இரத்தக் கண்ணீர்
காட்சி 19 · 19 / 61
சபாஷ்! சாமர்த்தியமான பேச்சுக்காரன். சைன்யத்திலே சரியான புகழ் இருக்கிறது இவனுக்கு!
இன்னொருவனைக் காட்டி, அவன் தலையைத் தடவியபடி,
தம்பிக்கு நாறு அடி விழுந்தாலும் நொறுங்காது—தலைக்கனம் அதிகம்!
அப்ப, யுத்த மந்திரியார்க்கூட வரலாம்.
ஆமா ஆமாம்!... சரி! இப்போது உங்களையெல்லாம் படையில் சேர்த்தாகி விட்டது. நீங்களும் கையொப்பம் செய்து விட்டீர்கள். சேர்ந்தவர்கள் யாராவது நாளைக்கு விலக வேண்டுமென்று நினைத்தால்—நூறுபொன் தண்டம், செலுத்த வேண்டும்.
நாங்க, எதற்கு விலகப் போகிறோம்.
சந்தோஷம், நீங்கள் எல்லாம் இப்போது போகலாம். விரைவில் வேங்கையூரம் போக வேண்டியிருக்கும். தயாராயிருங்கள்.
எல்லோரும் தளபதியை வணங்கிவிட்டுப் போகிறார்கள். வெற்றிவேலன், வேதாளத்தைப் பார்த்து—
வேதாளம்! இன்று படையில் பத்து பேரை சேர்த்திருக்கிறீர். இல்லையா!
ஆமாம்.
இந்தாரும். [பொன் நாணயங்களைத் தருகிறான்]
வேதாளம் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு,
பொன் இருக்கட்டும் பொன்! உங்கள் பூரண தயவு இருந்தால் போதும். பிறகு... நான் வரட்டுமா.
சரி. போய்வாரும்—நன்றி!
தென்றல் மாளிகையின் வாயிற்புறத்திலே வெளியே வந்து கொண்டிருக்கும் வேதாளம், தனக்குள்;
லட்சுமிதேவி வர ஆரம்பித்து விட்டாள் என்னிடம்! வேதாளம்—இந்தப் பாதையிலேயே வேகமாக முன்னேறு! பொருள் சம்பாதிக்க உலகத்திலே எவ்வளவோ பொருத்தமான வழிகள்!
இனிப்பான பேச்சு ... அதிலே ஏமாறும் இளிச்ச வாயர்கள் ... இந்த இரண்டுக்குமிடையிலே என் போன்றவர்களுக்கு வாய்ப்பு!
★
[முத்தனின் அறை
ஆமாம்—முத்தா! இப்படி எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடப்பாய்?
உணவு கிடைக்கும் வரையிலும்.
நான் சொல்வதைக் கேள். பாளையக்காரர் உனக்கு எங்கேயும் வேலை தரக்கூடாதென்று உத்திரவு போட்டுவிட்டார். நீயோ ஆள் வாட்ட சாட்டமாய் இருக்கிறாய். தேகத்திலே நல்ல வலிமை இருக்கிறது......
பாளையக்காரரை அடித்து நொறுக்கி விடலாம், இல்லையா?
