இரத்தக் கண்ணீர்
காட்சி 38 · 38 / 61
வேதாளமா? வரச்சொல்—வரச்சொல்!
வீரன் வெளியே போகிறான். தளபதியின் ஆவல் வீறிட்டெழுகிறது. வேதாளம் உள்ளே நுழைகிறான்.
அன்பு தங்கிய பிரபுவே! அடியேன் வணங்குகிறேன்.
வாரும் வேதாளம்! வெற்றியோடுதான் வந்திருப்பீர் என எண்ணுகிறேன்.
வெற்றியின் ஆரம்பந்தான் பிரபு! நமது புறா, புது வேடனிடம் சிக்கி இருக்கிறது.
என்ன — என்ன—?
முத்தாயி பற்றித்தான் சொல்லுகிறேன். முத்தனென்ற மரக்கிளையிலே இருந்த புறா, நீங்கள் வைத்த கண்ணியிலே விழாமல் — இப்போது, சுகதேவன் என்ற வேடனின் குறிக்கு இலக்காகித் தவிக்கிறது!
அப்படியா?—இனிமேல் எனக்கு நம்பிக்கை இல்லை.
தேருங்கள்—புயலடித்தாலும்—புறா—அந்தக் கிளையை விட்டுக் கிளம்பாது. அதனால், வேடன் குறி பார்ப்பதற்குள், கிளையை வெட்டி விட்டால் புறாவும் கிளையும் நீங்கள் வைத்த கண்ணியிலே விழுந்துவிடும். பிறகு கிளையை எடுத்து எறிந்து விட்டு, அந்தத் தங்கப் புறாவை தங்கள் புறாவாக்கிக் கொள்ளலாம்.
புரியும்படி சொல்லும்—புரியும்படி சொல்லும்.
சொல்கிறேன். சுகதேவனுக்கும், முத்தாயிக்கும் ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திருமணம் நடக்கப்போகிறது. நீங்கள், முத்தனிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, அவனைத் தந்திரமாக ஆனந்தபுரம் அனுப்பவேண்டும். அவன் போனால் அவனுடன் முத்தாயி கிளம்பி விடுவாள்!—பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம். உடனே முத்தனை அனுப்புங்கள்!
சரி! நீர் சற்று மறைவாக இரும்! நான் முத்தனை அழைக்கிறேன். ஏ, யாரங்கே? (வீரன் வந்திட) உடனே முத்தனை இங்கு கொண்டு வா! (வீரன் போகிறான்)
முத்தன் கட்டுப்பட்டிருக்கும் இடம்.
நில விலங்கிலிருந்து சற்று தண்டனையைத் தளர்த்தி, விலங்குமட்டும் பூட்டப்பட்டு முத்தன் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனை வீரன் வந்து அழைத்துச் செல்கிறான். முத்தன் தளபதியின் அறையில் நுழைகிறான். வேதாளம் அங்கில்லை.
வா—முத்தா! வா! நல்ல வாலிபனே! உன்னை நான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். முதலில் உன்னை நான் கண்டபோதே, குறுகுறுத்த உன் கண்களும் — பரபரப்பான உன் உடல் அசைவுகளும்—என் கருத்தைக் கவர்ந்தன. ஆனால் பாளையக்கார பலதேவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு உன்னை அதிகம் துன்புறுத்தி விட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்.
அய்யா! திடீரென்று மாறி விட்டீர்களே! நான் திக்கற்றவன் என்பதை எப்படி உணர்ந்தீர்கள்? தெய்வமும் வந்து சொல்லியிருக்க முடியாதே!
மனிதனுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறது. மனிதன் மிருகமாக மாறும்போது அந்த மனச்சாட்சி புறாவாக மாறி அடங்கிக் கிடக்கும். மிருகத்தன்மை தோல்வியடையும் நேரத்தில் புறாவாகிப் போன மனச்சாட்சி புள்ளி மயிலாக எழுந்து நடனமாடும்! அந்த ஆட்டத்திலே தான் உண்மையின் அழகு ஒளிவிட்டு ஆரம்பிக்கிறது.
ஆகா! சிறப்பான கருத்து. இந்த இடத்திலேயும் பிறக்கிறது—சேற்றிலே செந்தாமரை முளைப்பது போல்!
முத்தா! என் கண்ணைத் திறந்துவிட்ட நிகழ்ச்சி எது தெரியுமா? உன் அன்புக் காதலி முத்தாயியை சுகதேவன், பலவந்தமாக மணம் புரிய போகிறான். இந்தச் சேதி கேட்டதும் உன்பால் எனக்கு அன்பு ஏற்பட்டது. உனது காதலி உன் உதவியை எதிர்பார்த்து ஊசலாடிக் கொண்டிருக்கிறாள். நீ உடனே போக வேண்டும் அவளைக் காப்பாற்ற வேண்டும்.
உண்மையாகவா?
ஆமாம். ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திருமணம்! அவன் ஆவி பிரிவதற்கு முன் நீ ஓடு! முத்தா! ஒன்று சொல்லுகிறேன். நீயும் முத்தாயியும் என் பாதுகாப்பில் இந்த ஊரிலேயே குடும்பம் நடத்தலாம்!—அதற்கென்ன இப்போது அவசரம்—உடனே போ! உன் உயிரினையானைக் காப்பாற்று!—உங்களின் உண்மைக் காதல் மலர் என்னுள் உதிர்ந்து போவானேன்?
மிகவும் நன்றியுடையவன் அய்யா நான்!
இன்றே! இப்போதே ஓடு! இழந்த காதலைப் பெற்றிடு!
