உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 40 · 40 / 61

எதுவும் சொல்ல வேண்டாம்! எல்லாம் விளங்கி விட்டது. சிப்பியே முத்தைக் கொண்டுவந்து சேற்றில் போடுகிறது. செந்தாமரைக் கொடியே, இதழ்களை உதிர்த்து எருமைக்குத் தருகிறது.

அழகாகப் பேசுவது பெரிதல்ல. நீ இப்படிப் பேச காரணமாயிருக்கிற கல்வி, நான் பாடுபட்ட திரவியத்தால் கிடைத்தது உனக்கு—காதல் இதனை கண்டபடி கத்துகிறதே! அந்த முத்தன் உன்னுடைய அழகைத்தான் காதலிக்கிறான். ஞாபக மிருக்கட்டும்—பாளையக்காரர் மகன் எந்த அழகுக்காகத் தவங்கிடக்கிறானே, அந்த அழகான உடல், நான் வளர்த்தது — நான் வளர்த்தது! எனக்கு துரோகம் பண்ணாதே.

சே! உங்கள் மகளிடமா இப்படிப் பேசுகிறீர்கள்?

மகள்! மகளாயிருந்தால் தகப்பனுடைய மனதை இப்படி எரிய விடுவாளா? நீ மகளாயிருந்தால் — ஒரு வயதான தகப்பன். வாஞ்சையுள்ள தகப்பன்—வறுமையிலே பல நாள் கஷ்டப்பட்டவன்—இப்போது வாழ்ந்து பார்க்கலாமென்று நினைக்கிறேனே—அதற்குத் துணை புரிவோம் என்று எண்ணமாட்டாயா?

நான் வாழ்வதற்காக—உன்னை யென்ன; தீயிலா குதிக்கச் சொல்லுகிறேன்? பெரிய தியாகமா பண்ணச் சொல்லுகிறேன்? தேடக் கிடைக்காத இடம்—அந்த இடத்து தெய்வமாக வைத்துப் போற்றுகிறேன் என்கிறேன், நீ தேம்புகிறாய்—விம்முகிறாய்—புலம்புகிறாய்—புத்தியற்றவளே!

அப்பா—ஒரே ஒரு உதவி செய்யுங்கள்—என்னைக் கொன்று விடுங்கள்!

கொல்வதற்காக இவ்வளவு செலவழித்து வளர்க்க வேண்டியதில்லை உன்னை!

வளர்த்ததற்காக, உயிரோடு வைத்துக் கொல்லுகிறேன் என்கிறீர்களா? அப்பா! என்ன சித்ரவதை செய்யாதீர்கள்—உங்கள் மகள் கேட்கும் கடைசி வேண்டுகோள்—வெளியிடும் இறுதியான ஆசை—என் வாழ்வை நெருப்பாக்கி விடாதீர்கள் அப்பா!

எத்தனையோ ஆசைகள் உனக்கு நான் நிறைவேற்றியிருக்கிறேனே — நீ தான் எனது முதலும் கடைசியுமான இந்த ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாதா?

பல முறை உனக்கு இளநீர் வாங்கியிருக்கிறேன். ஒரு முறை உன் தலையில் விழுகிறேன் என்று தென்னை மரம் சொல்வதற்கும் — நீங்கள் சொல்வதற்கும் என்னப்பா வித்தியாசம்?

ஓ — அதிகப் பிரசங்கி!— அடங்கிக்கிட!— காலையிலே உனக்கும், இளவரசருக்கும் திருமணம். தயாராகிக்கொள்!—

திருசங்கு வேகமாகப் போய் விடுகிறான் அதை விட்டு. முத்தாயி அங்கேயே சுருண்டு விழுகிறாள். தெரு பக்கமாகப் போன திருசங்கு அங்கே வேதாளம் வருவதைப் பார்க்கிறான். வேதாளத்தைக் கண்டதும் அவனுக்கோர் புது நம்பிக்கை பிறக்கிறது. அவனது யோசனைப்படி தானே ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையில் ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே திருசங்கு ஆவலுடன்—

வாருங்கள், நல்ல சமயத்தில் வந்தீர்கள்.

என்ன திருசங்கு எல்லாம் நல்லபடி ஏற்பாடாகி விட்டதல்லவா?

ஏற்பாடுகள் எல்லாம் சரி, ஒரே ஒரு குறை தான்.

என்ன அது?

சுகதேவை மணந்திட முத்தாயி மறுக்கிறாள்.

சரி தான் போ! சாப்பாடு தயாரா, சோறு தான் இல்ல என்பது போல் இருக்கிறது இது! இருவருமே ஒன்றுபட்ட காதலர்கள் என்றீர்களே முன்பு!

முத்தாயி ஒரு முரட்டுப் பெண்! அவள் பிடிவாதத்தை என்னால் மாற்ற முடியவில்லை நீங்கள் தான் எப்படியாவது......

முயற்சிக்கிறேன் இப்போது அவள் எங்கே இருக்கிறாள்.

உள்ளே தானிருக்கிறாள்.

சரி நீங்கள் யாரும் வராதீர்கள் நான் அவளை சரி செய்கிறேன்!

நான் அதிர்ஷ்டசாலி தான் - எப்படியாவது அவள் நல்வழிக்கு அழைத்து வாருங்கள்.