இரத்தக் கண்ணீர்
காட்சி 17 · 17 / 61
போகிறேன்—ஆனால் சாமியாரே! நினைவிருக்கட்டும்; பொய் கொஞ்சம் கொஞ்சமாகப் போதாகி மலரும்! ஆனால் உண்மை திடீரென வெடித்துவிடும்! ஹ ஹ ஹா வருகிறேன்.
பூபதி போகிறார்—சாமியார் பெருமூச்சு விட்டு பீடத்தில் உட்காருகிறார்.
★
[அருசல் மண்
அருசல் மண்ணின் அலுவலகம் பூட்டப்பட்டிருக்கிறது. அதன் திண்ணைப் புறமாக உள்ள அறையில் முத்தன் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவன் உள்ளத்தில் ஊடுறுவிப் பாய்ந்த வண்ணமிருக்கின்றன போலும்!
“அடிமைப் பழுதியிலே வீசியெறியப்பட்ட பழுதூர்! அந்தப் பழுதூருக்கு ஒரு பாளையக்காரன்—ஊரைக் கோட்டைவிட்டவன் ... அந்த அடிமைத் தலைவனுக்கு சில அதிகாரம். அந்த அதிகாரத்திற்கு ஆணவ முத்திரை. உடலே ஓடாகத் தேய்த்து உழைத்திருக்கிறாள், என் அம்மா—அந்த அரண்மனைக்கு! அதற்கு ஒரு நன்றி—ஒரு விசுவாசம்! நன்றி காட்டாவிட்டாலும்—நன்மை செய்ய மனமில்லாவிட்டாலும்—நாச வேலைகளில் ஈடுபடாமலாவது இருக்கக் கூடாதா? அவர்களிடமும் வேலை கிடையாதாம்—அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலும் வேலை தரக்கூடாதாம்.
அந்த அரண்மனையிலே நான் ஒரு அடிமை! இல்லை—இப்போது அடிமையில்லை! ஆணவ வால் வகையற்றுப் போனவன். உலகில் பிறந்தவர்கள் எல்லாம் பழுதாரில்தானே வாழுகிறார்கள். வேறு இடமே கிடையாதா—வயிறு வளர்க்க! வழிதேட! ஆனால் உலகை விட்டுச் சிறப்புடைய என் முத்தாயி பழுதாரில்தானே வாழ்கிறாள்—அவளை விட்டு நான் எங்கே போவேன்!”
முத்தன் தனக்குள் பேசிக்கொண்டிருந்தான். “முத்தா!” என்று ஒரு குரல் கேட்கிறது. பார்க்கிறான்; திருசங்கு எதிரே நிற்கிறான்.
பயப்படாதே முத்தா!
பயமென்ன, அரண்மனையிலே ஏதாவது புதிய ஆணை பிறந்திருக்கும்.
அரண்மனைக்கும் நான் வந்ததற்கும் தொடர்பே இல்லை!
முத்தா! அன்றைக்கு சோலையில் நடந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். முத்தாயியைப் பற்றி சுகதேவன் தவறாக நினைக்கக் கூடாதென்றுதான் உன்மேல் மட்டும் பழியைப் போட்டேன். ஆண் களுக்கு சகஜம்—உலகம் ஒப்பிவிடும். பெண் கட்டுக் கெட்ட பெயர் வந்தால் அழியாது பார்!
நீங்கள் எதுபற்றி பேச வந்திருக்கிறீர்கள்?
உனக்கும் என் மகனுக்கும் உண்மையான அன்பு இருப்பது எனக்குத் தெரியும்.
இப்போதாவது தெரிந்ததே!
கேள் முத்தா! நீதான் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் சொல்வதற்கு நீ சரி என்று சொல்லவா?
என்ன சொல்கிறீர்கள்?
உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று கூறிவிட்டாள் முத்தாயி.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே!
நான் உன்னிடம் வந்திருப்பது .....
ஓரளவுக்குப் புரிகிறது.
கல்யாணம் செய்துகொள்ள நீங்கள் இருவரும் முடிவு செய்துவிட்டது எனக்குத் தெரியும்.
இருந்தாலும் என் சம்மதத்தைக் கேட்கிறீர்கள்; ஒருமுறைக்கு.
முத்தா! என் மகள் எப்படி வாழவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் தெரியுமா?
