இரத்தக் கண்ணீர்
காட்சி 50 · 50 / 61
அதிசயமனிதர் நீர்! அகத்தில் உள்ளதை எப்படிக் கண்டீர்?—எவ்வாறு விண்டீர்?—திரிகால முனரும் தேவாமிர்தமா உண்டீர்?
தம்பி—காதலில் தோற்றவன் நீ என்பது என் ஞானக்கண்ணில் தெரிகிறது—மெய்தானே?
ஆமாம்—எப்படித் தெரியும் உமக்கு?
உத்தமர்களுக்கு உலகின் ஒவ்வொரு கோடியும் தெரியும். நீ ஓர் அரண்மனைவாசி! ஆரணங்கின் மயக்கத்தால் ஆசிரமத்து வாசியாகி விட்டாய்—இல்லையா?
ஆமாம் ஸ்வாமி—ஆரணங்குகளின் மயக்கம் விட்டவர்களே ஆசிரம வாசிகளாக முடியுமென்பார்கள். நானோ—அந்த மயக்கத்தாலே கட்டுண்டு ஆண்டியாகியிருக்கிறேன்.
அதிசயமல்ல—அரண்மனையை விட்டு ஆரண்யம் வந்தான் விசுவாமித்திரன்—அங்கும் விட்டபாடில்லை அழகிகளின் தொல்லை!—அவன் தவத்தின் மேன்மைக்கோர் எல்லை—மேனகா பெற்ற பிள்ளை!
ஆகா! பழுத்த அனுபவமும், கொழுத்த பக்தியும் கொண்ட தவசிரேஷ்டரே! தங்களால் தான் நான் தன்யனாக வேண்டும். வரம் தாருங்கள்.
புரிகிறது அந்த நாலெழுத்து நங்கையை நீ அடைய வேண்டும்.
மு...த்...தா...யி... ஆகா! சரியாகச் சொன்னீர் சற்குருவே! நாலு முத்துத்தான் அந்த நாரி மணியின் பெயர்.
அவளை உனக்கு நான் திருமணம் முடித்து வைக்கிறேன். இளம் வயதில் இந்தக் கோலம் வேண்டாம் உனக்கு! செய்ய வேண்டிய அக்கிரமமெல்லாம் செய்து விட்டு—தள்ளாத காலத்திலே ‘சிவ சிவா’ என்று கூவுவதே மனிதர்க்குத் தகுதியான செய்கை!
(தாடி மீசைகளை கழற்றி எறிந்துவிட்டு) என் முத்தாயி கிடைத்து விடுவாளா? கேடாமல் வந்த என் தெய்வமே—முருகனுக்கும் வள்ளிக்கும் நடுவிலே வந்த நாரதனைப் போல முத்தாயிக்கும் எனக்கும் இடையிலே வந்த இறைவனது திருவருள் பெற்ற என்னப்பனே! போற்றி! போற்றி!
சரி வா—என்னுடைய இருப்பிடத்திற்குப் போகலாம்—விரைவில் முத்தாயி கிடைப்பாள்.
இருவரும் ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள். சாமியாரின் உதவியால் எப்படியும் தன் காதலி கிடைத்து விடுவாள் என்ற ஆசையில் சுகதேவ் வேதாளத்துடன் போகிறான். பாவம்; சர்ப்பத்தின் வாயை சந்தனக் கிண்ணம் என எண்ணிடுவனுக்கும்—சாமியாரை—வேதாளம் என்று உணராத சுகதேவனுக்கும் என்ன வித்தியாசம்!
★
[முத்தன் குடிசை
தனவணிகர் வீட்டுக்கு குழந்தையை வைத்துக் கொண்டு முத்தனும், முத்தாயியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அன்பு மொழியும் பாட்டைக் கேட்டுக் கொண்டு அந்தத்தளிரும் ஈறுகாட்டி சிரிக்கிறது—முத்தன் முத்தாயியிடம்—
இதுமாதிரி நமக்கொன்று...!
இன்னும் எட்டு மாதம் பொறுத்திருங்கள்.
அப்படியா? என்னிடம் சொல்லவே இல்லையே ஆமாம்! நம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?
நம் இருவர் பெயரையும் சேர்த்துவைத்து விடுவது.
அதுதான் சரி—உன்பெயர் முதல் இரண்டு எழுத்தையும் என்பெயர் கடைசி இரண்டு எழுத்தையும் சேர்த்து—உன் முதலிரண்டு எழுத்து... “முத்”—என் கடைசி இரண்டெழுத்து “தன்”—முத்தன்!... சே! சே!... ஹாஹா-ம் என்பெயர் முதலிரண்டு எழுத்து... உன்பெயர் கடைசி இரண்டெழுத்து... என் முதலிரண்டு எழுத்து... “முத்”... உன் கடைசி இரண்டெழுத்து... “தாயி”... முத்தாயி!... அடாடாடா!... வரமாட்டேன் என்கிறதே.
அப்படியானால் இரண்டுபேரின் முதல் இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வைத்துவிடுவோம்—முத்! முத்! மும்முத்!
தம்!
