உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 34 · 34 / 61

★

[சுகதேவின் மாளிகை

திருசங்கு எதிரே உட்கார்ந்திருக்கிறான்.

சுகதேவ் பேரானந்தமுடன் பேசுகிறான்.

நானும் முத்தாயியும் காந்தர்வ மணம் புரிந்து கொண்டோம். என்னை மறக்க மாட்டேன் என்று கடவுள்மேல் சத்தியம் செய்தாள்.

ஆமாம்.

நந்தவனத்திலே ஓடினோம்—நதியிலே நீராடினோம்—'முத்தாயி' என்றேன்; அவள் நாதா என்று கூப்பிட்டாள். கண்ணை அசைத்தாள்—கழுத்துக்கு வைர மாலை! அவள் இடை நெளிந்தது—இரத்தின ஒட்டியாணம் பூட்டினேன்! நகைகளைப் போட்டுக் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தாள்—சிங்காரி! ஒய்யாரி! கண்ணே! மயிலே! கட்டிலரைக்கு வாடி என்றேன், வரவும் இசைந்தாள்!

ஆகா! அதற்குள் விழித்துக்கொண்டேன்!... எல்லாம் கனவு திருசங்கு—எல்லாம் கனவு!

கனவாகாது தம்பி—இந்தத் திருசங்கு இருக்கும் வரையில்!

தங்கமும் வைரமும் தயார்—அதை சங்கிலியாக்குவதற்கு என் தகப்பனார் சம்மதிக்க வேண்டுமே!—

அதற்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.

கஷ்டமா?

ஆமாம். அர்ச்சுனன் பாம்பானான் அல்லியை மணக்க! வேலன், கிழவனானான் வள்ளியை மணக்க!

நான் என்ன ஆகவேண்டுமோ, தெரியவில்லையே!

அப்போது வேதாளம் அஞ்சல் ஓலைகளின் அடுக்குடன் அங்கு நுழைகிறான்.

நீங்கள் அடுத்த பாளையக்காரராக வேண்டுமே—இதிலென்ன சந்தேகம்?

அடேடே! வேதாளமா?... நல்ல சமயத்தில் வந்தீரய்யா நாரதர் போல!—உட்காரும்.

என்ன ஆலோசனை பலமாக நடக்கிறது?...

எனக்கு ஏதாவது ஓலையுண்டா?...

உண்டு உண்டு!... இதோ!... (ஒரு ஓலையைக் கொடுக்கிறான்)

உம்முடைய மூளையைப்பற்றி எனக்கு நிறைய நம்பிக்கை!... ஆகையால் இந்த முக்கியமான நேரத்தில் ஒரு முதல் தரமான யோசனை சொல்லும்.

விஷயத்தைச் சொல்லாமல் யோசனை கேட்டால் எப்படித் தம்பி சொல்லுவது?

இது தேவ ரகசியம்—நீர் யாரிடமும் சொல்லக் கூடாது! தெரியுமா?