இரத்தக் கண்ணீர்
காட்சி 41 · 41 / 61
வேதாளம், முத்தாயி இருக்குமிடத்திற்குச் செல்கிறான். திருசங்கு, படிகளில் ஏறி சுகதேவிடம் போய் விடுகிறான். முத்தாயி தரையில் விழுந்து கிடப்பதை வேதாளம் பார்க்கிறான்.
முட்டாள் பெண்ணே! எழுந்திரு! ஏன் இப்படிப் படுத்திருக்கிறாய்? பேசமாட்டாயா? சரி தான் துக்கப்பட்ட இதுதான் நேரமா? கடல் குமுறிக் கொண்டிருக்கிறது - நீ என்னமோ கட்டு மரத்தில் உட்கார்ந்து ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கிறாயே! ஆகவேண்டியதைப்பார். அன்புள்ள சிறுமியே! அழுவதால் ஆபத்தைக் கரைத்துவிட முடியாது!
முத்தாயி வேதாளத்தைப் பார்த்து எழுந்து உட்காருகிறாள்.
ஏன் அழுகிறாய்?
ஊர் சிரிக்கிறது! நான் அழுகிறேன்!
உண்மைதான் ஆணும் கொழுந்து மனம் படைத்த கோதையே-கொந்தளிப்பிலிருந்து மீள்வதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணருவாய்!
மீள்வதற்கு வாய்ப்பா?
ஆமாம், வாய்ப்புத்தான்! உன் விடுதலைதான்! வேதனை விலகுகிறது என்ற அறிகுறி தான், வேதாளத்தின் வடிவத்திலே வந்திருக்கிறது.
என்ன சொல்கிறீர்கள்?
முத்தனும் நானும் எவ்வளவு நேசமுடன் பழகினோம் என்பது உனக்குத் தெரியாது. நீ கொடுத்தனுப்பிய பொன்னி சமதி, வாயில் போட்டுக் கொண்டு விட்டாள்! முத்தன் பாசறை சிறையில் அடைக்கப்பட்டு விட்டான். நான் அரும்பாடு பட்டு சேமித்து வைத்திருந்த திரவியத்தைக் கொடுத்து, இப்போது அவனை மீட்டு விட்டேன்.
ஆ! என் முத்தன் விடுதலை அடைந்து விட்டாரா?
அய்யோ. பரிதாபத்துக்குரிய பாவையே—தூங்கமில்லாத உனக்கு இவ்வளவு கஷ்டங்கள் வரலாமா? இன்னும் கேள் இன்பச் செய்தியை! உன் அப்பன்-கொடியவன் உன்னை ஏமாற்றி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தான் என்பது எனக்குத் தெரிந்து—உடனே ஓடி வந்தேன் உன்னைக் காப்பாற்ற! கல்யாண விருந்தினன் போல வந்து என் நண்பனின் காதலியை விடுவிக்க முயலுகிறேன்!
அப்பா, நீங்கள் பல்லாண்டு வாழ்க ...
இந்த அக்கிரம உலகத்தில் என்னம்மா ஆயுள் நீளவேண்டும் — அது தொலையட்டும்—இதைக்கேள் இளஞ்சிட்டே! இன்றிரவே முத்தன் இங்கு வருவான் — நீ அவனுடன் புறப்பட்டு வந்துவிடு!
அவர் வருவாரா?
வராமல் இருப்பானா? ஜாக்கிரதை—மிகவும் தந்திரமாக நீங்கள் இருவரும் வெளியேறவேண்டும். சரி, நான் அதிக நேரம் தாமதிக்கக் கூடாது — வெளியே சென்று வேண்டியதைக் கவனிக்கிறேன்.
உங்களே எப்படி நான் வாழ்த்துவேன்! நீங்கள் பரோபகாரி — நல்லவர் — உண்மையின் உருவம்—உத்தம சிரேஷ்டர்.
உலகத்திற்கு நல்லது கெட்டது தெரிய வில்லையம்மா—ஜாக்கிரதை—நான் வருகிறேன்.
வேதாளம் வெளியேறுகிறான். வேதாளத்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருசங்கு — ஆவலுடன் “என்ன ஆயிற்று” என்று வினவுகிறான். “வெற்றிதான்” என்று வேதாளம் கூறியதும் திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. இருவரும், சுகதேவ் இருக்குமிடத்திற்குச் செல்லுகிறார்கள். சுகதேவ் வேதாளத்தை மிகவும் உற்சாகமுடன் வரவேற்கிறான். இங்க நிலமை இப்படியிருக்க—முத்தன் என்ன ஆனான் என்று பார்ப்போம்.
★
[ஆனந்தபுரம்
ஆனந்தபுரத்தின் ஆற்றங்கரை யோரமாக ஒரு வயதான கிழவன் கம்பூன்றி நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவனது வெண்ணிறத் தாடி நிலவிலே அசைந்தாடியபடி இருக்கிறது. கூரிய கண் படைத்த அவனுக்கு காதுகளும் மிகக் கூர்மை போலும்! ஏனெனில், சில குதிரைகள் தனக்கும் சப்தத்தைக் கேட்டு ஒரு மரத்துக்குப் பின்னே ஒளிந்துகொள்கிறான். சப்தம் வந்த திசை நோக்கிப் பார்க்கிறான். நாலைந்து குதிரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன் பக்கத்திலே சில வீரர்கள் ஒளிந்த நிலையில் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிழவனும்—அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை இமை கொட்டாமல் கவனிக்கிறான். குதிரைகள் இருக்குமிடத்தை நோக்கி ஒரு மனிதன் மெதுவாக நடந்து வருகிறான். அவன் வேதாளம்தான்! அவனைக் கண்டதும் வீரர்கள் எழுந்து நிற்கிறார்கள். வேதாளம் மெல்லிய குரலில் பேசுகிறான்.
“முத்தாயி எப்படியும் வெளியேறிவிடுவாள். ஏனெனில் அவளுக்குத் திருமணம் பிடிக்கவில்லை. முத்தனும் அவளும் இந்த ஊராக கடந்து செல்ல இதைத்தவிர வேறு வழியில்லை. நாம் மிகவும் கவனிப்பாக இருக்கவேண்டும். முத்தாயியை மட்டும் தாக்கிக்கொண்டு கிளம்பி விடுவோம்—எவ்வோரும் விழிப்பாக இருங்கள்.”
