இரத்தக் கண்ணீர்
காட்சி 48 · 48 / 61
நன்றியுள்ளவனே! கடவுள் நமக்குத் துணை புரியட்டும். சென்றுவா!
★ ★ ★
வேதாளம், மாளிகையை விட்டு வெளியேறுகிறான்—அவன் இதய ஆலயின் ஓசையைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
“துன்பம் துணையோடு வரும். இன்பம் தனியாக வரும் என்கிறார்களே; அது தவறு. வேதாளத்தின்மீது இன்பம் எறும்பு வரிசை போலல்லவா படையெடுக்கிறது! பலருடைய வேதனையிலேதான் ஒருவன் வளமாக வாழ முடிகிறது இந்த உலகத்திலே நானும் உல்லாசமாக வாழவேண்டாமா? ஒருவனை அடித்துத்தான் ஒருவன் சாப்பிடுகிறான். ஈ, சிலந்திக்கு ஆகாரம். சிலந்தி, பல்லிக்கு ஆகாரம். பல்லி, பூனைக்கு ஆகாரம். பூனை குறவனுக்கு ஆகாரம். அதேவிதம்தான், என் வழியும்!
நானும் மனிதன்—எனக்கும் சந்தோஷம் வேண்டும்—சகல செளபாக்கியங்களும் வேண்டும். வேகமாகப் போகும் என்னுடைய வளர்ச்சி. ஒருவேளை என்னை பழுதூரின் பாளையக்காரனுக்கூட ஆக்கிவிடலாம். போகிறபோக்கிலே உழன்ற புத்தன்—காலக்கோளாறால் போதிமரத்தடிக்குப் போனான். பல்லேந்திக் கிடந்தவன் ஜகம்புரட்டும் சாணக்கியனானான்! வேதாளத்தின் முயற்சிகள்; பெளர்ணமிக்காலத்திலே சந்திரனைத் தொட எழும்பும் சமுத்திரத்தின் அலைகளல்ல! கருமேகத்திலிருந்து பூமியைத் தொட முனையும் நீர்த்துளிகள்.
ஒரு குளிர்காற்றுதான் தேவை! கொட்டும், மழை! குவியும் அதிர்ஷ்டம்!”
பேசிக்கொண்டே போய்விடுகிறான்.
★
[அடைக்கலபுரி பட்டினம்
ஒரு தனவணிகர் வீட்டுத் தாழ்வாரம். அங்கே, தன வணிகரும், கையில் குழந்தையுடன் அவரது இல்லக் கிழத்தியும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே—ஒரு கூனன் என்று சொல்லத் தக்க அளவுக்கு முதுகு வளைந்தவனும்—நொண்டியான ஒரு பெரிய மீசைக்கார வாலிபன் நிற்கிறான். அவன் முத்தன் என்று சொல்லத் தேவையில்லை. அவனுக் கருகே முத்தாயி நிற்கிறாள்.
உங்களால் என்ன வேலை செய்ய முடியும்.
இட்ட வேலையைத் தட்டாமல் செய்வோம்.
நீங்கள் இருவருமே, வீட்டு வேலை செய்வ தாயிருந்தால் பரவாயில்லை...
ஆமாம்—அவர் நொண்டி வேலைகள் எதுவும் கவனிக்க முடியாது.
என் குழந்தையை நீ பத்திரமாக வளர்ப்பாயா?
வளர்க்கிறேன்ம்மா!—இதோ குழந்தை கூட என்னிடம் தாவுகிறது பாருங்கள். வாடா கண்ணு!
[குழந்தையை தூக்கிக் கொள்கிறாள்]
உன் பெயர் என்ன சொன்னாய்; பொன்னிதானே—?
ஆமாம்—அவர் பெயர்......
அட நீ சொல்லாதே பாப்பம்—என் பெயர் பொன்னன்.
சரி—பொன்னி, வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளட்டும். பொன்னு! நீ... முடிந்த வேலைகள் பார்!
உத்திரவு!
பக்கத்திலே ஒரு குடிசையிருக்கிறது—அதிலே குடியிருந்து கொள்ளுங்கள். உணவு இங்கே தரப்படும். ஊதியம் எதுவும் கிடையாது தனியாக!
சரி—
மிகவும் வணக்கம்—சொல்லியபடி நடக்கிறோம்.
