உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 73 · 73 / 300

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது

சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்து விட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!”

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

“சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது, ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது, ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.”

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு, மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன் மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும் மன உறுதியையும் இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப் போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

“எப்படியய்யா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது?” என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்கு, சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்!

“அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்!” என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்

அதிகாரம் - 38 - ஊழ்; பாடல் - 380

அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை; பாடல் - 620

Small centred Valluvar-monument illustration below the chapter/song metadata.

Large colour illustration showing two women in the foreground with a man's face represented in the sun behind them.

‘தன்னைப்போல உளம் கலங்கிய நிலையில் உலகில் எந்தப் பெண்ணும் இருக்கமாட்டாள்’ என்று எண்ணியவாறு அந்த அழகிய மங்கை கண்ணீர் உகுத்தாள். மாவிலையில் தேங்கியிருந்து வடிந்த பனித்துளிகள் மாங்கனிகளின் மீது ஊர்ந்து செல்வதைப்போல், அந்தக் கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.

‘இதயத்தை விட்டுப் பிரியாத துடிப்பைப்போல் என்னை விட்டுப் பிரியாமல் இருப்பேன்’ என்றார். இதோ பிரிந்துவிட்டார். ஆயினும் என் இதயம் இன்னும் நிற்காமல் இருக்கிறதே’யென்று பெருமூச்சு விட்டாள்.

உன் உயிர் மூச்சு நான்தான் என்றார். இதோ அந்த மூச்சு என்னைவிட்டு விலகிச் சென்றுங்கூட நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே! காலை மலர்ந்ததும் முத்தம் பொழிந்துவிட்டு, நாளை வருகிறேன் என்று அந்தக் காலை பிரிந்து விட்டான். நாளைக் காலைவரை பொறுத்திருக்க இயலாமல் அந்தப் பாவைச் சிரிப்பழகி பரிதவித்தாள்.