இரத்தக் கண்ணீர்
காட்சி 54 · 54 / 61
அவர் மனைவி என் வீட்டில் இருக்கிறாள். அவர் வந்ததும் என் வீட்டுக்கு உடனே வரச் சொல்லுங்கள்.
உன்வீடு எங்கேயிருக்கிறது.
அடுத்ததெரு ஐம்பது எண்ணுள்ள வீடு.
வந்தால் வரச் சொல்கிறேன் போ!
★
[சுமதி வீடு இரவு நேரம்
முத்தாயி மட்டும் படுத்திருக்கிறாள். தெருவிலே ஒரு குரல். முத்தாயி எழுந்துவந்து பார்க்கிறாள். சாமியார் வேடத்திலே வேதாளம் நிற்கிறான்.
யாரய்யா என்ன வேண்டும்.?
இங்கு முத்தாயி என்பது யார்?
ஏன் - என்ன விசேஷம்?
சுமதியம்மாள் சொல்லச் சொன்னார்கள் - முத்தன் என்பவருக்கு எதிரிகளால் தாக்குதல் ஏற்பட்டு, மரணவஸ்தையில் ஒரு வீட்டில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
ஆ! அத்தான்!—
நீங்கள் தானா முத்தாயி? என்னோடு வந்தால் அவரை உயிரோடு பார்க்கலாம்.
அத்தான் அத்தான்!... ஐயா அவர் எங்கே யிருக்கிறார் - என்னை அழைத்துப் போங்கள்.
நரியின் பின்னே - மான் தொடருகிறது. வேதாளத்தின் பின்னே முத்தாயி ஓடுகிறாள். இதை ஓரிடத்தில் ஒளிந்து நிற்கும் சுகதேவன் பார்த்து செய்வதறியாமல் பெருமூச்சுவிடுகிறான்.
★
[தனவணிகர் வீடு
முத்தன் சோகத்துடன் நுழைகிறான். தனவணிகர் தாம்பூலம் போட்டுக்கொண்டிருக்கிறார்.
எங்கெல்லாமோ தேடினேன் - என் கண்மணி கிடைக்கவில்லை.
எல்லாம் - கிடைத்துவிட்டாள், அழகர் தெரு, ஐம்பது எண்ணுள்ள வீட்டில் இருக்கிறாளாம்.
ஆ! முத்தாயி! முத்தாயி!
(என்றவாறு ஓடுகிறான். புதுப்பெயர் கேட்டு தனவணிகர் விழிக்கிறார்.)
★
