இரத்தக் கண்ணீர்
காட்சி 39 · 39 / 61
முத்தன் வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறான். அவனுக்கு ஒரே குழப்பம். அதற்குள் தளபதியின் அறையில் ஒரு சிறப்பு சப்தம் கேட்கிறது. முத்தன், ஒளிந்து நின்று கவனிக்கிறான். உள்ளே தளபதியும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சபாஷ் பிரபுவே! மிகவும் நன்றாக நடித்து விட்டீர்கள்.
சரியானபடி ஏமாந்து விட்டான் பயல்! வேதாளம்! அடுத்த ஏற்பாடு என்ன?
அடுத்ததா? சொல்கிறேன். முத்தன் எப்படியும் மீட்டு விடுவான். இருவரும் தப்பி ஓடி வருவார்கள். அப்போது நமது குதிரை வீரர்கள் சிலர் அவர்களைத் தாக்க வேண்டும்—முத்தனை விட்டு முத்தாயியைப் பிரித்து—அவளைத் தங்களிடம் கொண்டு வந்துவிட வேண்டும். முத்தன்—காதலி போன இடம் தெரியாமல் தவிப்பான். எங்கேடாவது கெட்டுப் போகிறான் நமக்கென்ன?
சரி, அப்படியானால் முத்தாயியைத் தூக்கிவர உமது தலைமையிலேயே குதிரை வீரர்களை அனுப்புகிறேன்.
சந்தோஷம்! நானும் உடனே புறப்பட்டு ஆனந்தபுரம் செல்கிறேன்! ஏனெனில் முத்தாயியை உயிரோடு உங்களுக்குத் தரவேண்டுமல்லவா?
சரி, வேதாளம்!
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்தன் ஒரு தீர்க்கமான முடிவுடன் அதை விட்டுப் போய்விடுகிறான்.
★
[ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகை
[இரவு நேரம்]
திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெறுகின்றன. கண்ணாடி மாளிகையின் உச்சியிலே சுகதேவ் நின்று கொண்டு முத்தாயி வருகையை எதிர்பார்த்திருக்கிறான். வாயிற் புறத்தில் குதிரை வண்டி வந்து நிற்கிறது. அதிலிருந்து திருசங்கும், முத்தாயியும் இறங்குகிறார்கள். முத்தாயி மேலே நிற்கும், சுகதேவனைப் பார்க்கவில்லை. அவள் சந்தோஷமுடன் உள்ளே செல்கிறாள். அதற்குள் மாளிகையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்ட சுகதேவன் அவர்களைக் கூடத்தில் சந்திக்கிறான்.
சுகதேவனைக் கண்டதும் முத்தாயிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. உலகமே சுழல்கிறது அவளுக்கு! மயக்கமுற்றுக் கீழே விழுந்து விடுகிறாள்.
என்ன என்ன?
ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிட்டது! சந்தோஷத்தால் இருதயம் பட்டபாட்டுக்கு மல்லவா தம்பி!—
ஆமாம் ஆமாம் — எனக்கூட இப்போது அப்படித்தான் அடித்துக் கொள்கிறது!—
சரி — நீங்கள் மேலே போங்கள்!— நான் பிறகு வருகிறேன்.
மேலே போய்விடுகிறேன், ஆனந்தமாகப் பாடிய படியே!—
* * *
மாளிகையின் ஒரு அறையிலே மயக்கம் சிறிது தெளிந்து கண்விழிக்கிறாள் முத்தாயி! அவள் விழிகளில் நீர்வீழ்ச்சிகள் கொட்டுகின்றன. பக்கத்திலேயிருக்கும் திருசங்கு, தன் கையிலே வைத்துள்ள ஆபரணங்களை அவளிடம் காட்டுகிறான்.
முத்தாயி—இவைகளைப் பார்! முத்துமாலையும் ரத்தினமும் வைரமும் பதித்திட்ட ஆபரணங்கள்! பளபளக்கும் பட்டாடை! ஜொலிக்கும் வைரம்!—மதிப்பு வாய்ந்த ரத்தினம்!—பெண்ணே! இவைகள் எல்லாம்.....
உங்கள் மானத்திற்குத் தரப்பட்ட விலை!—உங்கள் மகள் மீது வீசப்படும் வலை!
முத்தாயி அந்த ஆபரணங்களைக் கீழே தட்டி விடுகிறாள். அவைகள் இறைந்து சிதறுகின்றன.
சொல்வதைக் கேள்!
