உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 12
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 12 · 12 / 104

ஏருழவன், பொற்கொல்லன், ஏற்றமிகு ஓவியன், இசைபட வாழும் கவிஞன், நெசவுதனைத் தொழிலாய்க் கொண்டோன் இவரெல்லாம் இனிய கற்பனையால், இயற்கையீன்ற பூக்குழந்தைகளைத் தமிழ்மொழியால் கொஞ்சுகின்றார்!

இதோ ஒரு வீரன் எதிரிகளைக் களம் கண்டு இட்ட பணி முடித்து வெற்றியுடன் திரும்பி; இல்லத்தில் காத்திருக்கும் இனிய நறுந்தேனை இடையறாது பருகுதற்கு இடிக்குமுன் வெட்டுகின்ற மின்னலது வேகத்தில் இரதத்தைச் செலுத்த ஆணையிடுகின்றான் பாகனுக்கு! ஓடோடி வருகின்ற அவ்வீரன் உள்ளத்தில் குடியிருக்கும் உயிரனையாள் வாழ்கின்ற தன் ஊரின் சிறப்புதனை நினைத்து மகிழ்கின்றான். வாரி இறைத்தது போல் அவ்வூரின் வழியெங்கும் பூத்துக் கிடக்கும் வண்ண வண்ண மலர்கள் பற்றி அவன் எண்ணம் பறக்கிறது சிறகடித்து!

\* இருமருங்கும் நிறைந்து மலர்ந்துள்ள இலுப்பைப் பூக்கள் எதிர்வந்து; வில்லேந்தி வெற்றி விளைக்கின்ற

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

வீரர்தம் தோள்களிலே கூர் மழுங்காதிருக்க குப்பிகளிட்டு மூடிய கூடுகளில் நிறைந்துள்ள அம்புகளின் நுனியைப் போல் செப்புத்தகடனைய சிவந்த தளிருடனே செழிப்பு தவழ அரும்பி நின்று வண்டுகள் தேன்பருக வந்து கூடிக் கிண்டிவிட்ட காரணத்தால் இதழ்கள் விரிந்து காற்றலையால் தாக்குண்டு காம்பு கழன்று கடுமையாய்ப் பெய்த ஆலங்கட்டி மழை போல பவளமென சிவந்துயர்ந்த பாதையெங்கும், பரவிக் கிடக்கும் காட்சி கண்டால்; அது களத்தில் கை, கால், தலைகள் அறுபட்ட காரணத்தால் வழிந்தோடும் குருதியிலே கொழுப்புத் துகள்கள் ஆங்காங்கு குவிந்து மிதப்பது போல் தோன்றுதம்மா!''

ஏர் உழவன், பொற்கொல்லன், நெசவாளி, ஓவியன், இயற்கைதனைப் பாடுகின்ற இளம் நெஞ்சக் கவிஞன் இவரெல்லாம் மலர்கள் பற்றி செய்திட்ட கற்பனைக்கும் இந்த மாவீரன்; இலுப்பைப்பூ சிதறியுள்ள காட்சியினைக் காண்பதற்கும்; இருக்கின்ற தனிச் சிறப்பென்ன; புரிகின்றதா? இவன், இனிய காதலியை நாடி வரும்போது கூட களத்தில் பெருகிய ரத்தமும் நிணமும்தான் - அகக் கண்களின் முன்னே அரிய காட்சியாகி அந்தச் சிந்தனையில் வருகின்றான் என்று - இந்த அகப்பாட்டை இயற்றியுள்ள கல்லாடனார், மறைமுகமாய் அந்த ஊரின் பெருமை கூறுவார் போல் மாவீரனின் மனோநிலையை வெளிக்காட்டும் வித்தகத்தை என்னென்று புகழ்வதென எனக்கொன்றும் புரியவில்லை!

இப்படி எத்தனையோ புதையல்கள் இருக்குதம்மா; சங்கத் தமிழ் இலக்கியத்தில்!

*

\* ''கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை அகந்தோறு, இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்

உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித் துப்பின் அன்ன செங்கோட்டு இயவின், நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் மத்த நண்ணிய அங்குடிச் சீறூர்''

*

(அகநானூறு : பாடல் : 9 பாடியவர் : கல்லாடனார்)

பொருள் விளக்கம் :

புழுகு = அம்பின் நுனிக்குப்பி. இருப்பை = இலுப்பை மரம். செங்குழை = சிவந்த தளிர். உழுதுகாண் துளையவாகி = வண்டுகளால் கிண்டப்பட்டு இதழ் விரிந்து. காலொடு = காற்றால் தாக்கப்பட்டு. ஆர் கழல்பு = காம்பினின்றும் கழன்று. ஆலி வானிற் பாறி = ஆலங்கட்டி மழை போல் சிதறி. துப்பு = பவளம். நெய்த்தோர் = இரத்தம். நிணத்தின் பரிக்கும் = கொழுப்புத் துகள் போல் மிகுதியாக விரவிக் கிடக்கும்.

*

நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே!

அரசனது அத்தாணி மண்டபத்தில் அன்றொரு நாள் ஆன்றவிந் தடங்கிய மேலோர் புலவர் அவை கூடிற்றாம்! பல்பொருள் குறித்து விவாதம் எழுவதும் முடிவதும் பலமுறை நடக்கும்; அங்கே பைந்தமிழ் மணக்கும்.

இம்முறையோ அரியதோர் கேள்வி பிறந்தது அவையில் இன்னுயிர்க்கிணை எதுவென்றும் என்புதோல் போர்த்த

உடலுக்கு

இணைதான் எதுவென்றும் இணையிலாப் புலவர் கூட்டம் கணைகளாய்த் தொடுத்திட கருத்துக்கள் மோதின அக்களத்தில் நெல்லும் நீரும் உயிராய் விளங்கிப் பல்லோர் உடலை வளர்த்து நில்லா நெடுஞ்சுவர் உயிரையும் நிலைக்க வைத்திடுமென்றும் நிலமாளும் வேந்தர்க்கும் அதுவே உயிராக விளங்குமென்றும் நீருக்கும் நெல்லுக்குமுள்ள சிறப்பைச் செப்பினர் சிலபுலவர்

முரசு கட்டிலில் படுத்துறங்கி முடிமன்னன் கைகளாலே அரசு மரியாதையாக வெண்சாமரம் வீசப்பெற்ற மோசிகீரனார் எனும்புலவர் முற்றிய விவாதத்துக்கிடையே மாசு மருவிலாக் கருத்தொன்றை வெளியிட்டார்!

“என்னருமைப் புலவர் பெருமக்காள்! இனிய கன்னலெனத் தமிழ் வடித்துத் தருகின்ற பெரியீர்! பொன்னின் நிறம் வாய்ந்த நெல்விளையும் கழனிகளில் புனல்பாய்ந்து விதை முளைத்து, பயிரின் வேர் நனைத்து உழவனது வியர்வையெலாம் அறுவடைக் குவியலாகி உண்பதற்கு வெண்சோறு பொங்குதற்கும்;

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan.

உலையிலிட நீர் வேண்டும்; உண்மையது மறுக்கவில்லை! உடல் வளர உயிர் வாழ நெல்லும் நீரும் தேவையென்பதிலும் மாற்றமில்லை!

சிந்தனைக்கு ஒரு வாதம் வைக்கின்றேன்; சிறிதளவும் நடுமுள் நடுங்காமல் தீர்ப்பளிப்பீர்!

நாடாளும் அரசொன்று இருக்கும்போது - அவ்வரசு; கேடான செயல்களுக்கும் கீழான குணங்களுக்கும்

அடிமையாகி,

நீரும் நெல்லும் இல்லா நிலையில் ஊரும் உலகும் தவித்திடும் வகையில் சீரும் சிறப்பும் இல்லாச் “செங்கோல்” செலுத்திடும் கொடுமை படைத்திடுமானால்