இரத்தக் கண்ணீர்
காட்சி 15 · 15 / 61
“என்னடா தேவை என்று கேட்டாய்?”
“வேலையிலிருந்து விலக்கிவிடு” என்று கேட்கலா மென்றிருந்தேன் — கேட்காமலே — நீ நினைத்ததைத் தருகிறீர்கள்.”
“சரி போடா, வேலையில்லை என்றதும் — பழம் புளிக்குமென்றிருன்.”
“பாவம்—பழம் நழுவிப் பாலில் விழுந்ததும்—அதை வேண்டாமென்று இந்த முத்தன் வெறுத்துவிட்டு வந்ததும் உனக்கு எப்படித் தெரியும்? வருகிறேன். வணக்கம்.”
★
[திருசங்கு வீடு.
என் மானம், மரியாதை, மதிப்பு எல்லாம் மண்ணைப் போய்விடும் வெளியிலே தெரிந்தால்! முத்தாயி—நீ செய்த காரியத்தை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
மன்னிக்க வேண்டாம் அப்பா—மனதார ஆசீர்வதித்துவிடுங்கள்.
என்னையா? என்னையா ஆமோதிக்கச் சொல்கிறாய்! கண்ணைத் திறந்துகொண்டு கள்ளிக் காட்டிலே நடந்துபோவதை எந்த அறிவு கெட்டவனும் ஒப்புக் கொள்ளமாட்டான்.
கள்ளிக்காடல்ல அப்பா! காதற் சோலை!
வாயை மூடு! காதல் கீதல் எல்லாம் ஏட்டிலே இருக்க வேண்டிய எழுத்து! மடப் பெண்ணே, திருச்சிர நாராயணனிடமா காதல்! பால் வேண்டுமென்று பாம்புப் புற்றிலே கைவிடுவார் களா யாராவது?
அப்பா! என் சுகமே உங்கள் சுகம்—என் சந்தோஷமே—உங்கள் சந்தோஷம் என்பீர்களே; நீங்களா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். வாழ்வுக் கேற்றவன் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை கிடையாதா?
உன் வாழ்வுக் கேற்றவன்தான் மாட மாளிகை கூட கோபுரத்தோடு தோன்றுகிறேன். இரும்புப் பெட்டியே உன்னை நாடி வருகிறது! நீ திருவோட்டைத் தேடி ஓடுகிறாய்!
அப்பா, சுதந்திரமாக வளர்ந்த என்னை—பாளையக்காரரின் சொத்துக்களைப் பிடிக்கும் சூதாட்டக் காயாக ஆக்கிவிட்டார்கள்.
போதும் முத்தாயி போதும்! நீ அந்த அன்னக்காவடிக்கு மாலையிட என் உயிர் உள்ளவரை சம்மதிக்கமாட்டேன். நீ மறுத்தால்—என் பிரேத ஊர்வலம் போன பிறகுதான் உங்கள் கல்யாண ஊர்வலம் போகமுடியும். ஆமாம், ஞாபகம் வைத்துக்கொள்.
★
[மடாலயம்
ஊர்மக்கள் கூடியிருக்கிறார்கள். தளபதி வெற்றிவேலன், மருத்துவர் பூபதி, வேதாளம், மற்றும் பலர் இருக்கிறார்கள். மாயைகநாத ஸ்வாமிகளின் சொற்பொழிவு நடைபெறுகிறது.
அன்பர்களே! இதுவரை தளபதி வெற்றி வேலன் படையின் பயன்கள் பற்றி அறியாதோர் உரை நிகழ்த்தினார். அவர் சொற்களிலே சுவையும்—சூடும் நிறைந்து இறைந்து கிடந்தது. வேங்கை பாய்ந்து அரசு காக்கும் வீரர் முகாமிலே வெற்றி தோளுடையோர் குவியவேண்டும் என அழைத்தார் வெற்றிவேலன். நானும் அதைத்தான் சொல்லப் போகிறேன்.
பகவான் பரந்தாமன், பார்த்திபனே பாரதப் போரில் கலந்துகொள் என்று சொல்லியிருக்கிறார். போர்கூடாது—அது ஒரு வெறி—என்றெல்லாம் போதனை செய்கிறார்களே இன்று. அவர்கள் பகவத்கீதையைப் படிக்கட்டும். போரின் அவசியம்பற்றி அந்தப் புல்லாங்குழலோதி எவ்வளவு கூறியிருக்கிறார் என்பது புலனாகும். கூறியது மட்டுமா—அந்த தின தயாளனே தேர்ச்சாரதியாகவும் அமர்ந்திருக்கிறார். சுப்பிரமணியக் கடவுள் யுத்தகளத்திலேதான் ரத்த வெறிகொண்ட ராக்ஷதர்களைக் கொன்று குவித்தார்.
பெண்மக்களும் போரில் ஈடுபட்டனர் புராண காலத்திலே! பாமா படைக்கோலம் பூண்டு நரகாசுரனைக் கொன்றிருக்கிறாள். ஆகவே தெய்வங்களுக்கும் உடன்பாடுடையதுதான் போர் புரிதல் என்னும் திருத்தொண்டு. சிவன் கை சூலமும்—சிவகுமாரனின் வேலும்—விஷ்ணுவின் சக்கரமும்—எதைக் குறிக்கின்றன—சமாதானத்தையா? சமரையா? ஆகவே அன்பர்களே! போர்வீரர்களாக மாறிடுங்கள்!
சண்டைக்குப் போவோர் அத்தனைபேரும் மாண்டுவிடுகிறார்கள் என்பதில்லை. விதி இருப்பவர் எங்கும் எப்படியும் மாள்வர். வாள் பிடிப்பதால் மட்டுமல்ல, வாழைப்பழத்தோல் சறுக்கி விழுந்து வாழ்வு முடிந்தோர் பலருண்டு.
அப்படியே இறந்திடினும் யுத்தத்தில் இறந்தால் வீரசொர்க்கம் விண்ணிலே காத்திருக்கிறது. வீரனுக்கு மண்ணில் மட்டுமல்ல—விண்ணிலும் புகழ்தான். வளைந்துபோன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள்—அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள்! வேலையில்லாதவருக்கு வேலை. வாழ்வற்றவருக்கு வாழ்வு. வீரமுள்ளவருக்கு விருந்து. நாடுகாக்கும் நல்லவர்களே! இன்றே சேருங்கள்! ஆண்டவன் துணையிருப்பான்! திருச்சிற்றம்பலம். தெய்வமே துணையென திண்டோள் தட்டிக் கிளம்புங்கள்!
திருச்சிற்றம்பலம்—அறநெறி வாழ்க!
திருச்சிற்றம்பலம்.
