உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 51 · 51 / 61

இருவரும் அவர்களாகவே சிரித்துக் கொள்கிறார்கள்.

சரி—நேரமாகிறது. நான் குழந்தையை கடற்கரைக்கு அழைத்துப் போகவேண்டும்.

சீக்கிரம் வந்துவிடு! மழை வரும்போலிருக்கிறது.

முத்தாயி—குழந்தையை ரதவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு புறப்படுகிறாள்.

★

[கடற்கரை

மழையுடனும் காற்றுடனும் போராடி முத்தாயியின் மீது ஒரு மரமும் முறிந்து விழுகிறது. குழந்தையுடன் முத்தாயியும் கீழே விழுகிறாள். இந்த நல்ல காரியத்தை செய்துவிட்டு அந்தப் பெருங்காற்றும் ஓய்வு பெறுகிறது. அப்போது தனவணிகர் ஓட்டி வரும் வண்டி அங்கே வந்து நிற்கிறது. தனவணிகர் அவசரமாக கீழே இறங்குகிறார். குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். குழந்தைக்கு உயிர் இருப்பதை உணருகிறார். “தெய்வமே! இந்த ஏழையைக் காப்பாற்றினாய்” என்று பாராட்டி விட்டு அந்தச் செல்வர் தன் குழந்தையுடன் வண்டியில் போய்விடுகிறார்.

மரக்கிளையில் அடிபட்டுப் பேச முடியாமல் கிடக்கும் முத்தாயி தனவணிகரின் கருணை வழியும் செய்கையை பார்த்தபடி படுத்திருக்கிறாள். ஏழைகளால் வேறென்ன செய்ய முடியும்!

★

[தனவணிகர் வீடு

குழந்தையுடன் தனவணிகர் உள்ளே நுழைகிறார். அவரது மனைவி குழந்தையை வாரியணைத்துக் கொண்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறாள். அவளும் கேட்கவில்லை; முத்தாயி எங்கே என்று! கேட்பதற்கு ஒருவன் இருக்கிறானே; உரிமை படைத்தவன் அவன் கேட்கிறான்.

நான் போகவில்லை யென்றால் குழந்தை அவ்வளவு தான்! காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து...

ஆ! முத்தாயி எங்கே?

அடடே!... நான் அவசரத்தில் அவளை மறந்தே விட்டேன்.

மறந்து விட்டீர்கள்; என் மனைவியை மட்டும் அல்ல; உங்கள் சீமான் இனம்; இரக்கமெனும் ஒரு பண்பையே மறந்து பல நாளாயிற்று!

வேகமாக ஓட ஆரம்பிக்கிறான். வீட்டுக்காரர் கண்ணில் படும் வரையில் நொண்டி போல ஓடுகிறான். பிறகு பொன்னன் ஓடவில்லை; முத்தனே ஓடுகிறான்!

★

மரத்தடியில் மயக்கமுற்றுக் கிடக்கிறாள் முத்தாயி. அந்தவழியே ஒரு பெண் வருகிறாள். அவள் மரத்தடியில் கிடக்கும் முத்தாயியைப் பார்க்கிறாள். பரபரப்புடன் ஓடிப்போய் அவளைத் தூக்குகிறாள்.

“முத்தாயி! முத்தாயி!” என்று கூப்பிடுகிறாள். முத்தாயிக்குப் பேசமுடியாத நிலை. நல்ல வேளையாக அந்தப் பக்கம் குதிரை பூட்டிய ஒரு பல்லக்கு வண்டி போகிறது. அந்தப் பெண் அந்த வண்டியை நிறுத்தி—முத்தாயியை வண்டிக்காரன் உதவியுடன் வண்டியில் தூக்கி வைக்கிறாள். வண்டி வந்து நிற்பதற்கும்—“முத்தாயி” என அந்தப் பெண் கூப்பிடுவதற்கும்—சரியாக, அந்தச் சமயத்தில் அங்கே வேதாளச் சாமியாரும், சுகதேவனும் வருகிறார்கள்.

அதோ என் முத்தாயி!

என்று கூறி அருகே ஓடுகிறான். உடனே வேதாளம் அவனைத் தடுத்து—

புத்தியற்ற இளைஞனே! கடவுள் இப்போதுதான் உன் காதலியைக் காட்டியிருக்கிறார். அதற்குள் துள்ளுகிறாயே......

ஆகா—கடவுள் மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். கடவுளே—உனக்கு நன்றி.

பால பக்தனே! வா—இந்தப் பல்லக்கு வண்டி எங்கே போகிறதென்று பார்ப்போம்.