உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 47 · 47 / 61

என்னய்யா—எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்.

திருசங்கு—தீயை அணைப்பதாயிருந்தால், எனக்கு நூறு பொன் தரவேண்டும். இல்லையேல் இது

பலதேவரிடம் காட்டப்படும். பாளையக்காரர் குடும்பத்திலே சம்பந்தம் நடத்த சூழ்ச்சிசெய்தாய் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாவாய்—என்ன பதில் சொல்லுகிறாய்?

ஒரு பதிலுமில்லை. நீ எதுவேண்டுமானாலும் செய்துகொள்—நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

அப்படியானால் வந்ததை அனுபவித்துக்கொள். மகளைக் காட்டி மாளிகையைப் பிடிக்க எண்ணினாய்... என் செயல் எண்ணியபடி நடந்தால் சுகன் ஒன்றேது. தூண்டில் போட்டாய் பெரிய மீனைப் பிடிக்க... பாவம் தூண்டியிலேயிருந்த சிறிய மீனும் துள்ளிப்பாய்ந்து விட்டது.

சூழ்ச்சிக்காரா! நீ ஏன் இதில் வீணே தலையிடுகிறாய்... போ உடனே!

பிறகு யார் தலையிடுவது? பலதேவர் குடும்ப பதவைக் கெடுக்க சல்லடம் கட்டிக் கொண்டு நிற்கிறாய் சண்டாளன் நீ! விஷயம் தெரியாத இளைஞனை ஏமாற்றி... விவாக சுப முகூர்த்தமா நடத்துகிறாய்... ரகசிய கல்யாணம்—கண்ணாடி மாளிகை... உன்னை யெல்லாம் விட்டுக்கூடாது. குதூகாரன்! வஞ்சகன்! குடும்பங் கெடுப்பவன்! பெண்ணைக் காட்டி கண்ணை மறைக்கும் பேய்—உன்னை என்னபாடு படுத்துகிறேன் பார்!

வேதாளம் போய் விடுகிறான். திருசங்கு கலங்கிப் போய் வீட்டுக்குள் திரும்புகிறான். எத்தனையோ பேராசைக் கோட்டைகள் எல்லாம் இடிந்து தூளாகிக் கிடக்கின்றன அவன்

முன்னே! பொன்னகருக்குச் செல்ல அவன் அமைத்த நூலேணி சுக்கல் சுக்கலாக அறுந்து போய் விட்டது. மகள் மாளிகை ராணியாகி மகிழலாம் என காத்திருந்தான். இப்போது மாளிகையின் வாயிற்படி ஏறக்கூட அவனுக்கு உரிமையில்லை. அவனைச் சுற்றிலும் பயங்கர மேகங்கள் இருளைப் பொழிகின்றன. அவன் இருதயம் படபடவென அடித்துக் கொள்கிறது. மங்கிப் போய் விட்ட அவனது கண்கள் வீட்டின் உத்திரத்தை கூர்ந்து பார்க்கின்றன. அவனது கையிலே ஒரு அழுத்தமான கயிறு.

அதை உத்திரத்தில் கட்டுகிறான். கதவைத் தாளிடுகிறான்.

“ஆகாயமளாவ ஆசைப்பட்டேன். என் ஆசையெல்லாம், இந்த அழுத்தமான கயிற்று வளையத்துக் குள்ளேயே அடங்கி விட்டது.”

என்று கூறிக் கொள்கிறான். அவ்வளவுதான்! சாவின் மீது பாய்ந்து விட்டான். இனி மேல் அவனை யாரும் குற்றவாளி என்று கூறி கூண்டில் நிறுத்த முடியாது. பலதேவரின் பகையும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.

★

[பாளையக்காரர் அரண்மனை

பாளையக்காரர், கோபாவேசமாக அங்குமிங்கும் உலவிக் கொண்டிருப்பதிலிருந்து இந்தக் காட்சி துவங்குகிறது. வேதாளம், பக்கத்திலே நின்றுகொண்டிருக்கிறான். திருசங்கு, சுகதேவைக் கெடுத்து தன் மகளைக் கொடுக்க முயற்சித்த செய்திகளையெல்லாம் வேதாளம்—பாளையக்காரரிடம் சொல்லிவிட்டான் போலும். இல்லாவிட்டால் பாளையக்காரர் அவ்வளவு கொதிக்க வேண்டியதில்லை.

திருசங்கு...வரட்டும் அவன் இங்கே—என்ன பாடுபடுத்துகிறேன். நல்லவனைப்போல நடந்து நரிவேல நடத்தியிருக்கிறானே—நயவஞ்சகன்!

நல்லவர்களை இந்தக் காலத்தில் நம்பக் கூடாது.

சரி—சுகதேவனை எப்படிக் கண்டுபிடிப்பது?

அது ஒன்றும் பெரிய காரியமல்லே... நான் கண்டுபிடிக்கிறேன்.

எவ்வளவு பொருள் அழிந்தாலும் சரி; என் மகன் என்னிடம் அழைத்துவந்தால் போதும். சுகதேவ் வராவிட்டால்—ராணி இறந்தேவிடுவாள்!

சுகதேவ் காணுமற் போன செய்தி யாருக்கும் தெரியவேண்டாம். நானே தந்திரமாகக் கண்டு பிடித்துவந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன்.

மிகவும் நன்றி. செலவுக்காக ஐநூறு பொன் தருகிறேன். சுகதேவ் கிடைத்துவிட்டால், உமக்குப் பரிசாக ஐநூறு பொன் தருகிறேன்.

வேதாளத்தினால் பேச முடியவில்லை. நல்ல வேளையாக மயக்கமடைந்து விடாமல் சமாளித்துக் கொண்டான். ஆயிரம் பொன்னல்லவா கிடைக்கப் போகிறது அவனுக்கு!—

பெருமைக்கு பிறப்பிடமே! பரிசுக்காகவா நான் பாடுபட்டுப் போகிறேன். பாளையக்காரர் குடும்பத்துக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்யாவிட்டால் பாபமல்லவா பாம்பாக வந்து கடிக்கும்.