தொல்காப்பியப் பூங்கா
பகுதி 78 · 80 / 102
குடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில், வன்முறை, அடக்குமுறை வாயிலாக; குடிமக்களின் தலையறுத்தல் - கைகால்களை வெட்டுதல் போன்ற வெறியாட்டங்களையும், எதிர்ப்போர் எவராயினும் அவர் பக்கமிருக்கும் நியாயம் உணராமல் அவர்களின் பெண்டு பிள்ளைகளுக்குக் கேடிழைக்கும் கொடுஞ் செயல்களையும், அலையெனப்படும் அடித்தல் உதைத்தல் போன்ற அரசு ஆதரவுடன் நடக்கும் அநீதிகளையும், கேட்பாரற்ற முறையில் தடுப்பாரற்ற நிலையில் நடக்கும் கொலைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தணலில் இட்ட புழுக்களாய்த் துடிக்கும் குடிமக்கள் புலிகளாக மாறுவதுதான் “வெகுளி” யின் உச்சமாகும். “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 10)
