இரத்தக் கண்ணீர்
காட்சி 24 · 24 / 61
என்று தின்பண்டங்களை அவன் வாயில் திணிக்கிறாள். அப்போது சுமதியின் பலத்த குரல்,
“முத்தாயி! ஆயிரம் தடவை குளித்துவிட்டேன். ஆற்றிலே தண்ணீரும் அற்றுவிட்டது. ஓடிவா சீக்கிரம்!”
“இதோ வந்துவிட்டேன்”
அவசர அவசரமாக முத்தன் வாயிலே தின்பண்டங்களை வைத்து அமுக்கி, அவனைத் திணற அடித்து விட்டு முத்தாயி—குடத்தை எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் ஓடுகிறாள். ஓடும் போதே;
“நாளை, பொன்னுடன் சுமதியை அனுப்புகிறேன். விலக, மறந்து விடாதீர்கள்”
முத்தன் வாய் நிறைய உணவு இருப்பதால், பதில் சொல்ல முடியாமல் தலையை ஆட்டுகிறான். முத்தாயி அவனைத் திரும்பத்திரும்பிப் பார்த்துக் கொண்டே போய், சுமதியின் மீது முட்டிக் கொள்கிறாள். சுமதி இன்னும் ஆற்றிலே இறங்கவே இல்லை!—
இருவரும் மகிழ்ச்சி பொங்கிட ஆற்றில் நீராடத் துவங்குகிறார்கள்.
★
[தென்றல் மாளிகை
வெற்றிவேலனும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் சந்தேகப்பட்டது மிகவும் சரிதான்! என்ன இருந்தாலும் ஒரு நாட்டுத் தளபதி அல்லவா? அவன் கையொப்பப்படும்போது ‘முத்தாயி’ என்று தவறு எழுதியவன் என்கிறீர்களே, அது தவறுதல் அல்ல—அப்படி ஒரு தெய்வம் இருப்பது உண்மை.
பார்த்தீரா? எனக்குத் தெரியும் அப்போதே! முத்தாயி என்பவளைப் பற்றி இன்னும் ஏதாவது விபரம் உண்டா? என் வேதாளம்—இருவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமல்லவா?
இருக்கலாம், அவள் அரண்மனைக் காப்பாளர் தலைவன் திருசங்குவின் மகள்.
தொடர்பு இருக்கிற அளவுக்கு துடியிடையுடைய அழகியோ அவள்?
அழகுதான்—நல்ல அழகு.
சந்தனச் சேரியிலே நாம் தங்கியிருக்கும் போது இப்படித்தான் ஒரு அழகியை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தான் ஒரு அந்தரங்க நண்பன்.
அப்படியா?
நண்பனாயிருந்தாலும், அந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவனுக்கு இருபது பொன் பரிசளித்தேன்.
ஓஹோ!
முடியுமானால் முத்தாயியை ஒரு முறை சந்திக்க முயற்சிப்போம்—என்ன வேதாளம்?
அதைத்தான் நானும் யோசிக்கத் தொடங்கி விட்டேன்.
சபாஷ்! வேதாளம்—குறிப்பறிந்து செயல் புரிவதில் உமக்கு நிகர் நீதான்!
அப்போது அங்கே முத்தன் வருகிறான் அவனைக் கண்ட வெற்றிவேலன் பேச்சை நிறுத்தி,
