உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 20 · 20 / 61

பைத்தியக்காரா! நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு ஒரு கவலையும் இருக்காது.

செத்துவிடலாம் என்கிறீரா?

இல்லையப்பா இல்லை.

சாவு ஒன்றுதானய்யா; உலகத்தில் ஏழைகள் அழைத்ததும் ஓடிவரக்கூடியது.

முத்தா! பொருளுக்குப் பொருள். பதவிக்குப் பதவி, பார்க்கிறவன் பயப்படுவான். படையிலே சேர்ந்துவிடு.

படையில்!??

பயப்படாதே—நான் சேர்ந்துவிடுகிறேன். சிற்றரசு விஷயத்தில் தலையிட பாளையக்காரருக்கு அதிகாரமில்லை. ஆகவே அவரால் தடுக்கவும் முடியாது. என்ன சொல்லுகிறாய்?... யோசி!

[உள்ளே போகிறான்]

[தனக்குள்]

படைவீரன்!...

ஆம். முத்தாயி! உன்னை மறக்க சரியான வழி!... சரியான வழி! என்னால் உன் தந்தை பிணமாக வேண்டியதில்லை; நீயும் தரித்திர லட்சுமியாய் மாற வேண்டியதில்லை. முத்தாயி—நீ இளவரசன் சுகதேவின் மனைவி! நான் போர்வீரன்! நான் உன்னைக் கெடுக்கவேண்டாம்!... நான் போர்வீரன்! வேங்கை புரத்துப் படையிலே ஒருவீரன்! பழுதூரை அடிமையாக்கியிருக்கும் சிற்றரசன் சேனையிலே ஒருவீரன் நான்!—அவமானந்தான்! ஆனாலும் உன்னை மறக்க வேறுவழி?... இல்லை, இல்லவே இல்லை.

ஆகையால் நான் போர்வீரன்! போர்வீரன்!

★

[தென்றல் மாளிகை.

வெற்றிவேலன், வேதாளம் முன்னிலையில் முத்தன், படையில் பெயரைப் பதிவு செய்கிறான்.

பெயர்?

முத்தன்.

தகப்பனார் பெயர்?

முத்தன் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறான்.

அது ஒன்றுக் தேவையில்லை.

ஓகோ!... சரி. தாயார் பெயராவது தெரியுமா?

தாயார் காவேரி—இறந்துவிட்டார்கள்.

சரி—கையொப்பமிடு.

ஓலைபோன்றில் முத்தன் கையொப்பமிடுகிறான். அப்போது தன் காதலியின் நினைவில், ‘முத்’ என்று எழுதியபிறகு, “தாயி” என்று எழுதி—‘முத்தாயி’ என்று எழுதிவிடுகிறான். பிறகு திருத்தி, முத்தன் என்று எழுதுகிறான்.