உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 82 · 84 / 102

ஆடை நெகிழ்ந்தவுடன் அவிழ்த்துடுத்த முனைந்தவள்; ஒடை நறுமலர்ப் படர்க்கொடி மறைவில் சென்றாள் கணவனாக நாளை வரப் போகிறான் எனினும் - அவன் காணக் கூடாதென்று நாணம் தடுத்திட படர்க்கொடி மறைவில் அந்தச் சுடர்க்கொடி பட்டாடை முழுதும் அவிழ்த்துத் திருத்தி அடிவயிற்றின் பாகம் ஆடைதனைக் கொசுவி நுழைக்க அகங்கையால் அல்குல் வரை தடவிச் சரி செய்தாள் அப்போது வேகமாய்த் துள்ளி அடித்த சூறைக்காற்று அவள் மேலாடையைப் பறித்துக் கொள்ள - அவளோ இரு முழங்கைகள் குறுக்காக மார்பில் ஒடுங்க ஈரைந்து பத்து விரல்களும் இரு தோளில் பதிந்திட திருடிய தாமரை மொட்டிரண்டை குளக் காவலர்க்குத் தெரியாமல் மறைப்பது போல் தனமிரண்டை மறைத்துக்கொண்டாள் இவ்வாறு இல்லாத வலிமை காட்டல் உட்பட இவை நான்கும் மூன்றாம் நிலை மெய்ப்பாடுகளாம்!

இவர்கள் தனித்து சந்தித்த இடம் விட்டுப் பெயர்ந்து ஈருடலால் பிரிந்தனர் இதயம் மட்டும் பிரியாமல்! “அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல், இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 15) தைவரல் = தடவுதல் இல்வலி = இல்லாத வலிமை