உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 46 · 46 / 61

பிறகு எங்குதான் போவது?

சிறுத்தையூர் போய்விட்டால்—நாம் தப்பிவிடலாம். அது வேறு நாடு—வேங்கை புரத்தானுக்கு விரோதமான நாடு! அங்கே வெற்றிவேலன் அதிகாரம் செல்லாது!

சரி—அங்கு செல்லுகிறோம்—நம்மை ஒற்றர்கள் என்று நினைத்து—அந்த நாட்டார் பிடித்து விட்டால் என்ன செய்வது?

ஆமாம்—அதுவும் யோசிக்க வேண்டியதுதான்.

சரி எழுந்திருங்கள்—இருட்டுவதற்குள் எங்கேயாவது சென்று ஒருவழி பார்க்கலாம்.

இருவரும் அதைவிட்டுப் புறப்படுகிறார்கள்.

★

[வேதாளத்தின் அஞ்சல்மனை

வேதாளம் ஓலைகளைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அஞ்சலோடி பக்கத்திலே அமர்ந்து வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கிறான். வேதாளம் ஒரு ஓலையை அவசரமாகப் பிரிக்கிறான். அது:

“அன்புள்ள திருசங்குவுக்கு சுகதேவ் எழுதியது. முத்தாயி என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டாள். அவளைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரையில் ஊருக்குத் திரும்பமாட்டேன். அவளைக் கண்டுபிடிப்பேன். இல்லாவிட்டால் சந்நியாசியாகி விடுவேன். அவளை எனக்கு மண முடிக்க நீர் இவ்வளவு கஷ்டப்பட்டும் முடியாமல் போய்விட்டது. பிற பின்னர்.

சுகதேவன்”

அந்த ஓலையை எடுத்துக்கொண்டு, வேதாளம் புறப்படுகிறான். அவனது சூழ்ச்சி மூளை மீண்டும் வேலை செய்யத் தொடங்கி விட்டதை அவனது கழுகுப் பார்வை நன்றாக உணர்த்தியது. எங்கே இவ்வளவு வேகமாகவும்—ஆனந்தமாகவும் போகிறானோ தெரியவில்லை—பொறுத்திருந்து பார்ப்போம்.

★

[திருசங்கு வீடு

வேதாளம், திருசங்கு வீட்டின் கதவைத் தட்டுகிறான். திருசங்கு வெளியே வருகிறான். அவன் முகம் வாட்டமாக யிருக்கிறது.

என்ன சமாச்சாரம்?

நல்ல சமாச்சாரம்தான்—திருசங்கு! பாளையக்காரர் மகனை நீ ஏமாற்றிக் கெடுத்துவிட்டாய் என்று உன்மீது வழக்கு ஏற்பட்டால் என்ன செய்வாய்?

வழக்கா?

ஆமாம்—அதற்கு இதோ ஆதாரம்! சாமியாராகப் போய்விடப் போகும் சுகதேவின் ஓலையே சாட்சி!

திருசங்குவிடம் கடிதத்தைக் காட்டிவிட்டு தன் கையிலேயே பத்திரப்படுத்திவிடுகிறான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லையே—நான் நினைத்ததைப் போலவும் நடக்கவில்லை போலிருக்கிறதே. அப்படியானால் முத்தாயி எங்கே போனாள்?

எங்கு போனாளோ. என்ன சொல்கிறாய்! பலதேவரிடம் இந்த ஓலையைக் காட்டட்டுமா—அல்லது என்னை நல்லது செய்துகொள்கிறாயா?