இரத்தக் கண்ணீர்
காட்சி 26 · 26 / 61
ஏன் தலையிடக்கூடாது! உங்களுக்குத் தர வேண்டிய நூறு பொன்னைக் கொடுத்து விட்டால்—முத்தன் நீங்கள் என்ன செய்ய முடியும்? என்ன முத்தா! நூறு பொன் தயார்தானே?
தயார்தான். காலையில் கொடுத்துவிடுகிறேன்.
காலையிலா?... அதுவும் சரி! தளபதி அவர்களே! முத்தன் போகலாமல்லவா?
கூடாது. தண்டப் பொன்கள் வந்து சேரும் வரையில் இவன் காவலில் இருக்கவேண்டும். ஏய், யாரங்கே?... இவனைக் காவலில் வையுங்கள் ...
அய்யோ!... பெருமைக்குரிய பிரபு அவர்களே! அவனை விட்டு விடுங்கள். நானே, நாளை காலையில் பொன்களைத் தந்துவிடுகிறேன்.
முடியாது! வெற்றிவேலன் உத்திரவிடுகிறேன். குறுக்கே நிற்காதீர் நீர்!
இப்படித்தான் சொல்லுகிறதா உங்கள் அரசாங்கத்தின் பாசறை நீதி? நன்றுயிருக்கிறது!
வீணே சாகாதே! விலங்கிடுங்கள் அவனுக்கு.
முத்தன் கைகளில் விலங்கு மாட்டப்படுகிறது. வேதாளம், தன் முகத்தை மூடிக் கொண்டு வெளித்திரும்புகிறான். அவன் போகும் போது முத்தன் வருத்தமுடன் பார்த்துக் கொண்டே,
“முத்தா! முன் ஜென்மக் கர்மவினை—முடி சூடிய மன்னனையும் விடாது!—பயப்படாதே, நானிருக்கிறேன்”
என்று கூறிவிட்டுப் போகிறான். முத்தன், தென்றல் மாளிகையின் ஒரு அறையில் அடைக்கப்பட்டு வெளியே காவல் போடப்படுகிறது.
★
[திருசங்கு வீடு
முத்தாயி — சுமதி, இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நேரம் அவர் போய் சொல்லியிருப்பார்; படையிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று!
அவர் சொல்லாவிட்டாலும் உன்னுடைய சுந்தர வதனம், அவரை சொல்லவைத்திருக்குமே!
ஆரம்பித்துவிட்டாயம்மா! அப்பா வரும் நேரமாகிவிட்டது!... இந்தா சுமதி, ஜாக்கிரதை.
[நூறு பொன் கொண்ட பையை அவளிடம் கொடுக்கிறாள்]
காலையில் அவரிடம் சேர்த்துவிடு! அவர் எங்கேயிருக்கிறார் தெரியுமல்லவா?
தெரியும்.
எங்கே?
உன் இருதயத்தில்—
விளையாடாதே சுமதி — அஞ்சல் மண்ணில் தான் அவர் இருப்பார். அவர் இல்லாவிட்டாலும் வேதாளத்திடம் கொடுத்து, அவரிடம் கொடுத்து விடச் சொல்லு!...
