு வாயிலில் போய் நிற்கிறது. முத்தாயி உள்ளே தூக்கிச் செல்லப்படுகிறாள். வேதாளமும், சுகதேவும் அதை கவனிக்கிறார்கள்.

சாமி! நாமும் உள்ளே போகலாமா?

பொறு அப்பனே!

பொறுக்குகிறேன்.

வா—நம் இடத்திற்குப் போவோம். முத்தாயி இருக்குமிடம் தெரிந்துவிட்டது. இனி அவள் யாரைச் சேரவேண்டுமோ அவனிடம் அவளைச் சேர்க்க வேண்டியது என் கடமை!

கடமையை விரைவில் நிறைவேற்றுங்கள் ஸ்வாமி!

அப்படியே ஆகட்டும்!—

இருவரும் போய்விடுகிறார்கள்.

★ ★ ★

முத்தன், கடற்கரைப் பக்கம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் முத்தாயியைத் தேடிவிட்டு அங்கும் காணாமல் மனமொடிந்து திரும்புகிறான்.

★

[சுமதி வீடு

முத்தாயியைக் காப்பாற்றிய பெண் சுமதி—முத்தாயி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முத்தாயி! உன்னுடைய கதையைக் கேட்கவே பயமாயிருக்கிறது. ஆனால்—இனிமேல் நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை...நீங்களிருவரும் என் வீட்டிலேயே பத்திரமாக இருக்கலாம்.

சுமதி...நீ இங்கு எப்படி வந்தாய்?—சொல்ல மாட்டாயா?

இதோ பார்—எப்படி வந்தேன் என்று தெரிகிறதா? (கழுத்திலுள்ள தாலியை எடுத்துக் காட்டுகிறாள்)

அடி என் கண்ணே! உனக்குக் கல்யாணமாகி விட்டதா? எங்கே உன் கணவர்?

அவருக்கு உடல்நலமில்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரைப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில்தான் உன்னை அந்த நிலையில் கண்டேன்.

மணமாகி—மஞ்சள் கயிறுடன் புதிதாக இருக்கிறது!—அதற்குள் அவருக்கு உடல் நலமில்லையா?

ஆமாம்—அவர் ஒரு சிற்பி—கோபுரத்தின் மீது ஏறி சிற்பவேலை செய்யும்போது கால் தவறிக் கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டார்—இப்போது சிறிது நலம்.

சுமதி—அன்று, உன்னைப் புரிந்துகொள்ளாமல் கோபமாகப் பேசிவிட்டேன். மன்னித்துவிடு!

அதையெல்லாம் மறந்துவிடுவோம்.

கல்யாணமானதும் உன்னுடைய குறும்புப் பேச்செல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்துவிட்டதே!—