இரத்தக் கண்ணீர்
காட்சி 21 · 21 / 61
உம்—பயப்படாமல் போடு!
★
[ஆற்றங்கரையின் சோலையோரம்
முத்தாயியும், அவளது தோழி சுமதியும் தண்ணீர்க் குடத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். முத்தாயியின் கையில் ஒரு பொட்டலம் இருக்கிறது.
பாவம், இரண்டு மூன்று நாட்களாகக் காதலனைக் காணாமல் கண்கள் பூத்தே போயிருக்கும். இல்லையா முத்தாயி!
சுமதி, போதும்—ஆரம்பித்துவிடாதே
ஏன், சொல்லச் சொல்ல மிகவும் வேதனையா இருக்கிறதோ.
அது எத்தகைய வேதனை என்பதை நீ அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
ஆண்டவனே! இந்தமாதிரி அனுபவங்கள் எனக்கு வரவேண்டாம்.
ஆண்டவனுக்கே வந்திருக்கிறதடி!
என்ன சொன்னாய்!!
கதைகளில்!
அதுதானே பார்த்தேன்—கஷ்டம் வந்தவுடன் கடவுள் நினைத்துவிட்டாயோ என்று! காதலனுக் கேற்ற காதலியல்லவா நீ!
சுமதி! சுமதி! அவர் அதோ வருகிறார்—நீ ஓடிவிடு!
வரட்டுமே—எனக்கொன்றும் வெட்கமில்லை.
எங்களுக்கிருக்குமடி—போய்விடு!
சரி போகிறேன் முத்தாயி! நான் குளித்து முடிவு தற்குள் வந்துவிடுவாயல்லவா?
வரும் வரையில் குளித்துக்கொண்டிரேன்—வெல்லத்தாலா செய்திருக்கிறது உன் உடம்பு—தண்ணீரில் கரைந்துவிட!
என் உடம்பு வெல்லமில்லை—இப்போது வந்து வர்ணிப்பார்—கற்கண்டே, தேனே, காய்ச்சிய பாகே! என்றெல்லாம்—அப்போது எண்ணிப்பார்—யாருடைய உடம்பு வெல்லத்தின் வார்ப்படம் என்று!
வாயாடி! சுமதி ... நான் உன்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தேன் என்றால் .....
விழலுக்கு நீர் இறைக்காதே முத்தாயி!... அதோ வருகிறார்—பேசு... பேசு... பேசிக்கொண்டேயிரு!... ஆனால் நான் மாத்திரம் ஆற்றோடு போய்விட்டேன் என்று எண்ணிவிடாதே. சீக்கிரம் வா!
சுமதி, சிரித்துக்கொண்டே ஆற்றுக்குப் போய்விடுகிறாள்.
முத்தாயி, முத்தனுக்கு நேராகப் போகாமல் ஒரு மலர்ச் செடிப் பக்கம் மறைந்து ஒரு மலரை எடுத்து அவன் மீது வீசுகிறாள். அவன் அதைப் பிடித்து, கசக்கி எறிந்தபடி வருத்தமுடன் உட்காருகிறான். முத்தாயி அவனிடம் சென்று,
