உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 43 · 43 / 61

ஆயிரம் செய்வேன் — சொல்லு?

காலையில் எனக்கும் சுகதேவருக்கும் திருமணம்! இப்போது நான் அவரை சந்தித்து சில விஷயங்கள் பேச வேண்டும்! — அவரைப் பார்க்க வேண்டுமென்று மனமும் துடிக்கிறது!

என் ஆசை மகளே! இதுவா பிரமாதம்—இப்போதே அனுப்புகிறேன்—

திருசங்கு, அதைவிட்டு வேகமாக மேல் மாளிகைக்குப் போகிறான். சுகதேவிடம்—

தம்பி! என் தங்கமகள் இன்னும் தூங்கவில்லை.

ஏன்?

எங்கிக் கொண்டிருக்கிறாள்—தங்களைக் காண வேண்டுமென்று!

அப்படியா?

இப்போதே உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

ஆகா என் காதல்தேவி! இதோ வருகிறேன். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருந்தால் சும்மாயிருக்குமா? - மாமா! நீர் நன்றாகத் தூங்கலாம் — நான் வருகிறேன்—

சுகதேவ், உடனே கண்ணாடியிடம் சென்று தன்னை அலங்காரம் செய்து கொண்டு புறப்படுகிறான். இதற்குள்—முத்தன், முத்தாயியிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிவிட்டு மாளிகையை விட்டு வெளியேறி விடுகிறான். முத்தாயி, சுகதேவின் வருகைக்காக காத்திருக்கிறாள். சுகதேவும் ஆனந்த சாகரத்தில் மூழ்கி உள்ளே நுழைகிறான். அவனைக் கண்டதும் அவள் எழுந்து மரியாதையுடன் தில் குனிந்து நாணமுடன் ஒரு மூலையில் போய் நிற்கிறாள்.

கண்ணே! என்னே என் அழகித்தாய்? அட—ஆட பேசமாட்டாயா? இவ்வளவு வெட்கமா உனக்கு?

வெட்கம் ஒன்றுமில்லை. பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் நாணம்.

வா - அருகில் வந்து உட்கார்!

ஊஹூம்! — அதெல்லாம் திருமணமான பிறகு.

திருமணந்தான் ஆகப் போகிறதே—முத்தாயி என்னிடம் உனக்கு இவ்வளவு பிரியம் இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை.

அதிருக்கட்டும் — உங்களிடம் ஒரு சேதி பேச வேண்டும்.

சேதியா?—காதலன்—காதலி—கட்டிலறை—சிற்றின்பக் கூடாரமே தவிர சேதி பேசும் இடமல்ல கண்ணே!

இந்தக் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது.

என்ன பேச வேண்டும் — பேசு!

ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

ஆண் பாதி! பெண் பாதி! ஆணும் பெண்ணும் அர்த்தநாரீசுவரர் களாகவே சிருஷ்டிக்கப்பட்ட வேண்டும் என்பது என் கொள்கை. நான் ஆண்டவனாயிருந்தால் அப்படித்தான் செய்வேன்.

ஆகா — சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் சிக்கலான பெரும் விஷயத்தை! உங்களை அடையும் பாக்கியம் பெற்ற பெண் அதிர்ஷ்டசாலி தான்! — இன்னுமொன்று கேட்க வேண்டும்—