தொல்காப்பியப் பூங்கா
பகுதி 55 · 57 / 102
மெல்லியலார் என மதிப்பளித்துப் பரிவு காட்டி மகளிரைப் பாராட்டி வாழ்ந்த காலம் என்பதாலே; ஆபத்தான இடங்களிலே அவரை அணுகிடச் செய்யாது அமர்க்களத்துக்கான வெளிப்புறப் பணிகளில் மட்டும் அன்று, பாசறைகளில் பாவையர் தொண்டு தொடர்ந்ததாம்! இப்போது பண்பாடு மாற்றமில்லை; பழைய கால ஏற்பாடு மட்டுமே மாற்றம்! “எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 34) “புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 35)
