உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 37 · 37 / 61

அப்பா!

உற்சாகமாயிரு! உன் கவலை யெல்லாம் நீங்கும். மடத்திலே குருபூஜை வேறு நடக்கப்போகிறது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமாயிருக்கும். நீயும் குதூகலமாயிரம்மா!

ஒளிக்குப் பக்கத்திலே யிருந்தாலும் நிழல் இருளாகத்தானிருக்கும். உற்சாக நிகழ்ச்சிகள் எவ்வளவு இருந்தாலும், என் உடைந்த உள்ளத்திற்கு மருந்தேது தந்தையே!

மகளே! நான் செய்த தவறுகளை மறந்து விடு. பாழும் பொருளாசையால் பைத்தியக்காரன் போல நடந்துவிட்டேன். உங்கள் தூய்மையான அன்பைத் துண்டாட நினைத்த இந்த துரோகியை மன்னித்துவிடம்மா!

அப்பா!

[என்று கதறி தந்தையின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.]

அழாதே—உன்னையும், முத்தனையும் சேர்த்து வைக்க தீர்மானித்துவிட்டேன். உடனே புறப்படு!

எங்கேயப்பா?

கேளம்மா! நீ முத்தனைக் காதலிக்கிற விஷயம் பாளையக்காரருக்குத் தெரிந்துவிட்டது. சுகதேவனுக்கும் உனக்கும் திருமணம் நடப்பதை விரும்பாத பாளையக்காரர் உன்னை உடனே முத்தனுக்கு மணமுடிக்கும்படி கட்டளையிட்டுவிட்டார்!

ஆகா! அவர்கள் சுயநலம் என் சோகத்தைத் துடைத்துவிட்டது!

முத்தனை விடுதலை செய்யுமாறு பாளையக்காரர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களும் அவனை விட்டுவிடுவார்கள்.

வந்துவிடுவாரா அவர்?...

இங்கு வரமாட்டான். பாளையக்காரர் உத்திரவு என்ன தெரியுமா?...

சுகதேவன், உன்னைத் தூக்கிப்போய் கல்யாணம் செய்திட முடிவு செய்திருக்கிறான். அதிலிருந்து தப்புவதற்கு, உடனே நாமிருவரும் ஆனந்தபுரம் என்ற ஊருக்கு செல்லவேண்டும். அங்கே முத்தன் வருவான். உங்கள் திருமணம் முடிந்துவிடும். எல்லா ஏற்பாடுகளையும் உன் நன்மைக்காக பாளையக்காரரே கவனிக்கிறார்.

அப்பா!... என்னையே என்னால் நம்பமுடியவில்லை. இந்த இன்பமான செய்தியைக் கொண்டு வந்த உங்களை வணங்குகிறேன். நான் ஏதாவது வேகத்தில் பேசியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள்!

சரியம்மா! உடனே ஆனந்தபுரம் புறப்பட ஏற்பாடுகளைக் கவனிப்போம்.

வேறு என்ன வேலையப்பா அதைவிட, எனக்கு!

புறப்படத் தயாராகிறார்கள். வண்டியும் வாசலில் வந்து நிற்கிறது. முத்தாயி களிநடனம் புரிந்தபடி காதலனைக் காண பயணமாகிறாள்.

★

[வேங்கைபுரம் தளபதி மாளிகை

தளபதியின் கையிலிருக்கும் இறகு பேனா எதையே கிறுக்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நெஞ்சிலே விழும் இறல் எட்டியும் விழுவதுண்டு. அதனால் தான் போலும், வெற்றி வேலன்—“முத்தாயி முத்தாயி” என்று கிறுக்கிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு வீரன் வந்து வணங்கி நிற்கிறான்.

என்ன ?

வேதாளமாம்—தங்களைக் காண அனுமதி கேட்கிறார்.