இரத்தக் கண்ணீர்
காட்சி 32 · 32 / 61
★
[பழுதூரின் எல்லை
ஐயனார் கோவில் ஒன்று இடிந்து கிடக்கிறது. அங்கே வெற்றிவேலன் படை நிற்கிறது. பின் தொடர்ந்து ஊர்மக்கள் யாருமில்லை. முத்தன் விலங்குடன் பல்லக்கு வண்டியில் ஏற்றப்பட்டு இருக்கிறான். வண்டியிலிருந்தபடியே, வேதாளமும் வெற்றிவேலனும்—முத்தாயி பற்றி திட்டம் தீட்டுகிறார்கள்.
சரி வேதாளம்—ஊரின் எல்லை வந்து விட்டது! நீர் திரும்புகிறீர் என்பதுபற்றி வருந்துகிறேன்.
பிரபு, உங்கள் அன்புக்கு நன்றி.
முத்தாயி விஷயம் மறந்துவிடாதீர்! அவளை என்னால் மறக்க முடியவில்லை.....
மறப்பேனா நான்.
அவள் ஒரு வீணை! அழுதுகொண்டு தான் பேசினாள். ஆனால் ஒவ்வொரு சொல்லும் சுருதி யோடு சேர்ந்து அதிர்ந்தது.
அந்த வீணை தங்களிடம் வரவேண்டும்—அவ்வளவுதானே! தங்களின் நித்திரா மண்டபத்தின் நிரந்தர வீணையாகவே அவளை ஆக்கிவிடுகிறேன்.
வேண்டாம் வேண்டாம். திருமணம் என்கிற அளவுக்கு போய்விடாதீர்! தேனும் தெவிட்டி விடும், திருமணம் என்ற கிண்ணத்தில் ஊற்றினால்! மங்கைகள் மலர்களாகவும்—ஆண்கள் வண்டுகளாகவும் இருப்பதையே நான் விரும்புகிறேன். அதுவே என் லட்சிய கீதமுங்கூட!
உங்கள் சித்தத்திற்கு, நான் தான், தாளம்!
வேதாளம்! மகிழ்ந்தேன். சென்று வருகிறேன். போனதும் ஓலை எழுதுகிறேன். அந்தப் பொன்னவிர்மேனியாளை விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்யும்!
ஆற்றல் நிறைந்த பிரபுவே! ஆணைப்படி நடக்கிறேன்.
வருகிறேன்.
வேதாளம் வணங்குகிறான். வண்டிகள் வேகமாகப் புறப்பட்டு வேங்கைபுரம் நோக்கி ஓடுகின்றன. முத்தன் கண்களிலே வழியும் கண்ணீரைப் பற்றி கவலைப்பட அங்கு யாருமில்லை.
★
[பாளையக்காரர் அரண்மனையில்!
மாயங்காத சாமியார் பல்லக்கில் வந்து இறங்கி உள்ளே வருகிறார். உள்ளே, பலதேவர் அவர் மனைவி, பூங்காவனம்—ஆகியோர் இருக்கிறார்கள். பலதேவர் சாமியாரை எதிர்கொண்டழைக்க ஓடுகிறார். பூங்காவனம் சாமியார் வருவதைப் பார்த்து முகஞ்சுளிக்கிறாள். சாமியார் வந்து ஆசனத்தில் அமருகிறார்.
என்ன திடீரென்று?
ஆமாம்—மடாலயத்துக் குரு பூஜை வருகிறது!—
அதற்கென்ன—பிரமாதமாய் நடத்தி விடுவோம்! நாளையதினம் மடத்தில் என்ன உபதேசமோ?
“தவ நெறியும்—கற்பு நெறியும்” என்பது பற்றிப் பேசப் போகிறேன்.
அப்போது, அங்கு நிற்பதற்குப் பிடிக்காத பூங்காவனம்—அதைவிட்டு நகருகிறாள். ஆனால் சுகதேவின் குரல் அவளைத் திரும்பச் செய்கிறது.
