உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 25 · 25 / 61

என்னப்பா! என்ன வேண்டும்?...

என்னை மன்னிக்கவேண்டும்.

விஷயத்தைச் சொல்.

சந்தர்ப்பம் சரியில்லை ...... படையில் சேர முடியவில்லை.

என்ன விளையாடுகிறாய் ..... என்னை யாரென்று எண்ணிவிட்டாய்? படையில் சேரவும்—விலகவும்—உன்னிஷ்டப்படி நடக்கவும்—அனுமதி கிடையாது இங்கே. ஆளப்பார்! மலைபோல் இருக்கிறான்—எலிபோல் பயப்படுகிறான். கோழை.

தயவு செய்து அந்த வார்த்தை சொல்லாதீர்கள். நான் ஏழையாயிருக்கலாம்—ஆனால் கோழையல்ல!

வாய் நீட்டாதே! வாள் நீளும்! மரியாதையாக நில்! மரியாதையாகப் பேசு!

படையில் சேருவதற்கு கட்டாயம் எதுவும் இல்லையல்லவா!

சேருவதற்கு கட்டாயமில்லை! ஆனால் சேர்ந்து விலகுவதற்கு உன் இஷ்டமில்லை.

அதற்குத்தான் நூறு பொன் தண்டம் செலுத்திவிட வேண்டும் என்று நிபந்தனையிருக்கிறதே.

இவன் மிகவும் திமிர்பிடித்தவன்—உன் வால் ஒட்ட நறுக்கவேண்டும். இந்தத் தேகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறாய் ... தேசத்திற்காகத்தான் பலிகொடேன்.

பலி கொடுக்கலாம்—எமக்கென்று ஒரு தேசம் இருந்தால்! பழுதூர் அடிமை பூமி. இதை மீட்க ஒரு படை திரளட்டும். அதிலே சேராதவர் அனைவரும் செத்தவராகவே கருதப்படுவர்.

என்ன சொன்னாய், ராஜத்துரோகி!

அப்படியெல்லாம் குற்றம் சாட்டிவிடாதீர்கள். என்னை வீரனில்லை யென்றீர்களே; அதற்கு விளக்கம் தந்தேன் அவ்வளவுதான்.

என்னை எதிர்த்துப் பேசிய முதல் ஆள் இவன்தான்! இவனுக்கு ஒரு முடிவு தேடாமல் விடமாட்டேன்.

கொஞ்சம் வாருங்களேன்.

வெற்றிவேலன் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே,

பயல் விடாதீர்கள்! விட்டால் தண்டப் பொருளைக் கட்டி மீண்டுவிடுவான். பிறகு, முத்தாயியைப் பிடிக்க முடியாது.

என்ன செய்யலாம்.

காவலில் போடுங்கள். கழுதையை!—ஆனால் ஒன்று. நான் இந்த நாய்க்குட்டியிடம் நல்லவன் போல நடந்துகொள்கிறேன். அதாவது நடிக்கிறேன் என்கிறேன்.

பிறகு இருவரும், முத்தன் இருக்குமிடத்திற்கு வருகிறார்கள். வரும்போதே,

தயவு செய்து மன்னித்து—முத்தனை விட்டு விடுங்கள். அவன் ஏழை.

ஓய் வேதாளம்! திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். நீர் இதில் தலையிடக்கூடாது.