இரத்தக் கண்ணீர்
காட்சி 42 · 42 / 61
இவைகள் எல்லாம் மரத்தடியில் ஒளிந்திருந்த கிழவன் நன்றாகக் கேட்டுக்கொள்கிறான்.
பிறகு மெதுவாக அங்கிருந்து நழுவி நடக்க ஆரம்பிக்கிறான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவனால் வேகமாக நடந்து செல்ல முடிகிறது. அவன் போய்க்கொண்டே இருக்கிறான். கடைசியாக அவனது கால்கள்—கண்ணாடி மாளிகைக்குப் பின்புறமுள்ள ஒரு தோட்டத்தின் பக்கத்தில் போய் நிற்கின்றன. சூனலாயிருந்த அவனது முகம் நிமிர்கிறது. கண்ணாடி மாளிகையை நெருங்குகிறான் கிழவன். மாளிகையின் பலகணிப் பக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிற பெரிய கொடிகளைப் பிடித்துக்கொண்டு மேல் நோக்கி ஏறுகிறான்.
அப்படி ஏறும் முயற்சியிலே வெற்றியும் பெற்றுவிடுகிறான். மாளிகையின் உட்புறத்திலே அந்த கிழவன் இறங்கி விடுகிறான். மெதுவாக நடக்கிறான் பூனைபோல்—ஒரே அமைதி—முத்தாயி இருக்கும் அறையின் பக்கம் வந்துவிடுகிறான். இந்த சமயத்தில் திருசங்குவும்—சுகதேவனும் மாளிகை மேற்புறத்திலே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆகா! இந்த அழகான நிலாவெளிச்சத்திலே இன்றைய தினம்—உம்முடன் நின்றுகொண்டிருக்கிறேன். நாளையதினம் நானும்—முத்தாயியும் இந்தத் தேன் நிலவை அனுபவிப்போம்.
நீங்களும்—நானும் அதிர்ஷ்டசாலிகள் தான் தம்பி! நான் உங்களை மருமகனைப் பெற்றேன்—நீங்கள் என் மகளை மனைவியாகப் பெற்றீர்கள்.
அதிலென்ன சந்தேகம்—இந்த நிலவுகூட அதைத்தான் சொல்லுகிறது.
சரி தம்பி — இங்கேயே இருங்கள் — நான் போய் முத்தாயி தூங்கிவிட்டாளா என்று பார்த்து வருகிறேன்.
ஆமாம். தூங்கிவிட்டால் தூங்கச் சொல்லும். நாளைக்கு நான் தூங்கவிடமாட்டேன்—பேசிக் கொண்டே இருப்பேன்.
திருசங்கு கீழேயிறங்கிப் போகிறான்.
* * *
அங்கே, முத்தாயி இருக்கும் அறைக்குள்ளே கிழவன் நுழைந்துவிடுகிறான். அவனைக் கண்ட முத்தாயி திடுக்கிடுகிறாள்.
“முத்தாயி! பயப்படாதே—நான்தான் முத்தன்” என்கிறான் கிழவன். முத்தாயி அவனைக் கட்டிக்கொண்டு ‘அத்தான்’ என்று இன்பச் சொல்லுதிர்த்து கண்ணீர் விடுகிறாள்.
பேசிக்கொண்டிருக்க நேரமில்லை — உடனே புறப்படவேண்டும்.
நீங்கள் வருவீர்கள் என்று வேதாளம் சொன்னார்.
வேதாளம்! விஷப்பாம்பு அவன். முத்தாயி எப்படியாவது சுகதேவின் நீ இங்கே வரும்படி செய்யவேண்டும்.
சுகதேவனா? ஏன்?
என் தெரியுமா? நாம் இப்போது வெளியேறுவதென்றால் சாதாரணமல்ல—நம்மைச் சுற்றி ஆபத்து காத்திருக்கிறது.
அந்த சமயத்தில் திருசங்கு வரும் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை கேட்டதும், முத்தன் அங்குள்ள திரை மறைவில் ஒளிந்து கொள்கிறான். திருசங்கு, முத்தாயி விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து,
முத்தாயி, இன்னும் தூங்கவில்ல?
தூக்கம் வரவில்லையப்பா! யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன்.
என்னம்மா யோசனை?
அந்த வேதாளம் வந்து — எனக்கு அறிவு புகட்டி விட்டார் — இத்தனை நாளும் புத்தி கெட்டுப் போய் அந்த முத்தனை நம்பியிருந்தேன்.
மகளே! நீ தான் பேசுகிறாயா? — ஆகா — வேதாளம் சொன்னது சரிதான்—முத்தாயி! உன்னைப் பெற்ற பயன் இப்போதே அடைந்தேன்.
அப்பா! ஒரு உதவி செய்வீர்களா?
